காதலும் மோதலும் கலந்த குடும்ப கதை , "எத்தனை வருசமா சென்னையில இருக்க?" என்று கேட்டான். காதில் விழாதது போல் அவள் அமர்ந்து இருக்க போனை பறிக்க முயற்சித்தான். அவனை திரும்பி முறைத்தவள் " அஞ்சு வருசம்" என்றாள். அவன் புருவம் மேல் நோக்கி உயர்ந்தது. "அவ்வளவு சார்ப் பா நீ?" என்று கேட்டான். அவனது கேள்வியில் உள்ளுக்குள் கனன்ற போதும் வெளியில் சாதாரணமாக முகத்தை வைத்து இருந்தாள். "உனக்குள்ள எப்படி இவ்வளவு மூளை வந்துச்சு?" என்று மீண்டும் கேட்டான். " சில பல குள்ளநரிங்க கத்து கொடுத்த பாடம்" என்று பட்டென கூறி விட்டாள். அவன் முகம் கோபத்தில் சிவக்க அவள் திரும்பி கூட பார்க்கவில்லை. அதற்கு மேல் அவன் வாயை திறக்கவில்லை. அவளும் பேசவில்லை.