சிறிது தூரம் ஓடிய மதுவந்தி மூச்சு வாங்க ஓரிடத்தில் நின்றதும் மித்ரேஷ் அவள் அருகில் வந்தவன், "சாரிடி..." என்றவனை கண்ணீர் மல்க ஏறிட்டவள், "உண்மையாவா மித்து...?" அவளின் கண்ணீரில் அவன் கரைந்து தான் போனான்... "ச்சீ லூசு... உன்னை விட்டுட்டு வேறு பொண்ணா... ச்சீச்சீ..." அருவருப்பாய் முகத்தை சுளித்தவனை கண்டு முகம் மலர்ந்தவள், "மித்துன்னா என் மித்து தான்... சோ ஸ்வீட்..." என்று அவனது கன்னத்தில் முத்தமிட அவனது கரம் அவளை தன்னோடு வளைத்து கொண்டது... "வீட்டுக்கு போகலாமாடி..." சரசமாய் கேட்டவனை கண்டு முறைத்து பார்த்தவள், "நோ..." என்று மறுத்தவள் அவனது கரத்தை பற்றி கொண்டு மேலே நடக்க ஆரம்பித்தாள்... அவளின் எண்ணம் புரிந்தவனாய் அவளை பின்பற்றி அவனும் நடக்க ஆரம்பித்தான்...