வாழ்க்கையில் நாம் மிகப்பெரிய வெற்றிகளை அடைய சில மந்திர உபாயங்களைக் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும். பிறர் உறங்கும் நேரத்தில் உழைத்திருப்பான் வெற்றியாளன் என்பது அறிஞர் வாக்கு. ஆனால் அந்த உழைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நம் செயல்திறன் முமுமையானதாக இருக்கின்றதா? என்னதான் கஷ்டப்பட்டாலும் வெற்றி கையில் கிட்டாமல் ஆட்டம் காட்டுகின்றதே என்று கவலைப்படுவோருக்கான மந்திர ஃபார்முலாக்கள் 111 இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் வெற்றி உங்கள் கைகளில் இருப்பதைக் காணலாம்.