"ஹே... சூப்பர்..." கைத்தட்டி குதூகலித்தவளை இமைக்காமல் பார்த்தான் அவன்... அவன் செய்யும் சின்னச் சின்ன விசங்களையும் கண்டு குதூகலிக்கும் அவளது காதல் இருக்கிற வரை அவனால் எதையும் சாதிக்க முடியும்... அந்த நம்பிக்கை தான் அவனை இந்தளவுக்கு முன்னேற்றி இருக்கிறது... "சிகரெட் பிடிக்கலையா..." அவள் லைட்டரை கொண்டு வந்து சிகரெட்டை பொருத்த வர... அதை ஊதி அணைத்தவன் சிகரெட்டை கசக்கி குப்பை தொட்டியில் போட்டான்... கேள்வியாய் பார்த்த மனைவியை அணைத்து கொண்டவன், "நான் இப்போ தனியாள் இல்லை... என்னை நம்பி என் மனைவி இருக்கிறாள்..." என்றவன் அடுத்து அவளது வயிற்றில் கை வைத்து, "என் குழந்தை இருக்கு... அவங்களுக்காகவாவது என் ஹெல்த்தை நான் பார்த்துக்க வேண்டாமா..." என்றும் போல் அவனது அன்பில் கரைந்தவள், &quo