'மோப்பக் குழையும் அனிச்சம் - முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து..'என்று சொல்லியிருப்பார்.. இரண்டே வரிகளில் எண்ணற்ற விவரங்களை அறிவுறுத்துபவர் அவர்.. லேசாக முகர்ந்தாலே அனிச்ச மலர் வாடி விடுமாம்.. அத்தகைய நுட்பமான தன்மை கொண்டதாம்.. இந்தப் பூவை நான் பார்த்ததில்லை.. உங்களில் எவரேனும் பார்த்ததுண்டா..? இந்தப் 'பூ' என்னைக் கவர்ந்தது.. அனிச்ச மலரின் மென்மையோடு ஒரு பெண்ணைப் படைத்தேன்.. அம்மலரைச் சுற்றி முள்ளைப் படைத்தேன்.. அவளது குணமறிந்து முள் விலக்கிக் காக்க எவர் வருவார்..?