சீன அரசால் தடை செய்யப்பட்ட புத்தகம் என்ற ஒன்றே ஈர்த்தது. தற்போதைய சீன நிலவரத்தை(கொரோனா கிருமி) ஒட்டி பல கன்றாவி சீன உணவு வகை காணொலி கிடைக்கபெற்றிருக்கும் பலருக்கு, Whatsapp வழியாக. அப்பேர்பட்ட சீனாவே இதனை 1987ல் இக்கதை தொகுப்பை தடைசெய்து, எழுத்தாளரை நாடு கடத்தியிருக்கிறது.
அதற்கு ஏற்றார் போலவே இதிலுள்ள 5 பெருங்கதைகளும் அமைந்திருக்கிறது. திரு.மா ஜியான் தனது திபெத்திய பயணக்குறிப்புகளை வைத்து எழுதப்பட்ட புனைவுக் கதைகள் என்றாலும், உண்மையில் இப்படியெல்லாம் அறுவருக்கதக்க, முழுமுரண்களாலான பிறழ்உறவுகளை கொண்ட நிகழ்வுகள் நடந்திருக்குமா என ஆச்சரியம் கொள்ள வைக்கிறது.
ஆனால், திபெத்தியர்களின் உணவுமுறைகள், விண்ணடக்க நிகழ்வுகள், திபெத்திய பூமி/மலை வளம் என்பதில் புனைவுகள் இருப்பதாக நம்புவதற்கில்லை.
இக்கதைகளை சீனமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு அவரது மனைவியான "ஃப்லோரா ட்ரூ" ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், Stick out your tongue என்ற பெயரில். "எத்திராஜ் அகிலன்" தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.