வாரன் பஃபெட். இவர் உலகில் மூன்றாவது பெரிய பணக்காரர். ஆனால், இவர் மிகவும் எளிமையான ஒரு மனிதர். இவர் ஒரு அமெரிக்கர். இவருக்குத் தொழில்அதிபர், பங்குச்சந்தை முதலீட்டாளர், புத்தக எழுத்தாளர், சமூக சேவை ஆர்வலர் என பல முகங்கள் இருக்கின்றன. பங்குச் சந்தை முதலீட்டில் மிக அதிக லாபம் சம்பாதித்து பணக்காரர் ஆனார். எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை மிகவும் துல்லியமாக அறிந்து, சரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்வதில் திறமைமிக்கவர். உலகின் பணக்காரர்கள் பட்டியல், அதிகாரம் படைத்த மனிதர்கள் பட்டியல் என எந்தப் பட்டியலை எடுத்தாலும், அதில் இவரது பெயர் இல்லாமல் இருக்க முடியாது. பங்குச்சந்தையில் இவரது கருத்துக்கள் மிகவும் புகழ் பெற்றவை.