சாபர்மதி ஆசிரம வாசலில் ஓர் ஏமாற்றுத்தனத்தைச் சந்தித்தேன்.
ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த உலகம்தான் இது. என்றாலும், புனிதமான காந்தி ஆசிரமத்தின் வாசலில் ஒருவர் இப்படியொரு திருட்டுத்தனத்தைச் செய்யலாமா? அதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.
ஆனால், அவர் மெய்யாகவே திருடர்தானா? உண்மையில் கள்ளத்தனம் மண்டியிருப்பது யார் மனத்தில்?
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
என்னுடைய பெரியப்பா ஒரு தீவிர கம்யூனிஸ்ட், எங்கள் சிற்றூரில் எழும் பிரச்சனைகளை தீர்க்க முன்நின்றவர். அவரோடு இளைஞர்கள் சிலர் எப்போதும் அருகே இருப்போம், எதாவுது வேலை சொன்னால் செய்ய. அவரிடம் பிரச்சனையோடு வருபவர்களிடம் அடுத்தவரின் நிலையிலிருந்து யோசியுங்கள் என்று சொல்வார். அதையே எங்களுக்கும் சொல்லி தருவார். ரவுடிகள், ஏமாற்றுகாரர், திருட்டுதனம் செய்பவர் என்று எவர் பிரச்சனையோடு வந்தாலும், நியாயம் எது என்பதை அவர்களின் பக்கம் நின்று யோசிக்க சொல்வார். இதனால் சில வருடங்களுக்கு பிறகு அவர் இறந்த போது ஊரே கூடி மரியாதை செலுத்தியது. இந்த கதை அவரோடு இருந்த பல நினைவுகளை தூண்டியது. ஒரு நல்ல சிறுகதை நம் நினைவு அடுக்குகளை சற்று தூசிதட்டி எடுத்து கண்கலங்க செய்தால் அது அங்கு உச்சம் பெறுகிறது. அருமை! நன்றி!