ஜாங்கிரி சுந்தரம் எனும் நகைச்சுவை கதையில் கோபால்சாமி என்பவன் தன் ஆப்த நண்பன் விரும்பும் யுவதியை பட்டணத்தைச் சேர்ந்த 54 வயதான ஹோட்டல்காரர் ஜாங்கிரி சுந்தரம் (ஜாங்கிரியில் பிரபலமானதால் அந்தப் பெயர்) கலியாண்ம் செய்துகொள்வதாகத் தெரிந்ததும், தன் ஆத்மநண்பனுக்காக பல் வைத்தியர் போல வேடமிட்டு, பல்வலியால் துடிக்கும் ஜாங்கிரி சுந்தரத்தின் கீதம் இருக்கும் பற்களையெல்லாம் கழட்டி விட்டுப் பழி வாங்கும் ஒரு நகைச்சுவைக் கதை. கடைசியில் அந்த ஆப்தநண்பனானவன் தன் பழைய காதலியை மறந்து புதியவளை ஏற்கனவே தெரிந்தெடுத்துவிட்டது என்ற விஷயம் இந்த கோபால்சாமிக்குத் தெரிந்ததும், பழிக்குப் பழியாக அந்த ஜாங்கிரி சுந்தரத்துக்குச் செய்ததை தன் நண்பனுக்குச் செய்யப் போவதாக &
தேவன் அல்லது ஆர். மகாதேவன் பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.
ஜாங்கிரி சுந்தரம் **************** தேவன் எனும் திரு மகாதேவன் அவர்களால் 1930-40 களின் வாக்கில் எழுதப்பட்ட 25 சிறுகதைகளை கொண்ட நூல். அக்காலகட்டத்துகேற்ப நகைச்சுவை கதைகளாக எழுதப்பட்டாலும், தற்காலத்திலும் அதே மாதிரியான கதைமனிதர்களை இன்றும் நாம் காண்பதால் நம்மால் கதைக்களுக்குள் ஒன்றிவிடமுடிகிறது.
கிட்டதட்ட அனைத்து கதைகளுமே முத்தான சிறுகதைகள்...ஒவ்வொரு கதையும் ஒரு புன்சிரிப்பையாவது வரவழைத்துவிடும். சில எதிர்பாராத திருப்பங்களும், முடிவுகளும் உள்ளதாகவும், அதில் சிறு சிறு நகைச்சுவை துணுக்குகள் கலந்ததாகவும் இருக்கிறது. எல்லா கதைகளை பற்றியும் சொல்வதைவிட குறிப்பாக, நமக்கு பிடித்த ஒரு சில கதைகளை பற்றி மட்டுமே இங்கே சொல்கிறோம்.
சொப்பணம் பலிக்குமா- அந்த காலத்திலியே எழுதப்பட்ட inception வகையறா கதை ..அதாவது கனவுக்குள் கனவு கதை.
நம்பகூடாது - பெண்களை வம்புகிழுக்கும்(நல்ல முறையில்) வகையில் பாண்டிசேரியிலிருந்து கடத்தப்படும் பொருள்களுக்கு கப்பம் கட்டிய கதை.
வைத்தியருக்கு மருந்து - கதையாக இல்லாமல், மருத்துவர்களை பற்றிய சிறு சிறு துணுக்கு நகைச்சுவைகளால் ஆனது.
மோட்டார் அகராதி - அக்கால மோட்டார் பாகங்கள், மோட்டார் ஓட்டுபவரின் எண்ணங்கள் வசைகள் போன்னவற்றை ஹாஸ்யத்துடன் சொல்லுகின்ற கதை.
வியாபார தந்திரம் - மார்கெட்டிங் கெட்டிகாரதனங்களை நையாண்டித்தனமாக சொல்லும் கதை.
விச்சுவின் விஷமம்- குறும்புத்தனமான கதையும் அதன் முடிவும் 'அட' எனும் சிரிப்பை வரவழைக்கும்.
தம்பதிகள் விஷயம்- கிழ கணவன் தன் வயோதிக மனைவியின் அன்பை புரிந்து கொள்ள செய்த கதை...ஆனால் இக்கதையின் முடிவில் வரும் அவிழ்க்கப்படும் முடிச்சு நமக்கு ஒரு ஏளனப் புன்னகையை ஏற்படுத்தும்.
அதிகாரம் செல்லுமா- உண்மையில் சிரிப்பை வரவழைக்க கூடிய கதை. அதிகாரமாக பேச கற்றவரிடமே வித்தையை காட்டியவன்.,கடைசிவரை தன் மனைவியிடம் அதிகாரமாக பேச கற்கவில்லையென்பதை சொல்லும் கதை.
ராஜதுரையின் சந்தேகம்- தன் தவறுக்கு பிரயாசித்தம் தேட வலிய சென்று உதவியவனின் கதை.., கதை முடிவோ அவனுக்கு பரிகாச பரிதாபமாக முடிகிறது.
பள்ளிகூட மர்மம் - ஆட்கடத்தலையும் அதனை கண்டுபிடிப்பதையும் ருசிகரமாக சொல்லும் துப்பறியும் கதை.
நாகப்பன்- ஆண்டாண்டு காலமாக மனைவியிடம் திட்டுவாங்கும் ஒரு கணவனின் பரிதாப நிலையை கண்டு, திருட வந்த அவனிடம், திருப்பி அவனிடமே பொருளை விட்டு சென்ற நாகப்பனின் கதை.
பகவதி ஆரூடம் - திருமணத்திற்காக, காணாமலே கடிதத்தின் மூலம் தொடர்பு ஏற்பட்டு, நேரில் சந்தித்த பின்னும் ஒருவரை ஒருவர் வெளிகாட்டிகொள்ளாமல், யாரோவாக இணையும் விதமான தம்பதியரான பஞ்சு-பங்கஜத்தின் கதை.
இப்படி சில கதைகளை சொன்னாலும், மொத்தமாக இப்புத்தகத்தை வாசித்ததாக சொல்லாமல், Roller coaster ride போல சரேலென்று முடிந்தது எனச் சொல்லலாம். அலுப்பு தட்டாத குபீர் பக்கங்கள்.
'பொன்னியின் செல்வன்' எழுத்தாளர் கல்கியுடன் திரு தேவன் அவர்களை ஒப்பிடுகின்றனர். மிகச் சிறிய வயதிலே இயற்கை எய்தியதால் பல இவரது பல படைப்புகளை தவற விட்டிருக்கிறோம்.
சேப்பாயி திருவிடைமருதூர் வழியாக செல்லும்போதெல்லாம் எனக்கு மகாலிங்கமும் மகாதேவன் ஞாபகமும் கட்டாயம் வரும். மகாலிங்கம் அங்கே பெரும் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மகாதேவன் வேறுயாருமில்லை. நமது எழுத்தாளர் தேவன் தான். சொற்ப காலமே இவ்வுலகில் வாழ்ந்த மேதைகளில் தேவனும் ஒருவர். தேவனின் கட்டுரைகள் ஹாஸ்ய புதினங்கள் துப்பறியும் சாம்பு என்று பலருக்குப் பல வழிகளில் தேவனோடு சம்பந்தம் இருக்கலாம். இது நான் சமீபத்தில் படித்த ஜாங்கிரி சுந்தரம் என்ற இருபத்தைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு பற்றிய சிற்றுரை.
ஜாங்கிரி சுந்தரத்தின் ஓட்டல் ஜாங்கிரியினால்தான் இன்னும் சிலர் பட்டணத்தில் உயிரை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் மத்தியான்னம் அவர் ஜாங்கிரியைச் சாப்பிடாவிட்டால் சாயந்திரம் உயிரோடு இருக்கமாட்டேன் என்றும் எழுதிய தேவனின் கைக்கு வைர மோதிரம் மாட்டியிருக்கவேண்டும். அவருடைய பாத்திரப் படைப்புகள் நாம் தினப்படி பார்ப்பவர்களின் பிரதிபலிப்பாக இருப்பது கூடுதல் விசேஷம். பல்வலியஎன்னும் உபத்திரவத்தினால் அவதிப்படும் ஜாங்கிரி சுந்தரத்தை தனது நண்பனுக்காக ஒரு கை.. இல்லை பல்லைப் பதம் பார்க்கிறான் கோபால்சாமி.
இருபத்தைந்து கதைக்கும் விமர்சனம் எழுதுவது ஜெமோவின் நாவல் அளவிற்கு நீண்டுவிடும் அபாயம் இருப்பதால் சில சில இடங்களைத் தொட்டுக்கொண்டு செல்கிறேன். சொப்பனம் பலிக்குமா? கதையில் சொப்பனத்துக்குள் சொப்பனம். ஒரு சந்து ஒரு வீடு ஒரு அறை அவ்வளவுதான். ஆனால் நான்கு பக்கங்களில் வியப்பில் ஆழ்த்தும் கதை.
வைத்தியருக்கு மருந்து என்று ஒரு கதையில் வைத்தியர்களைப் பற்றிய நகைச்சுவைகள் அடங்கியிருக்கிறது. ஒரு வைத்தியர் முத்ன் முறை பார்த்தால் ஐந்து ரூபாய் பீஸும் அடுத்த முறையிலிருந்து ஒரு ரூபாயும் பீஸாக வாங்கிக்கொள்வார் என்று தெரிந்துகொண்ட ஒருவன் ஏற்கனவே அவரிடம் வந்தது போலக் காட்டிக்கொள்ள “நமஸ்காரம் டாக்டர்வாள்! உங்களைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சே” என்றானாம். இப்படிச் சொல்லிக்கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை டேபிளில் வைத்தானாம். இவனது வேலையைத் தெரிந்துகொண்ட டாக்டர் “போன தடவை கொடுத்த மருந்தையே சாப்பிடுங்க” என்று அனுப்பிவிட்டாராம். அபாரமான நகைச்சுவை!
விச்சுவின் விஷமம் என்ற கதையில் ஒரு பொடியன் செய்யும் வேலை எப்படி அவனை சைக்கிளில் அழைத்துக்கொண்டு வரும் மாமாவிற்கு நன்மையாக முடிகிறது என்பதை நகைச்சுவை ததும்ப சொல்கிறார்.
பழைய நினைவுகள் என்ற கதை நாஸ்டால்ஜியா என்று எழுதும் என்னைப் போன்றவர்களை வைத்து பகடி செய்தது போலிருந்தது. அட்டகாசம்.
இந்த ஜாங்கிரி சுந்தரமும் kindleunlimited ல் படித்தது. எடுத்தால் இருபத்தைந்தையும் படித்துவிட்டுதான் மூடுவீர்கள் என்பதற்கு நான்... ச்சே.ச்சே.. தேவன் உத்திரவாதம் அளிக்கிறார்.
இந்த வருஷ ஆரம்பித்திலிருந்து புத்தக வாசிப்பு கொடிக்கட்டிப் பறக்கிறது! இந்த மாதத்தில் இது மூன்றாவது புத்தகம். பேரின்பம் வாய்க்கிறது! <3
Very light read. Typical short story book in Devan comical way. The first story on which the book gets the name is too ordinary but all others were ok type. Not to be called great but comedy is a serious job and may be Devan has given it in the way people in 60s would like it.
But for us who has seen movie comedies this seems a bit childish, but in between the serious world and serious books this was kind of refreshing for me.
I would not recommend u to have expectation like that of thupariyum sambu or rajathin manoradham but if you have been between serious books this will be a good change for u.