அன்று ஞாயிறு என்பதால் அர்ஜூன், அவந்திகா இருவரும் வீட்டில் இருந்தனர்... அர்ஜூன் மகன் ஸ்ரீராமுடன் விளையாடி கொண்டிருக்க... அவளது அலைப்பேசி அழைத்தது... எடுத்து பார்த்தவன் அது அருந்ததியிடம் இருந்து வந்த அழைப்பு என்றதும் சமையலறையில் இருந்த மனைவியிடம் கொண்டு வந்து கொடுத்தான்... "யாருன்னா...?" என்று கேட்டவள் அலைப்பேசியைப் பார்த்ததும் தனது பேச்சை நிறுத்திவிட்டு கணவனைப் பார்த்தாள்... அவனோ 'பேசு' என்பது போல் சைகை செய்துவிட்டு விலகி சென்றான்... அவனது வலியை உணர்ந்தவளாய் அவள் அவனது முதுகை வெறித்தாள்... மீண்டும் வந்த அழைப்பு ஒலி அவளது கவனத்தைத் திருப்பியது... அடுப்பை அணைத்துவிட்டு அலைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்தவள் மேலே பேச ஆரம்பிக்கும் முன், "அம்மு, நம்ம சாகரி