மருத்துவமனையில் இருந்து அவந்திகா வீடு திரும்பியதும் சிசுவின் இறுதி காரியத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடும் நடந்தது... அப்போது அர்ஜூன் அங்கு வந்தான்... அவனைக் கண்டதும் துரை அடிக்கப் பாய்ந்துவிட்டான்... "எதுக்குடா இங்கே வந்த...? தங்கச்சி உடம்பில் இருக்கிற கொஞ்ச நஞ்ச உயிரையும் மொத்தமா எடுக்கிறதுக்கா...?" என்று அவன் நண்பனது சட்டையைப் பிடித்துக் கொண்டு கத்தினான்... அர்ஜூன் தனது கையிலிருந்த பையை நீட்டி, "குழந்தைக்கு ட்ரெஸ்..." என்க... அடுத்த நொடி ஆத்திரத்துடன் அதைத் தூக்கியெறிந்த துரை, "யாரோட குழந்தைக்கு யாருடா ட்ரெஸ் எடுத்துக் கொடுக்கிறது... உயிரோட இருக்கும் போது அதன் மேல் கொஞ்சமும் பாசமில்லை... இப்போ என்ன புதுசா பாசம் பொத்துக்கிட்டு வருது...
Though the live of Avanthika is unconditional, Arjun's love seems very complex. A confusing story with incomplete suspense. Second part must be the answer. 😀