ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருக்கிறான். அவனுக்குத் தாயாருமில்லை தகப்பனாரும் இல்லை, கையில் காலணாக் காசும் இல்லை. அவன் மிகச் சிரமப்பட்டுப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்; உபகாரச் சம்பளங்கள் வாங்கிக் கொண்டு காலேஜில் படிக்கிறான். ஆனால் பி.ஏ. பரீட்சைக்குப் பணம் கட்ட அவனிடம் ஒன்றும் இல்லை. ஆகையால் பரீட்சை பாஸ் செய்ய முடியாமல் போய், டிராம் வண்டியில் கண்டக்டர் ஆக வேலைக்கு அமர்கிறான்.
அதே ஊரில் அழகான பெண் இருக்கிறாள். அவளுக்குத் தாயாரும் இல்லை; தகப்பனாரும் இல்லை; அவள் கையிலும் காலணா இல்லை. அவள் மிகவும் சிரமப்பட்டு, கிராம் போன் பிளேட்டுகளிலிருந்து சங்கீதம் கற்றுக் கொள்கிறாள். அந்தச் சங்கீதத்தைச் சிறு பெண்களுக்குச் சொல்லிக் கொடுத்து, வருவதைக் கொண்டு வயிறு வளர&
தேவன் அல்லது ஆர். மகாதேவன் பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.
சின்னஞ்சிறு கதைகள். பெயருக்கு ஏற்றார்போல் ஒரு பக்க கதைகளாக விளாசி தள்ளியிருக்கிறார் தேவன்.
குமுதத்தில் ஒரு பக்கத்தில் கதை வரும். பெரும்பாலும் குடும்ப நிகழ்வுகளாகவே இருக்கும். ஆனால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தினுசாக இருக்கும். ஆனால் இதில் வரும் அனைத்து கதைகளும் ஹாஸ்யம் நிறைந்தவையாக இருக்கின்றன.ஆரம்பத்தில் வரும் கதைகள் சின்னஞ்சிறு கதைகள் என்ற தலைப்பிலேயே வருகிறது. சில கதைகள் முடியும் போது வாய் விட்டு சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. புத்தகத்தின் முடிவில் வரும் சில கதைகள் மட்டும் சுமார் ரகம். மற்றபடி தேவன் நம்மை வழக்கம் போல் சிரிக்க வைக்கிறார். சிரிக்க வைப்பதோடு நில்லாமல் 1940களுக்கே அழைத்து செல்கிறார். :-)
Amazing collections of short stories, many of them with unexpected twists, and some of the very witty and funny too. No wonder that Devan was a highly acclaimed writer during his times.