Jump to ratings and reviews
Rate this book

Rockfort காதல்: ஸ்ரீரங்கம் TO குருவிகுளம் - பாகம் 1

Rate this book
இந்த பிரபஞ்சமே இயங்குவது அன்பெனும் அச்சாணியில் தான் என்பதை தீர்கமாக நம்பி எந்த இன மத வர்க்க பேதமின்றி எதிர்படும் யாவரையும் "அன்பு" செய்வதை பாக்கியமாக நினைத்து வாழும் நாயகி திவ்யா எதிர்முனையில் இந்த பிரபஞ்சம் கொடுப்பதை உண்டு சுயநலமாய் வாழாமல் தன்னால் முடிந்ததை திருப்பி கொடுக்கும் பழக்கத்தோடு வாழும் நாயகன் அருண்மொழியை மதுரை வைகை கரையில் சந்தித்து தங்களின் மனங்களை பரஸ்பரம் பரிமாறி கொள்கின்றனர். இருவீட்டு பெற்றோர்களும் அட்சதையை கையில் வைத்து கொண்டு காத்திருக்க இந்த இளம் ஜோடி தங்கள் காதல் திருமணமத்தை தள்ளி போட்டு வருகிறது ஏன் என்று எவருக்கும் காரணம் சொல்லாமல். வாருங்கள் இந்த இளம் ஜோடியோடு பயணித்து நாம் காரணம் அறிய முற்படுவோம்…

770 pages, Kindle Edition

Published December 13, 2019

1 person is currently reading
2 people want to read

About the author

Raj Panneerselvam

3 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (66%)
4 stars
2 (33%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
1 review
January 31, 2020
அருமையான காதல் கதை. மிக அனாயாசமான எழுத்து நடை. காட்சிகளை நம் கண் முன் காண்பது போல விவரிப்பது மிகவும் தேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமே வாய்க்கும் ஆனால் இவருக்கு அந்த எழுத்து நடை மிகச்சுலபமாக கைகூடி வருகிறது. வாழ்த்துகள் ராஜ்.

எழுத்துப் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டிய குறை.
Profile Image for Krishnamurthi Balaji.
24 reviews27 followers
January 17, 2020
A lovely story of Love and Life !

Though a long story, the narration is very nice. Actually a life journey of Love , which keeps traveling till the end ! A family story of sweet smelling flowers strongly woven with the thread of love ! Interestingly written with so many unexpected turning points ! In the beginning the love story prolongs too much, but the sudden turning points make the story very interesting. Though the ending is good, I didn't expect it that way . On the whole, a story worth reading. Waiting for the 2nd part, where I think my expectations would come true.,
1 review
February 20, 2020
காதல் கதை மற்றும் சமூகத்தில் நடக்கும் ஒரு தவறை அருமையாக திறம்பட எழுதி இருக்கிறார் எழுத்தாளர்.
குடும்பத்தில் உள்ள உறவுகள் மற்றும் அண்ணன் தங்கை உறவு என்று அனைத்தும் அருமையாக படைக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் படிக்கும் பொழுது கண்கள் கலங்க வைத்துவிட்டார் எழுத்தாளர் அண்ணன் அவர்கள்.
சிறிய குறை சில இடங்களில் எழுத்து பிழைகள் .
மிக அருமையான படைப்பு
1 review
July 16, 2020
கதைக்களம் காதலும் மணல் கொள்ளையில் கரைந்து போன ஒரு இளைஞனின் வாழ்வியலை மையப்படுத்திய கதையினை ஒவ்வொரு இடத்திலும் நேரத்தியான நடையில் எழுதிய விதம் மீண்டும், மீண்டும் படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. சந்தியா இப்போதும் அருகில் அமர்ந்து பேசிகொண்டிருக்கிறாள் கைகளை பற்றிய வண்ணம் ...நாவலில் வரும் அருண்மொழி கதாபாத்திரத்தின் தங்கையே சந்தியா😍👌 வாழ்த்துகள் ராஜ் அண்ணா..!
Profile Image for Harihara Sudhan.
1 review10 followers
Read
February 20, 2020
Really nice Love Story. I enjoyed lot. I loved and living in the story. This story is not only speaks with love, it's speak with Sand Maffiya, general community based issues etc. I keep this book for my best in my bookself.
Profile Image for ஜ.சிவகுரு Jambulingam.
Author 1 book5 followers
February 3, 2021
Rockfort காதல்

ஒரு ரயில் பயணம், ஒரு மனிதனின் வாழ்வில் என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்? அதை பயணித்து அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும். அப்படி பயணத்திலேயே திளைத்த அருண்மொழியின் ஒரு ரயில் பயணத்தில் தொடங்கும் இந்த கதை, நம்மையும் அவனுடனேயே உடன் இழுத்துச் சென்று விடுகிறது.

சமூகம், மக்கள், இயற்கை, நதி, என எல்லாவற்றையும் காதலிக்கும் ஒரு நாயகன். அவனுடன் கடற்கரைக்கு, கடைதெருவுக்கு மட்டும் சுற்றாமல் அவன் லட்சியங்களுடன், அவனுடனும், அவனுக்காகவும் சுற்றும் காதலி திவ்யா. அண்ணனுக்காக எதையும் செய்யும் தங்கை சந்தியா. சுதர்சன், பிரியா என்று நீளும் நண்பர்கள் பட்டியலுடன் கதை நகர்கிறது.

ஊர் திருவிழா, குடும்பத்தினர் இடையே ஏற்படும் உறவுக்கான உரிமை போராட்டம்., என்று பல காட்சிகள் நாம் தொலைத்த குடும்ப அமைப்பின் நீட்சியாகவும், அதை அடைய வேண்டும் என்ற ஆவாலை தூண்டும் விதமாகவும், ஏக்கத்தை தருவதாகவும் அழகாய் படம் பிடித்திருக்கிறார் ராஜ்.

"நாடு மோசமா போச்சு!. "
"இங்க எல்லாமே இப்படிதான். "
"நீ மாறுனா ஊரு மாறுமா என்று பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டு, சமூக சீர்கேட்டிற்கு மௌன சாட்சியாய் இருக்கும் பலருக்கு, மாற்றம் நம்மில் இருந்து தான் ஆரம்பம் ஆகும் என்று விளங்க வைத்து, ஒரு உந்துதலை இந்த கதை கண்டிப்பாக தரும்.

இந்த கதையில் வரும் பல சிறப்பான காட்சிகளை குறிப்பிட விரும்பினாலும், அது படிப்பவருக்கு எதிர்பார்ப்பை குறைத்துவிடும் என்று அவற்றை விரிவாக எழுதவில்லை.

அருண்மொழி - திவ்யா - சந்தியா உடன் Rockfort பயணம் என்றுமே மறக்க முடியாத பயணம்.!
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.