எங்கோ இடி இடிக்க எங்கோ மழை பெய்ததாம் என்கிற கதையாக தொடங்கிய சண்டை துவந்த யுத்தமான வரலாறு. மனுஷ்ய புத்திரனிடமிருந்து ராயல்டி வாங்க நான் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமன்று. ஆனால் எப்போதும் போல அவர் மோசடிக்காரராகவே இன்றும் இருந்துகொண்டிருக்கிறார் புலியூர் முருகேசன் வரை. 2014ல் தொடங்கி 2011குப் போய் 2019ல் வந்து முடிகிற வரலாறு இங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (பி. ஜூன் 19, 1960) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம் என இதுவரை 6 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் அய்யோவென்று போவான்" என்ற பாரதியின் கவிதை தான் நினைவு வருகிறது. சாரு நிவேதிதா கூட பைபாஸ் செய்த போது ராயல்டி கேட்டு அவதிப்பட்ட பின்பே பெற்றதாக 15 ஆண்டுகளுக்கு முன் தனது வலைதளத்தில் எழுதினார். இது தான் தமிழ் எழுத்தாளர்களின் சாபக்கேடா...? இலக்கிய வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் விழிப்பு தரும் நூல்.