Jump to ratings and reviews
Rate this book

தேவரடியார் கலையே வாழ்வாக...

Rate this book
சங்க காலம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் நடனம், இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலை வடிவங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. தமிழகக் கலைகள் கோயில் சார்ந்தே இயங்கி வந்திருக்கின்றன. கோயில் என்ற நிறுவனம் உருவாகி வளர்ந்து எழுந்த போது, கடவுளர்கள் ஆர்ப்பாட்டம் வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்பட்டார்கள். இசையும் நடனமும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டன. கடவுள்களைப் புகழ்ந்தும், அவர்களின் மகிமைகளை வெளிப்படுத்தவும் பதிகங்களும் பாசுரங்களும் போடப்பட்டன. வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கோயில்களுக்குப் பெண்கள் நேர்ந்துவிடப்பட்டார்கள். கோயில்களில்
இறை சேவைக்காக நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார் பெண்கள் கலைகளைக் கற்றுத் தேர்ந்து வளர்த்து வந்திருக்கிறார்கள். நீண்ட நெடிய கலை மரபில் தேவரடியார்களின் பங்களிப்பைப் பல தளங்களில் இந்நூல் விரிவாக ஆராய்கிறது.

288 pages, Kindle Edition

First published January 1, 2018

3 people are currently reading
10 people want to read

About the author

அ. வெண்ணிலா

16 books7 followers
அ. வெண்ணிலா (A. Vennila, பிறப்பு: 10 ஆகத்து 1971) தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (50%)
4 stars
0 (0%)
3 stars
1 (25%)
2 stars
0 (0%)
1 star
1 (25%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.