கலை இலக்கியம் சுதந்திரப்போராட்டம் சமத்துவம் தமிழ் வரலாறு என பல்வேறு செய்திகளை தருகிறது இந்த புத்தகம். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு அருந்தமிழ் நூலை பற்றியது. அந்த நூலை பற்றியும் அதன் ஆசிரியரை பற்றியும் அதன் சுருக்கத்தையும் அது எங்கே கிடைக்கும் என்பதையும் அந்த புத்தகத்தின் தேவையையும் அழகுற எடுத்து சொல்லி இருக்கிறார் பிரபஞ்சன். இந்தப் புத்தகத்தை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாது இதில் பறித்துரைக்கப்பட்டுள்ள புத்தகங்களையும் படிக்க வேண்டும் .