கதைகள் மனதில் உள்ள இறுக்கங்களை குறைத்து படிப்பவர்களை வேறு ஒரு உலகத்திற்கு சிறிது நேரத்திற்கு எடுத்துச்செல்பவை. “சுட்டு விடும் தூரம்” - சென்னை நகரின் தலை சிறந்த துப்பறிவாளன் ஜீவா துப்பறிந்து கொலைகாரனை இரண்டே மணி நேரத்தில் கண்டு பிடித்துக்கொடுக்கும் கதை; கதையை மெதுவாக படியுங்கள். ஏன் என்றால் முக்கியமான தகவல்கள் ஒவ்வொவொரு பத்தியிலும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. கதையோடு நீங்கள் இயல்பாக பயணிக்கும்போது, உங்களை அறியாமலே நீங்களும் ஒரு துப்பறிவாளனாக மாறுவதை உங்களால் உணர முடியும். கண்டிப்பாக உங்கள் நேரம் பயனுள்ளதாக கழியும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு. இந்த புத்தகத்தை படிக்க உங்களுக்கு வெகு நேரம் ஆகாது.