அயோத்திதாசர் மற்றும் அவரது எழுத்துக்களை புரிந்துகொள்ள, மேலும் அவற்றில் கவனம் கொள்ளும் விதமாக இந்நூல் அமைந்திருக்கின்றது. எழுத்து நடை அனைவரையும் ஈர்க்க வல்லது. அயர்ச்சி தரா ஆர்வம் தூண்டும் நடை.
It is a critical work on Iyothee Thasser and his writings.
Who was/is Iyothee Thasser? What was his writings about? These are very expertly introduced in the first section of the book. The interest is hooked. We get to know Iyothee Thasser and his contribution towards re-creating (Iyothee Thasser would not prefer it though) the society that was originally present. The original society was a Buddhist society where there were no castes. In fact, it was the original situation even before the Vedic age. Seems interesting. Right. Read the book and you would be thrilled.
In the second part of the book, the scholar T. Dharmaraj anaylses Iyothee Thasser using some interesting theories - folklore theories, semiotic theories, linguistic theories. The introduced subject is weighed using the theories and as a result a new perspective is created for the reader.
The last part of the book is the densest one. Here, T. Dharmaraj the theoretician comes vibrantly alive. The new theories on historiography, semiotics, textual criticism, linguistics, psychology and memory/forgetfulness are tossed here and there. The scholarship of the author in very many fields is very visible in these pages. If Iyothee Thasser was analysed using theories in the second part, here in the third part T. Dharmaraj comes out as a philosopher/thinker.
It is his quest into understanding the 'darkness surrounding Iyothee Thasser' for more than 100 years and the differences between the Dravidian movement of EVR (Periyar) and Buddhist Sakkiya Sangam of Iyothee Thasser.
The four stars are sign of my impatience and incompetency than the writer's. The last section needs to be read patiently and it demands philosophical formation on the part of the reader. If you are patient, you can learn the concepts. If you are educated in philosophical trends, it may be easy to follow it quick. If one is missing, the last section can prove to be a Herculean task. It is where this reader failed. I will have to read it again pausing and reflecting each word and sentence.
எம்.எஸ்.எஸ் பாண்டியன் எழுதிய Brahmin-nonbrahmin என்ற புத்தகத்தில் அயோத்திதாசர் பற்றிய சிறிய கட்டுரை தான் நான் அறிந்த அயோத்திதாசர், சாதியத்திற்கு எதிராக பண்பாட்டு தளத்தில் ஒடுக்கப்பட்ட தன் சமூகத்தின் முன்வரலாற்றை மீட்க முயற்சி செய்தார், அந்த முயற்சி வெகுவாக பலனளிக்கவில்லை என்ற தொணியில் முடித்திருப்பார்.
இந்த புத்தக விழாவில் பலராலும் பரிந்துரைக்ப்பட்ட நூல் என்பதால் இதை தயக்கத்துடன் (காரணத்தை பின்னர் பார்கலாம்) முதலில் படிக்கத் தொடங்கினேன். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்நூல் அயோத்திதாசரின் எழுத்தை, செயல்பாட்டை, சிந்தனையை எப்படி அணுகுவது என்பதை மிக அடர்த்தியான கருத்துக்களுடன் சுவாரசியமான நடையில் தந்துள்ளார். படித்து முடித்ததும் பல சிந்தனைகள் மனதில் இடைவிடாமல் வந்து கொண்டேயிருந்தது. இந்த நூலை நூறு சதவீதம் ஏற்க முடியவில்லை என்றாலும் இந்த சமூக அமைப்பின் மீதான அயோத்திதாசரின் பார்வையை முற்றிலும் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது. சாதியத்தின் மீதான அவரது பார்வை வேறு விதமாக உள்ளது, சாதி என்பது இந்த சமூகத்தை பிடித்த நோயல்ல அது இந்த சமூகத்தின் உடலாக மாறியுள்ளது அதை மீட்க சாதியம் தோன்றிய காலத்திற்கு முன்பு இருந்த சமூக அமைப்பை மீட்டெடுப்பதே அவரின் சிந்தனையாக இருந்திருக்கிறது, அதற்கு அவர் தமிழ் பெளத்தம் என்ற கதையாடலை உருவாக்க முயற்சி செய்கிறார். மேலோட்டமாக பார்த்தால் ‘முன்னோர்கள் ஒன்னும் முட்டாள் இல்லை’ என்ற ரேஞ்சுக்கு தோன்றினாலும். உலகின் அனைத்து மதங்களும் இவ்வாறான கதையாடல்களால், புராணங்கள் என்ற கட்டுக்கதைகளின் பெயரில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அயோத்திதாசர் நிறுவ முயன்ற கதையாடல் புரணங்களாக இல்லாமல் வரலாறாக கட்டமைக்க தொடர்ந்து எழுத்தின் மூலமாக மொழி மற்றும் பண்பாட்டு தளத்தில் இயங்கியிருக்கிறார்.. அதற்கு அவர் தமிழையும் பௌத்தத்தையும் கருவியாக கொண்டு, புராணங்களை மறுத்து, வேஷ பிராமணர்களின் உண்மையான தன்மையை அஸ்வகோசர் போன்ற கதையின் மூலம் பல கட்டுரைகளாக தொடர்ந்து எழுதியிருக்கிறார்... அவர் காலத்திற்கு பிறகு அரசியல் பிரதிநிதித்துவம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒடிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உரிமைகள் சாதியத்தை வேரோடு அழித்துவிடும் என்று நம்பிய நாம், இன்று அதன் போதாமையை உணர்கிறோம், நாளுக்கு நாள் சாதியம் மேலும் இறுகுவதை காண முடிகிறது, ஒருவேளை பிரதிநித்துவத்துடன் பௌத்த தன்மத்திற்கு ஒருங்கிணைந்திருந்தால் சாதியத்திலிருந்து மீண்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது(அனுமானம் தான்).. இதை மேலும் வலுவூட்டும் விதமாக, இதற்கு முன்பு படித்த புத்தகமான Early Indians by Tony Joseph என்ற நூலில் சாதியின் தோற்றம் என்ற Aryavarta-Magadha chapter-ல் பௌத்தம் கோலோச்சிய மௌரிய பேரரசின் வீழ்ச்சியும் சாதியின் தோற்றமும் genetically coincided என்பது போல நூலாசிரியர் சொல்லியிருப்பார்.. இதே போன்ற பல கேள்விகளை இந்த நூல் நம்முள் ஏற்படுத்துகிறது..
அயோத்திதாசரின் வரலாற்றை நூறு ஆண்டுகளாக மறைத்ததில் திராவிட இயக்கத்திற்கும், பெரியாருக்கும் பெரிய பங்கிருப்பதாக, அயோத்திதாசரின் நெருக்கமான செயல்பாட்டாளர்கள் பின்னாட்களில் பெரியாருடன் தெடர்பிலிருந்த போதிலும் அவரின் சிந்தனையை உலகறிய செய்யும் கடைமையிலிருந்து தவறியதாக நூலாசிரியர் சொல்கிறார்...சாதிய எதிர்ப்பு, புராணங்கள் பௌத்தத்தை வீழ்த்த பயன்படுத்திய பொய்கள், வேஷ பிராமனர் எதிர்ப்பு போன்ற திராவிட சிந்தனையை ஒத்த கூறுகளுக்கு முன்னோடியாக இருந்த அயோத்திதாசரை ஏன் திராவிட மேடைகளில் முன்னிறுத்தவில்லை போன்ற கேள்விகளையும் எழுப்புகிறார். (இதுதான் கிழக்கு இதை பதிப்பிக்க தேர்ந்தெடுத்தற்கான புள்ளியா😉).... ஆகமொத்தம் இந்த நூலை வாசித்து முடித்த போது ஒரு கலவையான மனநிலையே உருவானது.
பி.கு: எழுதுவதற்கும் கேள்வி எழுப்புவதற்கும் நிறைய உள்ளது, ஆனால் நூலை ஒரு முறை வாசித்துவிடவும் என்று மட்டும் கூறிக்கொண்டு... 🙏🙏🙏🙏
அயோத்திதாசர் தமிழ் சமய பார்வை நமக்கு வேற ஒரு வரலாற்றை காட்டுகிறது. தமிழ் மக்கள் அனைவரும் பூர்வ பௌத்த குடி மக்கள், தாழ்த்த பட்ட மக்கள் அனைவரும் பௌத்த சமயத்தை ஆதிகாலத்தில் பின் பற்றியவர்கள் என்னும் அவரது பார்வை உண்மையா இருக்குமோ என்ற எண்ணம் நமக்கும் தோன்றுகிறது. தீபாவளி, கார்த்திகை தீபம் , ஆடி மாதம் அம்மன் வழிபாடு போன்ற விழாக்கள் தோன்றிய காரணங்கள் ஏற்க கூடியதாய் இருக்கிறது. பார்ப்பனர்கள் பறையர்கள் தோன்றிய அவர் கூறும் காரணமும் வியப்பாக இருக்கிறது. நாம் அனைவரும் பூர்வ பௌத்த குடி மக்கள் என்னும் மறதியை நமக்கு நினைவூட்டி இருக்கிறார். அவைசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
I wanted to know about a great 19th century social reformer (ayothidhasar) & bought this book with High expectations. Finished this book with huge disappointment. The author tried hard to reintroduce ayothidhasar in to the reading world but with his mundane writing skills the reader is in for tiresome reading with lots of repetitive phrases. You will be better off with ayothidhasar's own writing "ayothidhasar sindhanaigal"
Many of his views and his perspective of history is overturned and surprising to read. The way he justifies things are amazing. One cant accept all his views but at the same time it cant be ignored completely. His views and research works are blighting the contemporary historical views. A person to be acknowledged on par with ஈரோட்டுக்காரர்.
It felt like the facts were misinterpreted by the author and presented to the viewers. I read early indians before this book and this book contradicts with the data provided in the early indians.
இந்த புத்தகம் அயோத்திதாசரை பற்றி தெரிந்து கொள்ள , சரியான ஒன்று அல்ல. இதில் , அவர் எழுதியுள்ள இந்திர தேசத்து சரித்திரம் , மற்றும் பார்ப்பனர் , பறையர் பற்றிய அவரின் கருத்துக்கள் கொண்டு ஆசிரியர் எழுதியுள்ள அவரின் விளக்கங்களே . தொடக்கம் முதல் பல இடங்களில் , திராவிட இயக்கம் அயோத்திதாசரை இருட்டடிப்பு செய்துவிட்டதாக , கூறிக்கொண்டே இருக்கிறார் . பல பக்கங்கள் , பறையர்கள், ஆதிதிராவிடர்கள் , என்று தன் சொந்த கருத்துக்கள் , காழ்ப்புகளையே மீண்டும் மீண்டும் எழுதி இருக்கிறார். அயோத்திதாசர் பற்றி அவர் எழுதியுள்ளதை , சுருக்கமாக இவ்வாறு கூறலாம் 1. திராவிடர்கள் பூர்வ பௌத்தர்கள் . 2. இந்து திருவிழாக்கள் , அனைத்தும் பௌத்தர்கள் தொடங்கியவை . 3. சமயம் என்பது , பல்வேறு காலகட்டங்களில் , பலர் கூறியன . 4. அணைத்து சொற்களும் , பிரித்து அவர் தன் தனி அர்த்தத்தை கூறுகிறார். 5. திராவிட இயங்கங்கள் கிளை பரப்ப , பௌத்த சங்கங்களே உதவின.
அயோத்திதாசரின் கருத்துக்களை , சரிவர கூறாமல் , தன் சொந்த அபிப்பிராயங்கள் , திராவிட இயங்கங்கள் ,மீது அவருக்குள்ள காழுப்புகள் , மொழி குறித்து தன் கருத்துக்கள் , திரும்ப எழுதுதல் என்ற ஒன்றை பிடித்து கொண்டு அயோத்திதாசர் எழுத்துக்களுக்கு புது அர்த்தம் கற்பித்தல் , இவ்வாறே இந்த புத்தகம் செல்கிறது. அயோத்திதாசர் பற்றி எழுதப்பட்டுள்ள சராசரிக்கும் கீழான ஒரு புத்தகமாக இருக்கும் ஒன்றே இது.