ஹாய் நட்பூஸ், நான் ரியா மூர்த்தி, காதலில் கரைந்திட வா நாவலின் மூலம் உங்களிடம் அறிமுகமானவள். புகைப்பட கலைஞனாகிய நம் நாயகன் மாயன் ஓர் விசித்திர தீவினை நோக்கி பயணிக்கையில், அவனுக்கு மட்டும் கேட்கும் ஒரு அசரீரி.. அதைப் பின் தொடர்ந்து பயணிக்கையில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்களின் தொகுப்பே மாயவனின் மயில் தூரிகை எனும் இக்குறு நாவல். விரைவில் கதையின் இரண்டாம் பாகத்தோடு உங்களை சந்திக்கின்றேன்.. நன்றி, ரியா மூர்த்தி.
அழகான மாயங்கள் நிறைந்த சிறுகதை. ஆசிரியர் வர்ணிக்கும் குகையும் சிற்பங்களும் கண் முன்னே வருகிறது. நாயகியின் ஜென்மமும் சாவும் கடந்த காதல் மெய் சிலிர்க்க வைக்கிறது...