முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு அதுகுறித்து எழுதப்பட்ட ஈழக் கவிதைகளில் ஆற்றல் வாய்ந்தவற்றைத் தேடித் தொகுக்கும் பணியில் நான் ஈடுபட்டேன். புதிய கவிஞர்கள் பலர் நிறைய கவிதைகளை எழுதியிருக்கிறார்கள் என்றாலும் அவை எல்லாவற்றையும் தாண்டி இப்போதும் மிகச் சிறந்த கவிதைக் குரலாக சேரனின் குரலே ஒலிக்கிறது.. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய ’இரண்டாவது சூரிய உதயம்’ தொகுப்பைப் படித்துவிட்டு என்னமாதிரியான மன நிலைக்கு ஆளானேனோ அதேவிதமான தாக்கத்தை முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு சேரன் எழுதியிருக்கும் ஆறு கவிதைகளும் என்னுள் ஏற்படுத்தின. போர் முடிவடைவதற்கு முன்னர் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ம