கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள்
34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றது.
இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் தமக்கேயுரிய தனீ நடையில் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா.
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.
Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், முதன்முதலில் கோபல்ல கிராமத்திற்க்கு அறிமுகமாவது, அதை அவர்கள் வியப்புடன் பார்ப்பது, சுதந்திரப் போராட்டம் போன்ற நிகழ்வுகளின் தாக்கம் கோபல்ல கிராமத்தில் எப்படி இருந்தது, என நாவல் முழுவதும் விறுவிறுப்பாகச் செல்கிறது.
சாகித்ய அகாதெமி விருது நிகழ்ச்சியின் போது பேசிய கி.ராவின் ஏற்புரை இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் அவருடைய நாவல் போல மிகவும் நேர்த்தியாக இருந்ததது.
அதில் குறிப்பிட்டது போல கோபல்ல கிராமமும், இந்த நாவலையும் முதல் பாகம், இரண்டாம் பாகமாக வாசிக்க வேண்டும்.
இந்திய சுதந்திர வரலாற்று நிகழ்வுகளை கோபல்ல கிராம மக்களின் கதைகளோடு கலந்து அளித்துள்ளார். முதலில் வட்டார வழக்கை படிப்பது மிக கடினமாக இருந்தது. காரணம் அக்கிராமத்தில் தெலுங்கர் கன்னட மக்கள் குடியேறியதால் மூன்று மொழிகள் கொண்ட கலவையாக அவ்வட்டார வழக்கு இருந்தமையால்.
இந்நாவலில் வரும் இந்திய சுதந்திர வரலாற்று நிகழ்வுகளை முதல்முறையாக படித்தேன். வேறு எங்கும் படித்த ஞாபகம் இல்லை. சிப்பாய்கள் கழகம், ஒத்துழையாமை இயக்கம், சுபாஷ் சந்திர போஸ் அவர்களை பின்தொடர்ந்த ஆதரவாளர்களின் போராட்டங்கள் பற்றி மட்டுமே படித்துள்ளேன் இந்நாவலில் மாலுமிகள் போராட்டமமும் அவர்களுக்கு ஆதரவாக இந்திய மக்களும், இந்திய ராணுவ சிப்பாய்களும், அவர்களுக்கு ஆதரவு தர மறுத்த!!! தலைவர்களும் பற்றிய வரலாறு எல்லோரும் அறியப்பட வேண்டியவை
கோபல்ல கிராமத்தின் அடுத்த பகுதியான இந்நூல் ஆங்கிலேயர்கள் பிடியில் அக்கிராமம் சந்திக்கும் மாற்றங்கள்,அவர்களுக்கு அறிமுகம் ஆகும் புதிய பொருட்கள் மற்றும் நாட்டுச் சுதந்திரம் பற்றிய இக்கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருடைய கருத்துக்கள் ஆகியவை நாம் அந்தக்காலத்து மக்களின் மனநிலையை அறிய உதவும்.இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் அறியப்படாத மாலுமிகளின் யுத்தம் போன்றவை இந்நூலின் முக்கியத் தரவுகள்.
சுதந்திர காலகட்டத்தில் வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு கிராமமும் அதன் மக்களும் எப்படி இருந்தார்கள் என்று சொல்லும் அழகான நாவல். கதை பேசுவது போல் இருக்கிறது கதை சொல்லும் விதம். கிராம மக்களின் பழக்கவழக்கங்கள், நாகரிகங்கள், புது பொருளை வியந்து பார்ப்பதும் அதனை ஆராய்ச்சி செய்வதும் பின் அதை குறை கூறுவதும் என சுவாரசியமாக செல்கிறது. சுதந்திர காலகட்டத்தில் கிராம மக்கள் எப்படி செயல் பட்டார்கள், தேசத்தலைவர்கள் செய்த தவறுகள், பல போர்கள் பற்றியும், பல சுதந்திர போராட்டங்கள் பற்றியும் இந்நாவல் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்நாவல் கோர்வையாய் செல்லாமல் கதாபாத்திரத்தோடு நாமும் தகவல் அறிந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது. சுதந்திர போராட்டத்தின் போது மக்களின் பங்களிப்பு பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல். திரு. கி. ராஜநாராயணனின் அழகான படைப்பு இந்த நாவல்.
கோபல்லபுரத்து மக்கள் ********************** 1990ம் ஆண்டு முதற்பதிப்பு கண்டு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். இரண்டு பாகங்களை உள்ளடக்கியது.
இந்நாவலின் முந்தைய பாகமாக கருத்தப்படவேண்டிய "கோபல்ல கிராமம்" நாவலைப் போன்றே, இந்நாவலிலும் கோர்வையான கதையாக இல்லாது, கோபல்ல கிராமத்து மக்களின் குணங்களையும் அவர்களுக்குள் நடக்கும் சிறுசிறு சம்பவங்களையும் சொல்லி செல்கிறது.
தெலுங்கு தேசத்திலிருந்து தென்கோடி தமிழகத்திற்கு வந்த தெலுங்கர்களின் (நாயக்கர்) வரலாறை, கோபல்ல கிராமம் எனும் கற்பனை கிராமத்தின் மூலமாக திரு கி.ரா அவர்கள் நமக்குள் கடத்துகிறார். 'கோபல்ல கிராமம்' நாவலின் தொடர்ச்சியாக, அதில் வந்த கதைமாந்தர்களுள் ஒரு சிலர் இந்நாவலில் இடம்பெறுகின்றனர் .
மேலும், கதைக்காலம் இந்திய சுதந்திரத்திற்கு வெகு நெருக்கத்திற்கு முன்(அதாவது இரண்டாம் உலகப்போர் ஒட்டி) என்பதால் அந்த வரலாற்று நிகழ்ச்சிகளும் இரண்டாம் பாகத்தில் கதைமாந்தர் வழி சொல்லப்படுகிறது. மேலும், சில வேளாண் தகவல்களும் சுவையான சம்பவங்களும் ஆங்காங்கே நகைச்சுவையாக சொல்லப்படுகிறது.
கடைசியாக நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில், கோபல்ல கிராமத்தில், பெண்களின் குலவையோடு மூவர்ண கொடியேற்றம் நடைபெற்று முற்று பெறுகிறது நாவல்.
நாவலின் முதல் பாகத்தில், மண்ணெண்ணை விளக்குகள் அறிமுகம், கருக்கல் காலையில் ஆட்காட்டி குருவி சத்தம் கொடுப்பது, தேயிலை தண்ணி என்னும் டீயை கண்டுணர்ந்து பயன்படுத்த ஆரம்பிப்பது, அச்சிந்தலுவுடன் உடன்கட்டை முறை ஒழிந்தது, கோவில்காளை(காரி) வளர்ப்பும் அதன்மூலம் அதன் இன விருத்தியும், கிட்டப்பன் காளை அடக்குதல், கிட்டப்பன்-அச்சிந்தலு(கைம்பெண்) காதல் என கதையோட்டம் செல்கிறது.
இரண்டாம் பாகத்தில், கிட்டப்பன்-அச்சிந்தலு "சேர்ந்து"(திருமணம் முடிக்காமல்) வாழ்ந்த பின்னான மரணம், கோபல்ல கிராமம் நானாவித மக்களால் உள்வாங்கப்பட்டு தோற்றம் மாறியது, பெரிய குடும்பத்து நரசிம்மனும், கஸ்தூரி ரங்கனும் கிராமத்தை விட்டு எட்டையபுரம் சென்று தங்கி 'புதுபடிப்பா'ன இங்கிலீஷும் கணக்கும் கற்கலானார்கள். மேலும், வெள்ளையர்கள் பசு மாமிசம் சாப்பிடுவதை அறியும் கிராம மக்கள் அவர்களை சபிப்பது, தாழ்த்தப்பட்ட தாசில்தாருக்கு சாதிய படிநிலை காரணமாக ஒட்டப்பிடாரத்தில் வீடு மறுக்கப்படுகிறது.,வெள்ளை அதிகாரி கோவில்பட்டிக்கு தாலுக்கா தலைமையை மாற்றுகிறார். இதனால் கோபல்ல கிராமத்தின் வளர்ச்சி அருகாமைக்கு வருகிறது. படிப்படியாக கடிகாரங்கள், டார்ச்லைட், துப்பாக்கி இன்ன பிற உபகரணங்கள் அக்கிராமத்தினருக்கு அறிமுகமாகிறது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில், வெள்ளை அதிகாரிகள் குட்டையானவர்களை விடுத்து நெட்டையான கிராமத்தினரை ���ேடிவரும்போது, அவர்கள் ஒளிந்துகொண்டது, காடை பிடிப்பது, நாட்டின் சுதந்திர வேட்கை கோபல்ல மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம், அந்த நேரத்து உலக அரசியல் என விறுவிறுப்பாக செல்கிறது.
சுருக்கமாக, மூடத்தனம், பாமரத்தனம், சாதியம், தீண்டாமை, பகுத்தறிவு, முற்போக்கு என அனைத்துவித உளவியல்களையும் கொண்ட கிராமத்துவாசிகளின் கலவை இந்நாவல் எனலாம்.
புத்தகத்திலிருந்து....
\ எந்த உடம்பும் ஆரோக்கியமாக இருந்தால் பசிக்கிறதும் தூங்கிறதும் முழிப்பு தட்டுகிறதும், சொல்லி வச்சது போல ஒரு ஒழுங்காச் சுழலுகிற சக்கிரம் மாதிரி நேரம் தவறாமல் நடக்கும். இப்பேர்பட்டவர்கள் தங்கள் உடம்பை வைத்தே நேரம் சொல்லி விடுவார்கள். /
\ மனிதர்களில் சர்வாங்க அழகுப் பிறப்பு எப்படி அபூர்வமோ அப்படியே தான் மாடுகளிலும். எப்பவாவது இந்த பிறப்பு நிகழும். அப்படி பிறந்த காளை கன்றை வளர்த்துப் பெரிதாக ஆக்கி வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை. அந்த கன்று பால் மறந்ததும் கூளம் கடிக்க ஆரம்பத்துவிட்டது என்றால் ஒரு நல்ல நாள் பார்த்து பெருமாள் கோவிலுக்கு கொண்டுவந்து ஊர் கூட்டிப் பொங்கல் வைத்து, அந்த காளை கன்றின் முதுகில் திருநாமம் போன்று சூட்டுக்கோளால் "சூலம்சாத்தி" அவிழ்த்து விட்டுவிடுவார்கள். அந்த அடையாளம் எப்போதும் அழியாமல், பார்க்கிறவர்களுக்கு இது கோயில் மாடு என்று தெரியும்படி இருக்கும். இதனால் அந்த மாட்டுக்கு ஒரு தனி சுதந்திரம் உண்டு.
"ஆமா; பின்ன. தாயாதிக்காரன் பிடிச்சா அம்புட்டுதான். கயத்தை எங்க இழுப்பான்; சாகட்டும் பயன்னு விட்டு வச்சிருவான்!" என்று சொல்லி சிரித்தார் பய்யனாசாரி. /
\ பால் உணர்வுச் சிந்தனையில் சின்ன வயதில் பெண்ணுக்குரிய சுதாரிப்பும் துருதுருப்பும் ஆண்பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. பெண் வேப்பமரம்;சீக்கிரம் வளர்ந்து விடுகிறாள். ஆண் அரசமரம்;நின்று, நிதானித்து வளர்ந்து நிலைத்து நிற்கிறான்.
/
\ தமிழ் பேசும் சைவ செட்டிமார்கள், வெள்ளாளர் எனப்படும் பிள்ளைமார்கள் இவர்களுடைய வீடுகள் நாலைந்து. தெலுங்கு பக்தர்களோடு தமிழ் பக்தர்களும் ஒன்ரிறண்டு குடும்பங்களும் வந்து தொழில் நடத்த ஆரம்பித்திருந்தன.
ஆதிதிராவிடக் குடும்பங்கள், தெலுங்கு பகடைகள், ஏகாளிகள், குடிமகன்கள், கொல்லாசாரி, தச்சாசாரி, கூடைகள் வண்டி தடுக்குகள் பெருக்குமார் முதலிய செய்யும் குறவர்கள், "கம்புச் சீவனம்" என்று சொல்லப்படும் காவல்தொழில் புரியும் தேவமார் வீடுகள், ஆடு மேய்ப்புத் தொழில் புரியும் கோங்கிமார் வீடுகள், இப்படியாக அந்த கிராமம் சகல மக்களாலும் பல்கி பெருகிவிட்டது. இதோடு ஒரு பஞ்சாங்க ஐயரும் வந்து குடும்பத்தோடு குடியேறினார். மன்னார் நாயக்கர் சொன்னது போல் "சட்டி பானை செய்கிற குயவரும், நெசவுத்தொழில் நடத்தும் சேணியரும் வந்துவிட்டால் மொத்தம் 18 ஜாதிக்கு கணக்கு வந்துவிடும்" ! /
\ "விராலி வட்டம்ன்னு ஒரு ஏடு இருக்காம் . யாரும் அதை படிக்கக்கூடாதாம். படிச்சான்; தொலைஞ்சான்!இப்படித்தான்; கோட்டி பிடிச்சிரும்."
"அந்த ஏட்லெ அப்படி என்னதான் இருக்கு?"
"என்ன அளவு இருக்கோ யாரு கண்டா. படிச்சு முடிச்சதும் அம்மன் நேரே வந்து பிரத்யட்சம் ஆகி, காட்சி கொடுப்பாளாம்." "அப்படியா" "எப்படிக் காட்சி கொடுப்பாளாம்; அப்படியே...நிறை அம்மணம்! அதப் பார்த்ததும் இவங்களுக்கு இப்படி ஆயிருதாம்" "அதப் போயி அப்படி என்ன மயித்துக்குப் படிக்கணும்?" "படிக்கவே வேண்டாம்; ஏட்டை பாத்தாலே போதும்; படி படின்னுட்டு அது இவங்களை பார்த்து சொல்ற மாதிரி இருக்குமாம். படிக்கவேப்படாதுண்ணுட்டு நினைக்க நினைக்க கூடக்கொஞ்சம் தான் படிக்கணும்னு தோணுமாம்.கடைசீல படிக்காம இருக்கவே முடியாதாம், படிச்சதும், இப்படி ஆயிருதாங்க /
\ மக்களுக்கு போதை பழக்கத்தை பரப்பி விட்டால் அரசாங்கத்துக்கு வருமானம் மட்டுமில்லை; எதிர்த்துப் போராடவும் மாட்டார்கள் . கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் ஜனங்களுக்கு கோபம் ஏற்படுவதற்கு பதில் போதையை ஏற்படுத்தி விடுவது ஒரு தந்திரமான உபாயம் வெள்ளைக்காரன் மட்டுமில்லை உலகத்தில் உள்ள அனைத்து ஆட்சியாளர்களும் செய்கிற ராஜதந்திரங்களில் இதுவும் ஒன்று . /
\ "ஏண்டா, கள்ளுகடைய இழுத்து மூடிட்டா காந்தி கையில சுயராஜ்யத்தை கொடுத்து விடுவானா வெள்ளைக்காரன்? போங்கடா பொசகெட்ட பயல்களா". அந்த ஊரில் நுன்னகொண்ட நாயக்கருக்கும் சிலருக்கும் மட்டும் வெள்ளைக்கார ஆட்சியின் பெயரில் ரொம்ப பிரியம். ரொம்ப ரொம்ப பிரியம்.
"அவம் வந்த பிறகுதான் நாடே உருப்பட்டது" என்பார்கள்.
"எங்கன கண்டாலும் தீவட்டி கொள்ளைகளும் வழிப்பறிகளும் நண்டழிஞ்ச காடா இருந்த நாட்டை அவன் வந்து ஒடிக்கி அடக்கி ஒழுங்குபடுத்தியிருக்கான். அவன் வந்த பிறகு தானே இரயில் வந்தது, காரு வந்தது, தபாலு, தந்தி இதெல்லாம் வந்தது. நாட்டுக்கு அவன் எண்ணமெல்லாம் செஞ்சிருக்கான். அவம் மாத்திரம் இல்லன்னா தெரியும் கதெ? இவங்க கையில சுயராஜ்யத்தை கொடுத்துட்டா அம்புட்டுத்தான்; வேற வெனை வேண்டாம். திரும்பவும் நாடு நண்டழிஞ்ச காடா ஆயிரும்." /
\ கடவுளுக்கே மது பிரீதியானது, அதை மனிதனுக்கு அவர் தந்தார் என்பதெல்லாம் மக்களின் கட்டுக்கதைகள் என்றான் நரசிம்மன். மனிதனுக்கு எதெல்லாம் பிரீதியானதோ அவைகளை எல்லாம் மனிதன் கடவுளுக்கு காட்டிவிட்டு இவன் அவைகளை அனுபவிக்கிறான் என்பதுதான் நெசம் என்றான். பால்பாயாசம், சக்கரைப் பொங்கல், தோசை, பொங்கல், லட்டு, கள், சாராயம், மாமிசம் எல்லாம் இப்படித்தான் என்றான். /
\ பர்மா நாயக்கர் அங்கு வந்ததும் முதல் காரியமாக ஒரு காரை வீடு கட்டினார். வீடு கட்டி முடிந்ததும் குடும்பத்தில் யாராவது ஒருத்தர் சாகணும் என்கிற உலக எதிர்பார்ப்பின் படி அவரே போய் சேர்ந்தார். /
\ முப்பது வருஷம் வாழ்ந்ததும் இல்லை, முப்பது வருஷம் கெட்டதும் இல்லை என்பது கிராமத்தில் சொல்லப்படும் ஒரு சொலவம். ஒரு மனிதனுக்கோ ஒரு குடும்பத்துக்கோ ஏழ்மையானாலும் சரி சீர்மையானாலும் சரி முப்பது வருஷங்களுக்கு தான். சுழலும் சக்கரம் போல கீழே உள்ளது மேலேயும் மேலே உள்ளது கீழேயும்; இப்படி மாறி மாறி வரும் என்கிறது. /
\ "அடேய்...., மனுஷ பயலே ஒரு நீசன்தாண்டா. நாம தேவ அம்சத்துக்கு ஒசரனும்னு நினைக்கிறோம். எங்கே முடியுது. (மார்பை தொட்டு காட்டி) இங்கே இருக்கிற அழுக்கு கொஞ்சமா நஞ்சமா! உள்ளுக்கு எதெது உண்டோ, வியர்வை மாதிரி அதெல்லாம் வெளிவரத்தான் செய்யும்" என்பார். /
\ "முந்தியெல்லாம் இப்படி கடையை ஏலத்துக்கு விட்டு ஊரு தவறாமல் கள்ளுக்கடையை நிலையாக இருக்கும்படி யாரும் பண்ணியதில்லை. இது இந்த வெள்ளைக்காரன் வந்த பிற்பாடுதான். கள்ளை வியாபாரப் போட்டிக்கு உட்படுத்தியதால், போதை அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கையாக அதில் உடம்புக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை சேர்த்து விற்கும்படி ஆகிறது. இந்த அதிபோதையால் அரசுக்கும் அதை விற்பவர்களுக்கும் நல்ல காசு என்பதோடு, போதையில் கிடக்கும் மக்களின் தொகை அதிகமாக ஆக ஆக அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் திசை திருப்பப்பட்டு பலவீனப்பட்டு போகும். மக்கள் போதையில் கிடப்பது கொள்ளைக்காரர்களான வெள்ளைக்காரர்களுக்கு நல்லது. ��தனால் நாம் முதலில் நமது மக்களை போதையில் இருந்து மீட்க வேண்டும். அதோடு நமது குடும்ப பொருளாதாரத்துக்கு இந்த குடி உதவவே உதவாது ஆகையால்தான் மகாத்மா காந்தி அவர்கள் கள்ளுக்கடை மறியலையும், தனது நிர்மாணத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்" ... /
\ பூனக்கார பெட்டி - கிராம போன் பேட்டி /
\ கிராமத்து பிள்ளைகளிடம் சில ஒழுக்க முறைகளை கொண்டு வருவதற்குள் ரொம்ப சிரமப்பட்டு போனார். முக்கியமாக அவர்களை காலையில் குளிக்கும் பழக்கத்தை வருத்துவது கஷ்டமாக இருந்தது. கரிசல் கிராமங்களில் காலையில் குளிக்கும் பழக்கம் கிடையாது. உடல் உழைப்பாளிகளுக்கும் காலை குளிப்புக்கும் ரொம்ப தூரம். ...
\ வெள்ளைக்காரன் அவனோட நாட்ல விடிய விடிய தோண்டுனாலும் நிலக்கரியும் இரும்பும்தான் கிடைக்கும். நம்முடைய நாட்ல தோண்டுனா... தங்கமும் வைரமும் கிடைக்கும்! இன்றைக்கு பிரிட்டிஷ் சக்கரவர்த்தியோட கிரீடத்தில் ஜொலிக்கிற கோகினூர் வைரம் யாருடையது? நம்ம நாட்டுல இருந்து கொண்டு போன வைரம். /
\ இந்த கீரி ஆற்றை போலத்தான் கங்கை நதியும் ஒரு காலத்தில் பூமியில் உள்ள மக்களுக்கு பயன்படாமல் இமயமலையின் உச்சியில் இருந்து கொண்டிருந்தது. அதை பகிரதன் என்ற ராஜா எவ்வளவோ சிரமப்பட்டு அபாரமான மராமத்து வேலைகள் செய்து கங்கையை தரைக்கு கொண்டு வந்து பூமியை வளப்படுத்தினான். இமயமலையின் உச்சியில் இருக்கும் வரை அதுக்கு பேரு கங்கை; பூமிக்கு வந்ததும் அது ராஜாவின் பெயரான பாகீரதி ஆயிற்று. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மீது இருக்கும் கீரை ஆற்றை இந்த கரிசல் மண்ணில் பாய விட்டு இந்த பூமியை வளப்படுத்தும் நம்முடைய சுதந்திர சர்க்கார் என்றார் உணர்ச்சியோடு. /
\ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டியது இருந்தது. பட்டாபி சீத்தாராமையாவின் பெயரை சொன்னார் காந்திஜி. சீத்தாராமைய்யாவை எதிர்த்து சுபாஷ் சந்திரபோஸ் நின்றார்.
சுபாஷ் போஸ் ஜெயிக்க வேண்டுமே என்று மனம் அடித்துக் கொண்டது கிராமத்தில் இளைஞர்களுக்கு.
203 வாக்குகள் அதிகம் பெற்று, காங்கிரஸ் தலைமை பதவியை சுபாஷ் சந்திரபோஸ் வென்றார். எல்லோர் மனசும் குதுகளித்தது. "பட்டாபி தோல்வி என் தோல்வி" என்றார் காந்திஜி. ... யுத்தம் தீவிரமாகியது. எந்த நிமிஷமும் ஹிட்லர் ஜெயிக்கலாம் என்று பேசிக் கொண்டார்கள். ஹிட்லரோடு முசோலினியும் ஜப்பானும் சேர்ந்து கொண்டதால் இவர்களை "மும்மூர்த்திகள்" என்று கிராமத்தில் குறிப்பிட்டு பேசினார்கள். /
\ பலத்த போலீஸ் பாதுகாப்பிலிருந்து மாறுவேடம் போட்டுக்கொண்டு தப்பிய சுபாஷ், "ஜியாவுதீன்" என்கிற பெயரில் போலி பாஸ்போர்ட்டுடன் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு புறப்பட்டு போனார். போகும் வழியில் அவர் தன்னுடைய பெயரை "சிக்னார் ஒர்லாண்டோ மஸோட்டா " என்று மாற்றி வைத்துக்கொண்டார் அவரிடம் இத்தாலிய பாஸ்போர்ட் இருந்தது. /
\ "நீ வேணாலும் பாரு! இந்த யுத்தத்தின் முடிவில் பல நாடுகள்ல உண்மையான மக்களாட்சி மலரும். இப்போ இருக்கிற இந்த பிரிட்டிஷ் வல்லரசு எழுந்திருச்சு கூட நிக்க முடியாம போயிரும் அப்ப நாம இந்த வெள்ளைக்காரனோட சண்டை போட கூட வேண்டாம்; எந்திரிச்சு நின்னா போதும்! ஓட்டம் பிடிக்கிறத தவிர வேற வழியில்லை" /
/ குழந்தைகள் வீடு கட்டி விளையாடிவிட்டு அதை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவைத்துவிட்டு போவதில்லை. காலால் 'ஒழப்பி' அழித்துவிட்டுதான் போறது வழக்கம். 'இவ்ளோ' பெரிய்ய இந்தியாவை எப்படி விட்டுட்டு போறது!
சுய ஆட்சி பெறுவதற்கு முன்னால் ஒரு இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் - முஸ்லிம் லீக் தலைவர்கள் கூடி பேசி, மத்தியில் அமைக்கும் அந்த அரசில் ஆளுக்குப் பேர்பாதி என்று தீர்மானித்து மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சிக்கு 40% முஸ்லிம்களுக்கு 40% என்று ஒப்புக்கொண்டு(மீதமுள்ள 20% மற்ற கட்சிகளுக்கு) அந்த தீர்மானத்தை எடுத்துக் கொண்டு வைஸ்ராய் வேவலிடம் இரு கட்சித் தலைவரும் சேர்ந்து நேராக கொண்டு போய் கொடுத்தார்கள்.
இவர்கள் இப்படி ஒன்று சேர்ந்து வருவார்கள் என்று வேவல் பிரபு கனவிலும் நினைத்திருக்கவில்லை! இவர்களின் ஒற்றுமை இன்மைதான் அவருக்கு துருப்பு சீட்டாக இதுவரை இருந்து வந்தது.
அவர்கள் கொடுத்த தீர்மானத்தை எடுத்துக்கொண்டு வைஸ்ராய் வேவல் லண்டனுக்கு பறந்தார். தீர்மானத்தை பார்த்த லண்டன், 'ஓஹோ கதை இப்படி போகிறதோ' என்று நினைத்து, அதில் ஒரு மாற்றத்தை செய்தது. வெளித்தோற்றத்தில் அந்த மாற்றம் அல்பமாக தெரியும்; ஆனால் தெரிந்தவர்களுக்கு தான் தெரியும் பிரிட்டிஷ்காரனின் ராஜதந்திரம் என்றால் என்ன என்பது! காங்கிரஸிற்கும் முஸ்லிம் லீக்குக்கும் சமபங்கு என்பதை முஸ்லிம்களுக்கும் ஜாதி இந்துகளுக்கும் சம பங்கு என்றும் மாற்றி அமைத்தது லண்டன்!
இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டால், காங்கிரஸ் ஒரு இந்துக்களுடைய ஸ்தாபனம் என்று ஒப்புக்கொள்ள வேண்டியது வரும். அது மட்டுமல்ல, காங்கிரஸ் தன் பங்கில் ஒரு முஸ்லிமை நியமிக்க அனுமதித்தால் முஸ்லிம் லீக் தனது பங்கில் ஒரு பிரதிநிதியை குறைத்துக் கொள்ள வேண்டியது வரும்!
இப்படி ஒரு தகராறை உண்டு பண்ணி இந்த ஒப்பந்தத்தையே தகர்த்து விட்டது பிரிட்டிஷ் அரசு.
இப்படியெல்லாம் அது விளையாண்டு கொண்டிருக்கையில்தான் அந்த "1946" வந்தது ! இப்படி ஒரு 46 வரும் என்று அதுக்கு தெரியாது. / \ கிராமத்தில் மூன்று அரசியல் பிரிவுகள் - சொல்லப்போனால் நான்கு - இருந்தது. காங்கிரஸ் கட்சி, திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டிஷ்காரனுக்கு துதி பாடும் உதிரிகள். /
\ கம்யூனிஸ்ட் "பையன்கள்" போய் காங்கிரஸ்காரர்களை பார்த்து சுதந்திரதினத்தை நாம் சேர்ந்தே கொண்டாடுவோமே என்று கூப்பிட்டார்கள். "உங்களுக்கும் நம் மகளுக்கும் ஒத்துவராது; நாங்க உங்களோட சேர முடியாது. நாங்க வாங்கின சுதந்திர தினத்தை நாங்க தனியா தான் கொண்டாடுவோம்" என்று சொல்லிவிட்டார்கள்.
கொத்தனார் சாமி நாயக்கர் அதுபற்றி சொன்னார் "காங்கிரஸ்காரங்க நடந்துகிட்டது சரியாதெரியல" என்று. "அந்த பேச்சு காலே சரியில்ல" என்றார். கொஞ்சம் கழித்து எரிச்சலான கோபத்தோடு "நாங்க வழங்குன சுதந்திரம்" என்று சொல்லிவிட்டு காட்டி, "உன் அப்பன் வாங்கின சுதந்திரம்டா!" என்று சொல்லி, ஒரு வசவையும் சேர்த்து முடித்தார்.
அழகரசனும் அவனது சேக்காளிகளும் இந்த சுதந்திரத்தை வேற விதமாக பார்த்தார்கள். தமிழன் இனி இந்திய ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாக வேண்டும். பார்ப்பனியத்துக்கு கிடைத்த வெற்றி. ஏக இந்தியா என்று சொல்லி தமிழன் நசுக்கப்படுவான். எல்லா மத்திய அரசு பதவிகள், உத்தியோகங்கள் இனி நமக்கில்லை. பார்ப்பனிய அறிவு ஜீவிகளோடு அறிவுத்திறனை நம்முடைய பிள்ளைகள் போட்டிபோட முடியாது. வஞ்சகமாக நாம் முறியடிக்கப்பட்டு கொண்டே இருப்போம்.
கம்யூனிஸ்ட் "பையன்கள்" தரப்பில் எழுந்த சிந்தனை வேற விதமாக இருந்தது, "வெந்தது போதும்; முந்தியில போடு" என்கிற கதையாகிவிட்டது. வெறும் அதிகார மாற்றம் இது. எல்லாம் அப்படியே இருக்கும். வெள்ளையன் உட்கார்ந்த இடத்தில் - பதவிகளில் - கருப்பந்துரைகள் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். ஏழ்மை அப்படியே இருக்கும். எந்திர முதலாளிகள் கொழுக்கப் போகிறார்கள்; வெள்ளை மூலதனத்தோடு இணைந்து கொண்டு. சுதந்திரம் என்று சொல்லிவிட்டு பிரிட்டிஷ் காமன்வெல்த்துக்கு உள்ளே இரு என்கிற வஞ்சகத்தை இந்த "மூதி"கள் புரிந்து கொள்ளவில்லை. யுத்தத்தில் ஏற்பட்ட கண்ட செலவுகளை எல்லாம் இந்தியாவின் தலையில் கட்டப் போகிறான் அவன். இந்த வெறும் அதிகார மாற்றத்திற்காகவா இத்தனை காலம் எத்தனை தியாகிகள் மடிந்தார்கள்? இன்னும் ஒரு பெரும் போராட்டம் இருக்கு இவனுகளோட. ஆனாலும் வெள்ளையன் இந்த நாட்டை விட்டு போறது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான்.
காங்கிரஸ்காரர்களின் சிந்தனை இப்படி இருந்தது. பசுவும் புலியும் ஒரு தண்ணீர் துறையில் ஒன்று சேர்ந்து தண்ணீர் குடிக்கும் அந்த "ராம ராஜ்ஜியம்" வரப்போகிறது. இந்தியாவை பிடித்திருந்த கிரகணம் விலகி விட்டது. எல்லாம் நமது தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இனி எல்லாமே சந்தோஷமே. 'ஆடுவோமே பள்ளுபாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று'. /
A tapestry of anecdotes and pre-Independence history. We get a sense of what it is like to live in Goapallapuram in KiRa's compelling prose where adages (solavadai) and short yet effective descriptions frequently crop up. His delight in storytelling is evident and his novels double as important records of rural life and Karisal land. People's history in India is often a blur and novels like these go a great way in sharpening the picture.
In the prequel Gopalla Graamam, a group of people from Andhra migrate to the Karisal land and build the eponymous village. At the end of that novel, the British had taken control of India. This one picks up where it left off and covers the events leading up to 1947. Though it was published as two novels, it makes more sense to merge them and read as a single novel now.
I had started this book two years ago and read a significant chunk of it. I'm not sure if I'd read the whole novel back then and a sense of déjà vu was a constant companion while reading now. It reminded me a lot of Sool by Cho. Dharman which is perhaps influenced by KiRa's way of storytelling which prefers evolution of societies to individuals.
After two-thirds of its length, the novel abruptly morphs into a recollection of the freedom struggle. It was a bit jarring, but we learn a lot about many historical events. We also get a sense of different perspectives that prevailed in that day regarding independence. Some were probably right in seeing it as a mere transfer of power from the British men to the Indian elite.
Though disjointed, it is a very entertaining novel whose experimental form and preservation of the oral storytelling traditions make it one of Tamil's important novels.
இந் நாவலை மூன்று பகுதிகளாக, Non linear பாணியில் கிட்டப்பனினதும் அவனைச் சார்ந்தோரினதும் கதையை கூறும் முதற்பகுதி, கல்வி வளர்ச்சியாலும் படித்த இளைஞர்களாலும் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கும் இரண்டாம் பகுதி, இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய மூன்றாவது பகுதி என்று பகுப்பதே பொருத்தமாக இருக்கும். தனக்கென தனித்துவமான மக்கள் கூட்டம்,வழக்கங்கள், ஐதீகங்களுடன் கதையின் களமாய் விளங்கும் கோபல்ல கிராமத்தின் அப்பழுக்கற்ற "கிராமத்து வாசனை"க்கு நான் எப்போதும் ரசிகனே.மிகவும் இயல்பாகவும் தனித்துவமுடையவையாகவும் அமைக்கப்பட்ட பாத்திரங்களும் கல்வி வளர்ச்சியால் மூடநம்பிக்கைகள் அர்த்தமிழந்து போவதையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் எடுத்துக்காட்டிய விதம் சிறப்பு.அதே போல முற்போக்கு கருத்துக்களை பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் மூலமாக தகுந்த விதத்திலும் கதையோட்டத்தை சிறிதும் பாதிக்காத வகையிலும் குறிப்பிட்ட விதத்தை ரசித்தேன்.சற்று நீண்டு சுவாரஸ்யம் குறைந்ததாக தோன்றும் முதற்பகுதியையும் ஏதோ ஒரு Non fiction னை வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் மூன்றாவது பகுதிக்கும் சற்று கத்தரித்திருந்தால் நாவல் இதனை விட சிறப்பாக வந்திருக்கும் என்பது என் எண்ணம்.
ஒரு படைப்பு என்பது வெறும் அழகு சொற்களை நிரப்பி வைத்து கற்பனையில் தோன்றிய விழுமியங்களை போகிற போக்கில் அடித்துவிட்டு செல்வதல்ல… அது சமூகத்திடம் இருந்து இரத்தமும், சதையுமாக இருந்த மனிதர்களிடம் இருந்து எடுத்துக் கையாளப்பட்டு, எழுத்தாளன் தான் சார்ந்த சமூகத்தின், காலத்தின் எதார்த்ததை மக்களின் ரசனையை, உணர்வுகளை கலாப்பூர்வமாக எழுத்தில் கொண்டு வந்து வாசகருக்கு கொடுக்கின்ற மகத்தான பணியாகும்!
இப்படியான எல்லா பண்புகளையும் நிறைவு செய்கின்ற படைப்பு தான் கோபல்ல கிரமம் மற்றும் அதன் தொடர்ச்சியான கோபல்லபுரத்து மக்கள் நாவலும்… விகடனில் தொடராக 1976 ம் ஆண்டு வெளியான கோபல்லபுரத்து மக்கள் நாவல் 1991 ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது!
இந்திய சுதந்திர போரும், பிரிட்டிஷாரின் வரவும், அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய பொருட்கள் எப்படி எல்லாம் ஒரு இந்திய கடை கோடி கிரம மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்படி மக்களின் மொழியில் ஆசிரியர் கூறுகிறார்!
“என்னயிருந்தாலும் இது கண்ணுக்குக் கெடுதிதானே. நம்ப விளக்கெண்ணெய் தீபம் மாதிரி கண்ணுக்குக் குளிச்சியா இருக்குமா?”
எந்தப் புதுசு வந்தாலும் முதலில் அதை சந்தேகிக்கிறதும் அதையே குறை பேசிப் பரப்புகிறதும், பிறகு தயக்கத்தோடு, வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறதும், ஏற்றுக் கொண்டபின் பிறகு புதிய வியாதிகள் அதனால் தான் பரவுவதாக சொல்லும் வழக்கம் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதை கதை மாந்தர்களின் உரையாடல் வழியே கூறுகிறார் கிரா…
சுந்திரப் போராட்டத்தைப் பற்றி நாம் பல்வேறு புத்தகங்கள், கதைகளை வாசித்திருக்கலாம்… ஆனால், சுதந்திரப் போராட்டம் எப்படி எல்லாம் ஒரு சிறு கிரமத்து மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது… அங்குள்ள பெரியவர்கள், இளைஞர்களின் அப்போதைய எண்ணவோட்டம் எப்படி இருந்திருக்கிறது… அப்போது களத்திலிருந்த காங்கிரசு, கம்யூனிஸ்ட், திராவிட இயக்கங்களின் கருத்தாக்கங்கள் எப்படியான தாக்கத்தை அந்த மக்களிடம் கொடுத்தது என்பதை அந்த கிரமத்து மாந்தர்களின் உரையாடல் வழியாக நம்மால் அறிய முடிகிறது!
ஊர் மக்களின் இன்ப, துன்பம். கிட்டப்பன் அச்சிந்துலுவின் காதல், கலகலப்பான நகைச்சுவையான சம்பவங்கள் என வாழ்வின் அனைத்து விதமான கூறுகளையும் தன்னுடைய கரிசல் மொழியில் அழகான ஓவியமாக வடித்திருக்கிறார் கிரா!
கிராவின் புத்தகங்களை வாசிக்கும் நமக்கு ஒரு பழுத்த தாத்தாவிடம் உக்கார்ந்து கொண்டு கதை கேட்கும் அனுபவம் கிடைக்கும்… இதை நான் இதுவரை வாசித்த கிரா அவர்களின் எல்லா படைப்புகளிலும் உணர்ந்திருக்கிறேன்! இது தான் ஒரு படைப்பாளின் மாபெரும் வெற்றியாக நான் கருதுவது! தன்னுடைய படைப்பை வாசிக்கும் ஒருவனுக்கு கதையின் முலமாக தன்னுடைய சிந்தனையினை, தான் வாழ்ந்த வாழ்வை, அவரின் சமூகம் சார்ந்த கருத்தாக்கங்களை திணிக்காமல் எடுத்துச் சொல்லி முடிவை வாசிப்பவரின் கண்ணோட்டத்திலேயே விட்டுவிடுகிறார் கிரா!
சுந்திரத்திற்கு முந்திய ஒரு அழகான கிரமத்தை அதில் வாழ்ந்த மாந்தர்களின் வாழ்வை நாமும் வாழ்ந்து பார்க்க வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்த கோபல்லபுரத்திற்கு வந்து வாழ்ந்து பார்க்கலாம்!
கி ரா உடைய சிறுகதைகள் தொகுப்பு போன வருடம் படித்த போது வட்டார வழக்கு சொற்களை புரிந்துக் கொள்ள சிரமாமக இருந்தது. ��ீண்டும் அவர் எழுத்து படிப்பேன் என்று எண்ணவில்லை. ஆனால் சாகித்ய விருது பெற்ற இந்த நாவலை வாசித்தது நல்ல முடிவு!
கி ரா பிறந்து வளர்ந்து இளைஞன் ஆன காலகட்டத்தில் கரிசல் நிலமான கோவில் பட்டி சுற்றி இருந்த மக்களை பற்றியும், நடை முறை மாற்றங்கள் பற்றியும் கதை. விடுதலை போராட்ட பின்னணி. ஆனால் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். கிராம வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வருகிறார்.
Docustory போல போகும் இந்நாவலை முடித்தபோது ஒரு இனிமையான பிரயாணம் போனதாக உணர்ந்தேன்.
"கோபல்லபுரத்து மக்கள் "- கரிசல் இலக்கியத்தின் ஓர் இணையற்ற படைப்பு. இதை ஒரு புதினம் என்று சொல்வதை விட ஒரு திண்ணையில் அமர்ந்து தாத்தா-பாட்டி சொல்லும் ஊர் கதைகளைக் கேட்கும் அனுபவம் எனக்கு கிடைத்தது. இதில் கதாநாயகன் கதாநாயகி போன்ற முதன்மை கதாபாத்திரங்களை விடுத்து அந்த கிராமத்தின் வழக்கம், மரபு, உணவு போன்றவற்றை முன்நிறுத்திய தன்மை புதிதாகவும் மேன்மையாகவும் இருந்தது. "கோபல்ல கிராமத்"தின் தொடர்ச்சியாக இந்நூல் கூறப்பெற்றாலும் இரண்டின் காலமும் கதாபாத்திரங்களும் வேறாக இருந்தன. கள்ளுக் கடை அடைப்பு போராட்டம் , பாம்பே கராச்சியில் மாலுமிகளின் போராட்டம், விடுதலைப் போராட்டம் போன்ற சம்பவங்களை இந்தியாவின் தென்கோடியில் இருந்த அக்கிராம மக்கள் நுகர்ந்த விதம் பற்றிய தன்மையை விவரிக்கிறது. காதல் ,சாதி, அரசியல் என்று மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்மூன்றையும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் ஆசிரியர் கி.ரா. அவர்கள். வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய புதினம்.
முதல் பாதி இரு கதாபாத்திரம் தழுவியும், இன்னொரு பாதி சுதந்திரம் போராட்டம் பற்றி சில அரிய தகவல்களை சொல்வதாகவும் இருந்தது. தேவையில்லாமல் சில கதாபாத்திரங்களை விளக்கியும் பின் கதையில் தொடர்பில்லால் போவதும் சலிக்கும் விதமாய் இருந்தது!
*1)முன்னுரை:* கரிசல்காட்டு இலக்கியத்தில் பிதாமகர் என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்களின் கோபல்லபுரத்து கிராமம் (1978) நாவலின் தொடர்ச்சி தான் இந்த கோபாலபுரத்து மக்கள் நாவல்(1990).
கோபல்லபுரத்து கிராமம் ராஜாக்கள் காலத்தில் போர் சூழல்களில் மக்கள் இடம் பெயர்ந்து தமிழகத்தின் கரிசல் நிலம் வந்து சேர்கிறார்கள். காட்டைத் திருத்தி, விவசாயம் செய்து ஒரு செழிப்பான கிராமமாக உருவாக்கிய கதையையும், சம்சாரிகளின் வாழ்க்கையையும் மிக இயல்பாக படைத்திருப்பார். இந்த நாவல் ஆங்கிலேயர் ஆட்சியில் விக்டோரியா இந்தியாவிற்கு ராணியாக பதவி ஏற்பதுடன் நிறைவடையும்.
கோபல்லபுரத்து மக்கள் நாவல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தனது சிறு கிராமத்தில் நிகழும் மாற்றங்கள், புதுப்புது கண்டுபிடிப்புகளால் நிகழும் சுவாரசியமான சம்பவங்கள், இயல்பான மனிதர்களின் விவசாய வாழ்க்கை, எப்படி இந்திய சுதந்திரப் போராட்டம் அந்த கிராமத்தின் சாமானிய மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மிக எதார்த்தமாக படைத்திருக்கிறார.
*2)பகுப்பாய்வு:* நாவல் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் அந்த கிராமத்தின் மக்கள் வாழ்க்கையை, பழக்கவழக்கங்களை,உறவுகளை ரசிக்கும் படியாக நம் கண்முன் ஒரு காட்சிபடம் ஓடுவது போல, மரத்தின் மீது கழுகு உக்காந்து இந்த கிராமத்தை வேடிக்கை பார்க்கும் விதமாக முழு கிராமத்தின் நடவடிக்கைகளையும் மிக சுவாரசியமாக அவருக்கே உண்டான பல சொலவடை மூலம் வெடிச்சிருப்பை உண்டாக்குகிறார்.
கிராமத்து மனிதர்கள் முதல் முதலாக மண்எண்ணெய் உபயோகிப்பது, முதல் முதலாக தேநீர் அருந்தி தூக்க வராமல் தவிப்பது, அந்த ஊர் திருவிழா விளையாட்டுக்கள், உறவின்முறைக்குள் நடக்கும் பகை சண்டைகள், உடன்கட்டை ஏறும் நிகழ்வு, கல்லு கடை சுவாரசியமான பேச்சுக்கள், அந்த கிராமத்தின் ஊர் மடத்தில் ஆண்கள் கூடி பேசும் சுவாரசியமான கதைகள் என ஒரு கிராமத்தின் அனைத்து அசைவுகளையும் நம் கண் முன்னே நிறுத்தி அசைபோட வைக்கிறார்.
இரண்டாம் பாகத்தில் சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்ப கால தாக்கம் எப்படி அந்த கிராமத்தின் சலசலப்பை உண்டு பண்ணுகின்றது என்று மிகவும் விரிவாக நம் கண் முன்னே படைக்கப்பட்டிருக்கிறது.கிராமத்தில் முதல் முதலாக பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன, புது வாத்தியார்கள் கிராமத்துக்கு வருகிறார்கள். கிராமம் மெதுவாக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது மக்கள் படிப்பதற்காக தன் பிள்ளைகளை பக்கத்து ஊருக்கு அனுப்புகிறார்கள்,
மாணவர்கள் தன் குடிமிகளை துறக்கிறார்கள், டீக்கடை, உணவு கடை மற்றும் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்க வியாபாரிகள் கிராமத்திற்கு வருகிறார்கள்.டீக்கடைகளுக்கு செய்தித்தாளின் வரத்துமூலம் கிராம மக்கள் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அறிந்தும் விவாதித்தும் கொள்கிறார்கள்.ஆங்காங்கே நடக்கும் சுதந்திரப் போராட்ட ஒடுக்கு முறைகளை எண்ணி மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் பலவிதமான கட்சி கொடிகள் கிராமத்தில் வந்து சேர்கிறது.
ஆங்கிலேயர் கப்பல் படையில் உள்ள இந்திய மாலுமிகள் நடத்தும் போராட்டத்தை மிக விரிவாக காட்சிப்படுத்துகிறது.இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை கிராமத்தில் உள்ள பல்வேறு கட்சியினரை கட்சியினர் எப்படி எடுத்துக் கொண்டார்கள், எப்படி கொண்டாடினார்கள் என்பதுடன் நாவல் நிறைவடைகிறது.
*3)எழுத்து நடை:* கி.ராஜநாராயணன் அவர்கள் எழுத்து அனைவருக்கும் மிக நெருக்கத்தை உண்டாக்கக்கூடிய மாபெரும் கதை சொல்லியின் எழுத்து. இந்த எழுத்து மூலம் கரிசல் வட்டார மொழியை மிக இயல்பாக வாசகர்களுக்கு கடத்தக்கூடியவர்.
*4)வரலாற்று / கலாச்சார சூழல்:* கரிசல் வட்டத்தில் இடைசெவல் கிராமத்தில் தன் இளமை காலங்களை வாழ்ந்தவர் கி.ராஜநாராயணன். அவர் கதை மாந்தர்களும் அவர் கதைகளும் அந்த பகுதியை சுற்றியே அமைந்துள்ளன. கோபாலபுரத்து மக்கள்,கோபல்லபுரத்து மக்கள் ஆகிய இந்த இரண்டு நாவல்களில் அவர் ஏறத்தாழ 200 ஆண்டு கால கிராமத்தின் நிகழ்வுகளை கதை படைத்திருக்கிறார்.
*5)முடிவுரை:* இந்த புத்தகத்தின் மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் கிராமங்களில் வாழ்க்கை சூழலும், முன்னோர்களின் வாழ்வியலை, அன்றாட வாழ்க்கையை எப்படிக் கடந்தார்கள், ஒரு சம்சாரியின் பொழுது எப்படி விடியும் எப்படி கழியும், கிராம சடங்குகள், நம்பிக்கை பழக்கவழக்கங்கள். மக்கள் எப்படி பஞ்ச காலங்களில் பிழைத்தார்கள் என்று விரிவாக அசை போட முடிகிறது.
பின்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வரும் புது விஷயங்கள்( மண்ணெண்ணெய்,ரயில்,பேருந்து,) மூலம் கிராமத்தின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது. பின்பு கல்வி, அரசியல் கட்சிகளின் மூலம் கிராமம் எப்படி அடுத்த அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்கிறது. நம் தாத்தாக்கள் எப்படி சுதந்திர காலகட்டங்களை எதிர்கொண்டிருப்பார்கள் அல்லது எப்படி அறிந்திருப்பார்கள் என்று அவர்களுடன் இருந்து பயணித்த ஒரு அனுபவம்
இந்த புத்தகம் இந்திய கிராமங்களின் 200 ஆண்டு கால வளர்ச்சியின் ஒரு படிமம் தான். இதன் மூலம் ஒரு கிராமம் இப்படி வெளிப்புற சூழ்நிலைகளால் பரிணாம அடைகிறது என்பதை புரிந்து கொள்ள உதவியது.
This entire review has been hidden because of spoilers.
2-3 மாதம் ஆனது படிக்க. ஒரு வரியில் - முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றது.அதன் பின் செம ரகளை.
ஒரு கிராமம்,சுதந்திர முந்தைய காலம் , அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்வின் முறைகளின் துவங்குகிறது.மக்களின் வேறுபாடுகள் , அவர்களின் விவாசாய முறைகள் , ஒரு கோவில் மாடு எப்படி நடத்தப்படுகிறது,ரயில் பெட்டி ,தேனீர், அரிசி,பேட்டரி லைட் (torch light), பேனா இவை அனைத்தும் அங்கு அறிமுகமாகும் பொழுது மக்களின் அனுகுமுறை எப்படி இருந்தது என்பதை படிக்கும் பொழுது நம���்கு சிரிப்பு வந்தாலும் நாம் அந்த நேரத்தில் இருந்திருந்தால் அப்படி தான் நடந்திருப்போம் என்றே தோனுகிறது.சுதந்திர வேட்கை அங்கே பரவும் பொழுதும் , காங்கிரஸ் , காந்தி பற்றி வரும் செய்திகள் அங்கு கிடைக்கும் பொழுதும் மக்களின் உணர்வு எவ்வாறு இருந்தது.படிக்க படிக்க நம்மை அறியாமல் ஓர் உணர்வு ஏற்படுவது நிச்சயம்.
சுதந்திரம் கிடைக்கும் பொழுது மக்களின் எண்ணங்களோடு இந்த புத்தகம் முடிகிறது.காந்தி சொன்ன சுதந்திர பற்றிய கருத்து "ஒன்றுமில்லை" என்ற வார்த்தையோடு முடிகிறது..
சில முக்கியமான விஷயம் என்னை பாதித்தது..
1.கள்ளு கடை எதிர்ப்பு நடக்கும் போது
அதை ஆதரிப்போர் : மக்களுக்கு போதை பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் அரசாங்கத்துக்கு வருமானம் மட்டுமில்லை ; எதிர்த்தும் போராடமாட்டார்கள்.கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் ஜன்ங்களுக்கு கோபம் ஏற்படுவதற்கு பதில் போதையை ஏற்படுதிவிடுவது ஒரு தந்திர உபயம்.வெள்ளைகாரன் மட்டுமில்லை உலகத்த்ல் உள்ள அனைத்து அரசாட்சியும் செய்யும் ராஜதந்திரம்.
அதை எதிர்ப்போர்: (இன்றும் மதுவிலக்கு என்றதும் அதை எதிரிப்போர் கூறும் காரணங்கள் இதுவாகவே உள்ளது)
#இரு தரப்பு வாதமும் ..இன்றும் அதை போல் தான் இருக்கிறது
2.காந்தி மீது மக்களுக்கு இரண்டு விஷயத்தில் வெறுப்பு ஏற்பட்டது.
*பெஷாவில் மக்களை சுட மறுத்த கூர்க்கா சிப்பாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.காந்தி அவர்களுக்கு அதராவாக ஏதும் பேசாமல் இருந்தார்.அதற்கு ஒரு மொக்கை காரணம் சொன்னார்.மேலதிகாரி சொன்னதை கேட்காமல் கடமை தவறிவிட்டார்கள் என்றாராம்.
*203 வாக்குகல் அடிகம் பெற்று காங்கிரஸ் தலைமை பதிவியை போஸ் வெண்றார்.எல்லோர் மனசு குதூகலித்தது.ஆனால் "பாட்டாபி தோல்வி என் தோல்வி" என்றாராம் காந்தி.மற்றும் பகத் சிங் விஷயத்தில் அவரது நிலைபாடு.
#இவை பற்றி படிக்கும் போது அவர் மேல் கொண்ட நன்மதிப்பு குறையதான் செய்கிறது
3.H.M.I.S தல்வார் - கப்பல்படை பயிற்சி தளம்
இங்கு சிறு எதிர்ப்பாய் துவங்கிய போராட்டம் ஆங்கிலய அரசை நடுங்க செய்ய அள்வுக்கு பெரிய போராட்டமாய் மாறியது.மற்ற ராணு துறைகளும் இதில் ஆதரவு தெரிவிக்க .கப்பல் படைக்கு ஆதரவாக விமானபடை ஊரவலம் செய்தது இந்திய விமான படை.பம்பாய் முழுதும் மக்களின் ஆதரவு பெரிதாக இருந்த்தது(மக்களை அரசு ஓடிக்கிய முறை ..நம்மை மென்மேலும் வருத்தும்). அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை.கடைசியில் நமது தலவர்களை நாடியது.
போராட்டத்தை திருப்பி பெறுங்கள் ,ஏதும் செய்யாமல் பாத்துக்கிறோம் என்று வாக்குறுது கொடுத்த பட்டேல் உள்பட திடிரென அமைதியாக இருந்தார்கள்.பிற்கு ப்ரிடிஷ் மாலுமிகளை கொன்று குவித்தனர்.
#வெள்ளையன கூட மன்னித்திடலாம்..நம்ம தலைவர்களை மன்னிக்க முடியாது.ஒரு கதாபாத்த்ரம் சொல்வது ஏனோ என்னை பாதித்தது.
"கோபல்ல கிராமம்" புத்தகத்தோட தொடரா இந்த புத்தகத்தை படிக்க சொல்லி கி.ரா தன்னோட அகாடமி விருது விழால்ல பேசியிருந்ததால நல்லவேளையா நான் கோபல்ல கிராமம் மொதல்ல படிச்சேன்... கண்ணடிப்பா இந்த புத்தகத்தை படிக்கிறதுக்கு முன்னாடி கோபல்ல கிராமத்தை படிச்சிருங்க...
சாஹித்திய அகாடமி விருது வாங்கின நாவல் இது. இது வரலாற்று நாவல்னு சொல்லலாம், இல்ல சிறு (சொலவடை) கதைகளை தொகுப்பா கொண்ட ஒரு நெடுங்கதைனு சொல்லலாம்... இந்த புத்தகத்திலயும் நெறைய கதாபாத்திரங்க வரும், தினமும் கொஞ்ச கொஞ்சமா படிக்கிறவங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆடிக்கும் அமாவாசைக்கும் படிகிறதா இருந்தா, கொஞ்சம் கஷ்டம்தான். நெறைய பாத்திரம் மறந்து போகும், தொடர்ந்து படிக்கச் செரமப்படனும்...
கதையோட முதல் பாதில கிட்டப்பா தான் ஹீரோ, அச்சிந்த்தலு தான் ஹீரோயின்.. ஆரம்பத்தில இவகளோட காதல் கதைகளும், பிரிவுகளும், ஏக்கங்களும் கதையோட நகந்தாலும், கடைசில முடியரப்ப அதிகம் பேசப்படாத சுதந்திர போராட்டத்தை அழகா சொல்லிருக்கார்..
நல்லாயிருந்த நாலைஞ்சு விஷயம்:
1. காரி - காளைமாட்டை வச்சு மாடுகளோட கலவி கதைகள், அப்புறம் கோயில் மாடு எப்படி வந்துச்சுனு சொல்ற கதைகள். 2. ஜல்லிக்கட்டு இப்படியும் கூட ஆரம்பிச்சிருக்கலாம்னு சொல்லற இன்னொரு கதை.. 3. ஆங்கில படிப்பு பத்தி சொல்லப்பட்ட விஷயங்கள, பேணா, டார்ச் லைட் அறிமுகத்தில மக்களோட பார்வைகள்.. 4. ஆங்கில ஆட்சியின் சில விஷயங்கள். உதாரணமா, பகத்சிங் கதை, கொடிகாத்த குமரன் கதை.. இதெல்லாம் சம காலத்தில நடிக்கிறதை அழகா சொல்லிருக்காரு... 5. முக்கியமா கள்ளுக்கடை ஒழிப்பு.. அப்போதிருந்தே இதே பிரச்சனைதான் போல. 6. செவ்வாச்சாமி கும்பிடும் வழக்கத்தை விவரிப்பது... அதோடு வரும் டார்ச் லைட் கதைகள். 7. சாதிமத பேதங்களை புறக்கணிக்கும் சிலரோட கதைக்கள்... 8. பம்பாய் கடற்கரையில் தொடங்கும் இந்திய மாலுமிகள் யுத்தம்.. 9. சில முக்கிய சுதந்திர தியாகிகளின் உண்மை முகங்களை பேச்சுவாக்கில சொல்லும் விதம்...
நல்லா இருந்திருக்கலாம்னு ஒருசில விஷயம்: 1. கள்ளுக்கடையை ஒளிச்சிட்டா மக்களுக்கு சுதந்திர மோகம் வந்திரும்னு சொல்றது கொஞ்சம் அதிகமா இருக்கு... பொதுவா இங்கிலீஷ்காரன் கூட்டம் கூட விடக்கூடாதுனு தான் நினைச்சிருப்பான்.. 2. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எல்லாத்தையும் சரியாய் புரிஞ்சுக்கனும்னா ஒரு வரைபடமோ அல்லது குறிப்போ எடுத்துக்கணும்.. நான் அப்படியெல்லாம் செய்யலை.. தொடர்ச்சியா படிச்சிட்டேன்..
ஆகமொத்தம் தொடர்ந்து படிக்கிறவங்க, சுதந்த��ர போராட்டம் பற்றிய நாட்டமுள்ளவங்க, கிராமத்து காதலை ரசிப்பவங்க, சொலவடை கதைகளையும் , நாட்டுப்புற பாடல்களையும் விரும்புறவங்க கண்டிப்பா இந்த புத்தகத்தை படிக்கணும்..... மத்தவங்களும் படிக்கலாம்.. :)
ஒன்றாம் பாகம் கொடுத்த அதே அனுபவம் இதுவும் கொடுத்தது. நாட்டின் சுதந்திர போராட்டத்தை ஒரு மிகச்சிறிய கிராமத்திலிருந்து காண்பது மிக நல்ல அனுபவமாக இருந்தது. சில முக்கிய தகவல்களையும் இந்த நாவல் மூலம் அறிய முடிந்தது. முக்கியமாக கப்பல் படையின் போராட்டம், இந்திய சுதந்திர போராட்டத்தில் மறக்கடிக்கபட்ட கம்யூனிஸ்ட்கள் பங்கு ஆகியவை.
இந்த நாவல் நாயக்கர் சமுதாயத்தின் ஆவண நாவல் என்றே சொல்லலாம். அருமையான வருண ணை மற்றும் கற்பனை கலந்த அந்த வயதான பாட்டியின் கதைகள் நம் பிந்தைய தலைமுறைக்கு எப்போதும் கிடைக்காது. அவர்கள் இது போன்ற நாவலை படித்தால்தான் உண்டு.
This is one of the greatest piece in tamil literature. Who am i to rate Ki.ra. A good meal gives u a good after taste this book will give u a good after taste for u r life ti,e
This is sequel of "Gopallapurathu Gramam". The first part finishes with English people coming to India, the second starts there. But the realization around period comes only in the later part of the book. The books starts in a linear flow of going from one people to another, explaining incidents around the character and linking the character with the next. The linear way of story telling was interesting and this sets the tone of the village which the reader has to envision as a whole.
The sequence of events though are linked, some feel happening around different period. While reading, the reader might feel the story not to be continuous, while thinking on the whole, reader could understand that the author has tried to depict different phases of era thorough one linear story telling which is quite difficult. May be to depicts different times the story telling was selected to be linear - not sure.
Some of the things like kovil kalai and why it is very much needed for a village, how a village sees different people, politics of village and different stories of people in one village makes it an interesting read. In whole if you see from the initial stage of how the village was formed to the final stage when the village was having different people with different views and lives. The entire wholeness of forming, storming and norming of a village could be visualized through the entire story which is the greatness of the story.
During independence struggle how people with different views coexisted. How different believers even wanted English to continue. Full purview of understanding why English men actually left India could be understood by subtle story telling. The clarity that this books brings in to the final days of independence without touching partition (which many people tend to touch and fail to explain other things) is very good and throws light into understanding the environment then.
More than reading events, it will stay if it is mentioned as a story and conversation of characters. This books is a standing example of the same. Though I took long tine to finish the book. The good thing is that the story stick to my mind and that is impact this book offers. But also has to mention the boring middle portion of the book, where the linear story makes the reader feel a bit exhausted.
In whole a very good book, to understand more around Independence with a different point of view this books helps a lot. Go for it highly recommended.
Actually it's an easy read book which tells the story of how the Independence struggle reached a very remote village in Tamilnadu and how its people were affected by it. I rated it 3 stars as a novel, because it doesn't have a story like a novel but more like the lives of villagers and their life. Even the most intense part of the story is an oral description of the revolt of Indian naval officers under British Army and how they were let down by the national leaders of all parties. Again, in this book I find an attempt to portray Communist parties during the Independence struggle as big as congress and muslim league. I am not sure about the political viewpoints of the author but I think the author's personal political views has influenced the way he presented historical incidents.
Still I recommend it as a read for anyone who is interested in knowing how the people in remote villages lived their life during the British occupation and how were they influenced by the freedom struggle.
Just like its prequel, Gopallapurathu Makkal is a delightful ethno-fiction. Like Naipaul's Miguel Street, it looks at the life of people in a village over a few decades. The first part of the book - with its episodic nature, quirky humour, navigating between the several characters much like Miguel Street and its own prequel. The second book is far more ambitious. It looks at the birth of a nation through the eyes of the very village we have come to know - a village far removed from civilization coming awakening, ironically due to the better infrastructure created by the colonial government, going from scepticism to nationalistic fervour to political realism. With a fair bit of history thrown in, it makes for an unique read among Indian fiction.
Its a sequel of the book "Gopallapurathu Gramam". This book continues time line from 1st book and ends on India's independence. It continue to talk about people from the region by travelling around a love story in the 1st half of the book. It talks about how the village reacts to changes coming from town/city side in later chapters. The novel expands to pre-independent era and talks about various independent events and influence of political parties in villages. Here the novel switches from novel mode to article mode and felt little dragging. Overall an interesting read despite of few dragging chapters
கோபல்லபுரத்து மக்கள் கி.ராஜ நாராயணன் புத்தகத்தின் தலைப்பிற்கு ஏற்றாற் போல கோபல புர மக்களை பற்றிய கதைதான் இந்த புத்தகம்... இதன் முதல் பாகம் கோபல்ல கிராமம் புத்தகத்தில் கிராமம் உருவான கதை இருக்கும்.. இந்த புத்தகத்தில் அங்கு உள்ள மக்களின் வாழ்க்கை முறை. நவீன வாழ்க்கை முறை வர வர அது எப்படி மாற்றமடைகிறது.... டார்ச் லைட்டில் துவங்கி டீ தூள் வரை கிராமத்திற்கு எல்லாம் எப்படி வருகிறது என்பதை புத்தகம் பேசுகிறது...
கதையில் இந்திய சுதந்திர போர் கிராம மக்களிடையே எப்படியான தாக்கத்தை உண்டாக்கியது என்பது கடைசி 100 பக்கங்களில் பேசப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் நடந்த ராணுவ புரட்சி இந்திய விடுதலைக்கு முக்கிய காரணம் என்பது புத்தகத்தை படிக்கும் போது தெரிந்தது... நல்ல புத்தகம்... ❤️❤️❤️
"கோபல்லபுரத்து மக்கள்" - கி.ராஜநாராயணன் எழுதிய இந்த புத்தகம் ஒரு அற்புதமான படைப்பு! முதல் புத்தகம் "கோப்பல்ல கிராமம்" ஒரு கிராமத்தின் உருவாக்கத்தை பற்றிப் பேசினால், இந்த தொடர்ப் புத்தகம் அந்த கிராமத்து மக்களின் வாழ்க்கையை, அவர்களின் பண்பாடுகளை, அழகான சம்பவங்களை நம்மோடு பகிர்கிறது.
கதையின் இரண்டாம் பாதி, இந்தியாவின் முன்னோடி சுதந்திரப் போராட்டம் மற்றும் கிராமத்து மக்களின் அந்தக் காலத்து வாழ்க்கையை கலந்துரையாடுகிறது. கதை கிராமத்தின் இயற்கை அழகு, மக்களின் அன்பும், துயரங்களும் கண்ணுக்குத் தெரியும்படி புனையப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வாசித்த சிறந்த புத்தகங்களில் ஒன்றாக இது நிலைத்துப் போகும்! கவனிக்கப்பட வேண்டிய ஒரு மாஸ்டர் பீஸ்! 📖✨
கோபல்ல கிராமத்தை படித்து முடித்த உடனே இதையும் சேர்ந்தால் போல் படித்தால் அதன் சுவை கூடுதலாக இருக்கும் என்பது என் எண்ணம் . இதில் ஆந்திர நாட்டிலிருந்து துலுக்க ராஜாவால் விரட்டப்பட்டு தெற்கு நோக்கி நகர்ந்து ஒரு கிராமத்தை நிறுவிய மக்கள் எவ்வாறு வாழ்க்கை முறையை அமைத்து கொண்டார்கள் என்பது கதை களமாக உள்ளது . இதில் ஒரு கிராமத்தில் வாழும் பலப்பல பெயர்கள�� தக்க காரணப்பெயர்களுடன் உள்ளது மிக சிறப்பு . இன்றும் பல கிராமங்களில் காரண பெயர்களே கூப்பிடும் பெயராக உள்ளது என்னை போன்ற கிராமத்தான்களுக்கு தெரியும் . அருமையான வாசிப்பு அனுபவம் கொடுத்த கி ரா தாத்தாவை நன்றியுடன் வணங்குகிறேன் .
புத்தகம் படிக்கும் ஒருவர் ஒரு பிறவியிலேயே ஆயிரம் முறை வாழ்வதாக சொல்வார்கள். கோபல்லபுரத்து மக்களில் ஒருவனாக வாழ்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. கோபல்ல கிராமத்தின் நீட்சியே கோபல்லபுரத்து மக்கள். கி.ரா.வின் எழுத்தில் கரிசல்காட்டு மணம்.
கடைசி சில அத்தியாயங்கள் கரிசல் காட்டை விட்டு இந்தியா சுதந்திரம் அடைந்த நிகழ்வைப் பற்றி விலாவரியாக விவரிப்பது தடம் மாறியதை போல இருந்தது.