ஆனந்த விகடனில் சர்வதேசக்குழந்தைகள் ஆண்டில் ஒரு கதை எழுதுமாறு ஆசிரியர் பாலசுப்ரமணியன் கேட்டிருந்தார். நான் அதுவரை குழந்தைகளுக்காக அதிகம் எழுதியதில்லை. ‘அன்று உன் அருகில் ' என்ற நாவல் சிறுவர்கள் பற்றிய பெரியவர்கள் கதை. பூக்குட்டி ஒன்றுதான் சற்று முனைப்புடன் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து அதிகம் விலகாமல் எழுதப்பட்ட கதை. - சுஜாதா
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
சுஜாதா குழந்தைகளுக்காக எழுதிய கதை. சிறுமிகள் விம்மு, வேலாயி, அவர்கள் நாய் பூக்குட்டி மூணு பேருக்கும் என்ன நிகழ்கிறது என்பதை கலர் கலராகச் சொல்லும் கதை.
ஒரு சிறுமியின் பார்வையில் எழுதிய புத்தகம் இது . குழந்தை மனதோடு படிக்க வேண்டும் இல்லாவிடில் குழந்தை மனதை புரிந்து கொண்டவர்கள் படிக்க வேண்டும் . அந்த குட்டி கரடி பொம்மை - ஜம்பு . அதுவும் விம்முவும் பேசும் காட்சிகள் . வாவ் சொல்லும் ரகம்.செம்ம சூப்பரா கீது பா. உயர்தர வர்கத்து பெற்றோர்கள் . சின்னஞ்சிறு வயதினில் ஏழ்மை - உயர்வு பார்காத நட்பு . அதை பெற்றோர்கள் பார்வையிலிருந்தும் சொல்லிருக்கிறார் . சேரி பெண்ணுடன் தன குழந்தையை பழக விடாமல் பார்த்து கொள்ளும் தாய் . நட்பு என்ன காசு பணம் பார்த்து வருவதா? தோழியை பார்க்கமுடியாமல் மனவேதனைகுள்ளாகும் குழந்தை . நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் குழந்தைகள் மட்டும் தான்.அன்றைய பொழுதில் அந்த நேரத் தேவை மட்டுமே அவர்களுக்குப் பெரிது. சாமி நான் வேண்டிகிட்டது மட்டும் நடந்தா நான் உனக்கு நிறைய சாக்லேட்ஸ்லாம் தரேன் பொய் சொல்லாம இருக்கேன் என்று அந்தக் குழந்தை வேண்டிக் கொள்ளும்போது அப்படியே தூக்கி கன்னத்தில் முத்தமிட வேண்டும் போல் தோன்றியது . ட்விஸ்ட் சுச்பென்ஸ்இல்லாத கதை தான் . ஆனாலும் படிப்தற்கு போர் அடிக்கவில்லை . சில மணி நேரங்கள் விம்முவின் உலகத்தில் வாழ்ந்தது போல் ஒரு உணர்வு . இறுதி பக்கம் நெருங்க நெருங்க விம்முவின் தவிப்பு நமக்கும் தொற்றி கொள்கிறது .
கதையும் சொல்லி கூடவே ஒரு நீயுசும் சொன்னது சூப்பர்ப்பா !! வாத்தியரே நீ கெத்துபா ! :
கள்ளம் கபடம் இல்லா இரு குட்டிப் பெண்களின் நட்பைப் பேசும் நாவல் பூக்குட்டி. நாவலின் பெயரைப் போலவே மென்மையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற இந்நாவலின் கதாநாயகிகளான குட்டிப் பெண்கள் விம்மு மற்றும் வேலாயின் கதாபாத்திரங்கள்.
பொருளாதாரத்தில் மேல்தட்டு வகுப்பினைச் சேர்ந்த பெற்றோரின் மகள் விம்மு . வறுமை படுகிற குடும்பத்தில் பிறந்த குட்டிப் பெண் வேலாயி. வேலாயி மற்றும் விம்முவின் நட்பிற்குப் பாலம் வகுக்கிறது வேலாயி வளர்க்கும் பூக்குட்டி எனும் நாய்க்குட்டி. இக்கதையின் மற்றுமொரு சுவராசியமான கதாபாத்திரம் விம்முவிடம் மட்டும் வாய்பேசும் விம்மு வைத்திருக்கும் ஜம்பு எனும் கரடி பொம்மை. தங்கள் வசதிக்கேற்ற மாதிரி தங்கள் மகள் விம்முவும் பணக்கார தனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விம்முவின் பெற்றோருக்கு விம்மு - வேலாயி நட்பு அதிர்ச்சியையும், வெறுப்பையும் தருகிறது. விம்முவையையும் வேலாயியையும் பிரிப்பதற்காக அவர்கள் நடத்திய செயல் விம்முவின் உடல்நிலையை மோசமடையச் செய்கிறது. மேலும் வேலாயி மேல் விம்மு கொண்ட அன்பானது வேலாயியை தேடி விம்முவை ஜம்புவுடன் அந்த சிறு வயதிலேயே ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ள வைக்கிறது. வேலாயி விம்முவின் மேல் வைத்திருக்கும் அன்பு ஒன்றும் சளைத்ததன்று என்பதைச் சொல்வதற்கு வாசகர்களுக்கு நாவலின் இறுதிப் பக்கங்களில் ஒரு Twist வைத்திருக்கிறார் சுஜாதா.
சிறுவர்களுக்கென்று சுஜாதா எழுதிய இந்த நாவல் எந்த விதப் பேதமுமின்றி மலரும் நட்பு எவ்வளவு உயர்வானது என்ற நன்னெறி பண்பினை உணர்த்துகிறது. மேலும், அன்பையும் நேர்மையையும் தாங்கி நிற்கும் விம்முவின் வீட்டில் வேலை செய்யும் சுகவனம் மற்றும் வேலாயின் தந்தையான கந்தசாமி போன்ற கதாபாத்திரங்கள் மனிதர்களின் பெருமை வசதியோ பணமோ அன்று, மேலே சொல்லப்பட்ட குணங்களே என்ற தார்மீக மதிப்புகளையும் பெரிய வாசகர்களிடமும் நினைவுப்படுத்தி செல்கிறது.
Sujatha's book is always a pleasure to read. In this, he takes the story from the view of a young girl - the world she lives, the people she interacts, the doll she talks to, the doll talking imaginatively just to her. He also portray the societal philosophy through the young girl's eyes. A very nicely written story with characters more real.
தமிழில் மிக பிரபலமான எழுத்தாளர்களில் முக்கியமானவர் சுஜாதா. இலக்கியம் மட்டுமின்றி திரை துறையிலும் பணியாற்றியவர். பல ரகங்களில் கதைகளை புனைபவர் அவர். திகில், மர்மம், குடும்பம், விஞ்ஞானம் என்று பல ரகங்கள். ஆனால் அவர் சிறுவர்களுக்காக ஒரு குட்டி புதினம் எழுதியுள்ளார் என்று தெரிந்ததும் அதை வாசிக்க வேண்டும் என்ற முடிவு இந்த 'பூக்குட்டி' யில் வந்து நின்றது.
செல்வ செழிப்பில் வளரும் ஒரு பெண் குழந்தை விம்மு. அப்பா, அம்மா,வேலையாட்கள், பெரிய வீடு, பொம்மைகள் என்று எல்லாம் இருந்தும் அவளிடம் ஒன்று மட்டும் இல்லை. ஒரு நட்பு. அவள் படிக்கும் பள்ளியின் பக்கம் இருக்கும் சேரியை சேர்ந்த வேலாயி என்கிற ஒரு ஏழை பெண் சிநேகிதம் கிடைக்கிறது. தன் தராதரத்திற்கு ஏற்ற நட்பில்லை என்று சொல்லியும் அதை சட்டை செய்யாமல் நட்பு வளர்கிறது. வேலாயியின் நாய் பூக்குட்டி உடனான நட்பு பெரிதும் வளர்கிறது விம்முவிற்கு. அந்த நட்பு தடுக்கப்பட விம்மு நோய்வாய்ப்படுகிறாள். வேலாயி குடும்பம் அங்கிருந்து விடுகிறார்கள். மீண்டும் அவர்களை கண்டடைகிறார்களா விம்முவிற்கு என்ன ஆச்சு, பூக்குட்டியுடன் சேர்கிறார்களா என்று அழகாக நகர்கிறது கதைக்களம்.
மிகவும் மென்மையாக எழுதப்பட்டிருக்கும் கதை இந்த பூக்குட்டி. வெறும் 80 பக்கங்கள் மட்டுமே. ஆனால் அந்த 80 பக்கங்களுக்குள் நிறையவே சொல்லியிருக்கிறார். குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற உலகத்தினுள்ளும் வாழ்கையினுள்ளும் நாம் ஊடுருவி செல்கிறோம். ஒரு குழந்தையின் சந்தோசம் அவர்கள் உடுக்கும் உடையோ வாழுமோ வீடோ பொறுத்ததன்று. அவர்களின் மெல்லிய இதயத்தில் மலரும் உணர்ச்சிகளே. அவர்கள் கண்களால் காணும் இவ்வுலகையே. தராதரம், பணம், கெளரவம் இதெல்லாம் அவர்கள் அகராதியில் இல்லை. தராதரம் பார்க்கும் விம்முவின் அம்மா அதற்க்கு நல்ல உதாகரணம். விம்முவிற்கும் வேலாயிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணை நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. காசு பணம் இல்லாவிட்டாலும் அவர்கள் வீட்டில் கிடைக்கும் சந்தோசம்; செல்வ செழிப்பில் திளைக்கும் விம்மு வீட்டில் இல்லை. விம்மு மற்றும் வேலாயி யின் அப்பாக்களின் பாத்திரங்கள் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. ரெண்டு தரப்பட்ட வாழக்கை சூழ்நிலைகளும் சுஜாதா அருமையாக ஒப்பிடுகிறார். ஒரு பக்கம் அணைத்து வசதிகள் இருந்தும் பாசம் நட்பு இதற்கெல்லாம் சூழல் இல்லை. மற்றொருபுறம் அன்னாடம்காச்சிகள் ஆனாலும் சந்தோஷம் நிறைந்த சூழல். சில பக்கங்களே கொண்ட கதை என்பதால் எங்கும் நமக்கு சலிப்பு தட்டாது. கதையின் முடிவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு சில நல்ல கதாபாத்திரங்களை கொண்டு மிக அழகாக சொல்ல பட்ட ஒரு குட்டி கதை இது. ஒரு குழந்தையின் மனதை போன்ற ஒரு மெல்லிய கதை. அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு சிறு புதினம் இது. அதுவும் சுஜாதாவிடம் இருந்து வருகிறபோது சொல்லவா வேண்டும்!!!
This entire review has been hidden because of spoilers.
A chocolate pookkutti, a short 80 page puppy to play with.
Friendship between two toddlers and dog.the story display life of a posh girl and slum girl binding by a puppy "pookkutti". author explore the mindstate of child along with social state and philosophical ideologies.
Author took a special care while writting the story in perspective of a three year old and their world.