கி. ராஜநாராயணன் காட்டும் உலகம் விந்தையானது அதில் நடமாடும் மனிதர்களும் விந்தையானவர்கள் அதிலும் அவர் உயிரூட்டி உலவவிடும் பெண்கள் அதி விந்தையானவர்கள். இந்த இவளும் அவர்களில் ஒருத்தி. 96 வயதை நிறைவு செய்திருக்கும் கரிசல் காட்டு கலைஞரின் புதிய படைப்பு இந்தக் குறுநாவல்.
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.
Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.
This novellet by ki.ra was written at his age 96. His writings never disappoints anyone. As always his novel characters will come sit next to you while reading his book and never disappears from your thoughts.
And this books is printed in such a way, one side is a manuscript and another side is text printed. My friend gave this book to me and said It's is a treasure to keep . Yess, it's indeed.
இந்த இவள் புத்தகமானது ஒரு கிராமத்து விதவை பெண்ணின் கதையின் வழியே கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை அவர்களது பழக்க வழக்கம், உணவு முறையை வெளிப்படுத்தும் ஒரு புத்தகமாக உள்ளது. கி.ராவின் பல புத்தகங்களை உண்மையில் நாட்டுப்புறவியல் வரிசையில் சேர்க்கலாம் என்றே நினைக்கிறேன். நாட்டு புற மக்களின் வாழ்க்கை முறையை அவரின் எழுத்துக்கள் வழியாகவே நான் அதிகம் தெரிந்துக்கொண்டேன்.
புத்தகத்தில் வரும் இந்த இவள் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு விதவை. விதவைகள் என்பவர்கள் கிராம வாழ்க்கை முறையில் வீட்டு சொத்துக்கள், அவர்களுக்கு பெரிதாக எந்த செலவும் செய்ய தேவையில்லை, ஒரு வெள்ளை புடவை மட்டும் வாங்கி கொடுத்தால் போதும். ஆனால் நாள் முழுவதும் அவர்களை வேலை வாங்கி கொள்ளலாம். எந்த நல்ல காரியத்திற்கும் செல்லவோ புது புடவை உடுத்தவோ தகுதியற்றவர்கள் என்பதால் விதவைகளை வைத்திருப்பது ஒரு லாபகரமான விஷயம்.அவர்களும் மாடு மேய்ப்பது, கூலம் அள்ளுவது, வயல் வேலைகள், வீட்டு வேலைகள் என அனைத்தும் பார்ப்பவர்களாக உள்ளனர். அதில் இந்த இவளும் ஒருத்தி.
ஆனால் ஊரில் இவள் தன் இஷ்ட்டத்திற்குதான் இருப்பாள். இவள் சுதந்திரமானவள். இவளை கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரமிருக்கவில்லை. ஊர்களில் ஒருவரை பார்த்து “நீ என்ன பெரிய இவளா” என்று கேட்பார்கள். அப்படி ஒரு கேள்வி கேட்க இந்த இவள் பொருத்தமானவளே.
அடுத்ததாக புத்தகத்தில் பார்த்த விஷயம் ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் ஏற்படும் பஞ்சம், அதனால் விவசாயம் பொய்த்து போய் பலரும் ஊரை விட்டே கிளம்பும் கதைகள் அப்போதைய கிராமப்புறங்களில் ஏராளம், வறட்சி என்றால் சாதரண வறட்சி கிடையாது. ஐந்தாறு வருடங்களுக்கு பொய்த்து போகும் மழை. உணவு வகைகளில் நாட்டுப்புறங்களில் நெய்க்கு அதிக மதிப்பு இருந்துள்ளது. நெய் கலந்து உணவு செய்வது பணக்காரர்கள் முறை போல இருந்துள்ளது.
கிராமபுறங்களின் தெரு அமைப்பிற்கு என்று சில முறைகள் உள்ளன. அவை • நடுத்தெரு (முதன் முதலில் வீடுகள் தோன்றும் இடம்) • கிழக்கு தெரு , மேற்கு தெரு • வடக்கு தெரு (குபேர திசை, அம்மன் கோவில்களுக்கு சிறந்த இடம்) • தெற்கு தெரு , நடுத்தெருதான் முதல் தெரு, ஆனால் நடுத்தெருவை சுற்றி நாலு தெரு உருவானப்பிறகு அது நடுத்தெரு ஆகிவிடும். மடம்,சாவடி போன்றவை எல்லாம் ஊரின் வடக்கிழக்கு மூலையில்தான் இருக்கும். இப்படியாக இந்த இவள் புத்தகம் நாட்டுபுற கலாச்சாரத்தையும் அதில் வாழும் இந்த இவள் குறித்தும் பேசுவதால் இது நாட்டு புற இலக்கியத்திற்கு சமமான புத்தகம் என்றே நினைக்கிறேன்.
This entire review has been hidden because of spoilers.
கி.ரா'விடம் இல்லாத கதைகளா? எத்தனையோ எழுதி முடித்தாயிற்று. எத்தனையோ எழுத இருக்கிறது. ஆனால், 96 வயதில் எழுதியதோ இந்த இவளைப் பற்றி. "தூக்கத்தோடு யாராவது சண்டை போடுவார்களா? இந்த இவள் போடுவாள்" என்று தனிமையின் முனகலாக ஆரம்பிக்கும் வரிகளில் இருந்தே இவளின் கதை எப்படியாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும். குறு நாவல்களிலும், சிறுகதைகளிலும் கதையும், கதை நாயகர்களும் கரு. இப்புத்தகத்தில் சொற்ப மனிதர்களே இருந்தாலும், 'இந்த இவளின்' ஊடாக நம் கண்முன் ஒரு வாழ்வியல் பிறக்கிறது. எழுத்துக்களை அதனுள் பொதிந்திருக்கும் மன உணர்ச்சிகளின், அது சார்ந்த வாழ்க்கை முறையின் வழியாக அனுகுபவர்களுக்கு இந்த இவளை மிகவும் பிடித்துப்போகும், காதலாகும்...