“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”
Shobasakthi lives in France. He is a Sri Lankan Tamil refugee and a former LTTE child-soldier. He has published two novels, a collection of short stories, three plays and many essays. His first novel, translated in English as Gorilla, was published to immense acclaim. For the last twenty years, he has worked as a dishwasher, cook, supermarket shelver, room boy, construction worker and street sweeper, among other things. He blogs at www.satiyakadatasi.com.
ஷோபா சக்தியின் பல படைப்புகளை வாசித்திருக்கிறேன். வழக்கம் போல அவருடைய மொழியே வழி நடத்துகிறது. ஆனால், இச்சா-வில் ஆரம்பத்தில் உள்ளே நுழைவது கொஞ்சம் கடினமாகவே இருந்தது எனும் உண்மையை மறைக்க வேண்டியதில்லை.
சூழலால் போராளியாகி பின் கைதாகி விடுதலையாகும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையைப் பேசும் கதை.
பொதுவாக பொழுது போக்கு நாவலுக்கும் இலக்கிய நாவலுக்கும் என்ன வித்தியாசம் என்றால், இலக்கிய நாவல் பாத்திரத்தின் குணாதிசயங்களால் பின்னப்படும். பொழுதுபோக்கு நாவல்கள் சம்பவங்களால் தொடரும். இச்சா மேலே சொன்ன இரண்டாலும் அழுத்தமாக பின்னப்பட்டதாக உணர்கிறேன்.
இச்சா-வின் வழியாக ஆசிரியர் ஈழத்து பெண்களின் வாழ்வின் பல புள்ளிகளைத் தொட்டிருப்பதாக உணர்கிறேன். வாசிக்கலாம்.
முழு மூச்சா வாசிச்சு முடிச்ச புத்தகம், கதை முடியும் போது வந்த உணர்வு அதுவரைக்கும் நான் உணர்ந்ததில்லை. உண்மையாகவே ஈழபோராட்டத்தின் இந்த பக்கங்களும் பேசப்பட வேண்டும்.
ஷோபாசக்தியின் கொரில்லா படித்து இருக்கிறேன். அது ஒரு போராளியின் கையேடு (Diary ) போலத்தான் இருக்கும். பல இடங்களில் தொடர்பு இல்லாமல் இருக்கும். இச்சா ஒரு முழுமையானதாக இருப்பதோடு இல்லாமல் அடுத்து ஆலாவுக்கு என்ன நடக்கும் என்று ஒரு பதபதப்பை கடைசி வரை கொண்டுசெல்கிறார் ஷோபா. விடுதலை புலிகளுடன் இருக்கும் ஒரு சிறுவனுக்காக பரிதாபபட்டு தண்ணீர் கேட்பவர்களுக்கு தேநீர் போட்டு கொடுக்கிறாள். அதற்காக சிங்களர்கள் அவள் தம்பியை கொல்கிறார்கள். ஆலாவும் கொல்லப்படும் நிலையில் அதே சிறுவன் வந்து சிங்களர்களை சுட்டு வீழ்த்துவது சிறார் விடுதலை புலிகளின் வரலாற்றை ஒரு காட்சியில் எழுதுகிறார் ஷோபா.
ம் நாவலுக்குப் பிறகு ஷோபாசக்தியின் எழுத்தின் மீதிருந்த காதலால் இச்சாவை நுகர வேண்டிய ஆவல் ஏற்பட்டது.
ஒரு போராளி ஏன் உருவாக்க படுகிறான் என்னும் ஆழ்ந்த கருத்தை "ஆலா" எனும் பெண்ணின் வாழ்க்கை கதையாக எழுத்துக்களால் நம்மனதில் புதைத்துவிட்டு ஆலாவின் கனவுகளையும் மண்ணோடு புதைத்து விட்டார் புதைத்து விட்டார் ஷோபாசக்தி.
ஆலாவுடன் வாழ்ந்த அந்த நாட்கள் என் பொன் நாட்கள் ☺️🖤
ஷோபாசக்தி உருவாக்கத்தில் நான் படித்த முதல் நாவல் இது. உலகமெங்கும் சமகால இலக்கியத்தில் மிகவும் கொண்டாடப்படும் எழுத்தாளர்களில் இவர் முதல் இடம் வகிக்கிறார். ஈழத்து எழுத்தாளருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கிகாரம் உன்னதமானது. இவர் எழுத்துக்களை நான் வாசிக்க தூண்டியதற்கு இவை முக்கிய காரணங்கள்.
ஆனால் இச்சா எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. ஆலா என்ற மைய்யக் கதாபாத்திரத்தின் சிறு பிராயம் முதல் சிறை வாசம் வரையிலான, புத்தகத்தின் பெரும் பகுதி, மேலோட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏதோ அன்றாட வாழ்வில் அடிக்கடி காணும் ஒரு பெண்ணைப் பற்றி, அவருக்கு நேர்ந்த அவலங்கள் மற்றும் இயக்கத்துடன் சேர்ந்த காலம் பற்றி கவனித்ததை அப்படியே தன்னிலைப் படுத்தி எழுதப்பட்டிருந்தது. அவரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் எப்படி அக்கதாப்பாத்திரத்தின் மனநிலை மற்றும் முடிவுகளுக்கு காரணமாய் அமைந்ததென்பது கேள்விக்குறியாய் இருந்தது. உதாரணத்துக்கு அப்பாச்சியால் தனது 9வது வயதிலே வல்லுறவுக்கு உள்ளாகிய பெண் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவளாய் இருக்கவில்லை. சிறையிலும் கூட ஊசலாடும் காம உணர்ச்சியே தன்னை ஒரு உயிருள்ள ஒருத்தியாய் வைத்திருக்கிறது என்ற கூறுவது கொஞ்சம் நம்ப தகாததாய் இருக்கிறது. அதுவரைக்கும் சுல்தான் பப்பாவின் முத்தத்தைத் தவிர, காமத்தாலோ காமத்தை காரணம் காட்டியோ சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண் எப்படி காமத்தை பற்றி ஒரு நல்ல எண்ணத்தை ஒரு குழப்பமில்லாமலோ, மனநிலை பாதிக்காமலோ இருக்க கூடும் என்பது எனக்கிருந்த மிகப் பெரும் சந்தேகம். ஐரோப்பாவில் நடக்கும் நிகழ்வுகள் தேவையற்றதாகவும் கதைக்கு எவ்விதத்திலும் வலு சேர்ப்பதாகவும் இருக்கவில்லை. முற்றாகத் தவிர்த்திருக்கலாம்.
எனக்கு இவ்நாவலில் பிடித்த பகுதியாக "பதுமர் குடி" என்ற பாகம் அமைந்தது. இதில் வெளிக்காட்டிய பாத்திரங்கள், சம்பிரதாயங்கள், இலங்கையின் கிழக்கு பிரதேச கலாச்சார கூறுகள் என்னை மிகவும் கவர்ந்தன. இதை மேம்படுத்தி, ஆங்கில நாவல் யுக்தியில் ஒன்றான "Magical Realism" ஐ இவ் நூலிலும் கையாண்டு கதைக் களத்தை நகர்த்திஇருந்தால் ஒரு சிறப்பான படைப்பாக அமைந்திருக்க கூடும். அல்லது ஒரு பெண் எப்படி அகத்தில் காமத்துடனும் புறத்தில் போர்க்களத்தில், மற்றும் சமுதாயத்தில் தன்னையோ தன் கோட்பாட்டுக்குடனான போராட்டத்துக்கு நடுவில் சிக்கித்தவிக்கிறார் என்பதை முன்னிலைப்படியாவது எழுதியிருந்தால் இது ஒரு சிறந்த நாவலாக அமைந்திருக்கலாம். இதெல்லாம் சொல்வது சுலபம், படைப்பது கடினம். எதிர்ப்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் ஒரு ஆதங்கம். அவ்வளவுதான்.
ஷோபா சக்தி என்கிற புகழ்பெற்ற ஈழ எழுத்தாளரைப் பற்றி தெரியாமல் வெறும் அட்டை படத்தை மட்டும் பார்த்து எடுத்து படிக்க துவங்கிய நாவல் தான் ஈச்சா. நாவலின் தொடக்கத்தில் இருந்த ஒரு ஈர்ப்பு மற்றும் புத்துணர்வு போக போக மிக எளிதாக கணிக்கும் கதைக் களமாக மாறியதில் சிறிது ஏமாற்றம் தான் . என்ன தான் கதைக்களம் ஒரு போராளியின் கதையை நவீன சமூகத்திற்கு ஏற்றாற்ப் போல் எளிதாய் யூகிக்க கூடியதாக சொல்லப்படிருந்தாலும் பெரிதாக அலுப்பு தட்டாமல் எடுத்து சென்று விதம் நாவலாசிரியரின் தன்த்திறமையை காட்டுகிறது . ஈழ போராளிகளின் வாழ்க்கையின் பதிவைத் தாண்டி ஒரு பெண்ணின் மனதை அவளின் வாழ்க்கை அமைவதற்கேறப் பதிவு செய்வதில் ஆசிரியர் வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும் . ஈச்சா - போராளியின் வாழ்க்கை என்பதை விட ஈழப்பெண்ணி (அ) போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட ஒரு அபலை(ஆலாவின் )யின் வாழ்க்கை குறிப்பு என்றே சொல்ல வேண்டும்.
படிப்பவர்களுக்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் புத்தகம். இலங்கையில் பல்லாண்டு காலமாக நடந்தேரிய தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலை பற்றியும், அவற்றில் அகப்பட்டு மாண்ட உயிர்களை பற்றியும் மிக ஆழமாக பேசுகிறது. கேப்டன் ஆலா, அந்த சூழல்களுக்கு நடுவே உங்களை வழிநடத்துவாள்.
The last page of the book had Aala’s photo taken when she attained puberty. I held the book close to my heart for sometime. I truly believe her soul needs a hug. Such is the impact!