விடியல்கள் மட்டுமல்ல அடுத்தடுத்த நொடிகளும் கூடப் புதிய புதிய ஆச்சரியங்களோடும் எதிர்பாரா அதிர்ச்சிகளோடும் காத்திருக்க அதைக் கடந்திட மந்திர பைகளை முடிந்து கொண்டிருக்கிறாள் அனுயா. பொன் துகள்கள் நிறைந்திருக்கும் டிங்கர்பெல்லின் மந்திர பை அல்ல... இது அனுயாவின் ஆறுதல் பை.