பன்முகத் திறமை கொண்ட நூலாசிரியர், கள ஆய்வு மேற்கொண்டு, வேலூர் வட்டம், ஜவ்வாது மலையில் அடங்கிய மொழலை கிராமம் முதல், கோவிலூர் வரை, 32 கிராமங்களில் கள ஆய்வு செய்து, அங்கு நிலவும் வாழ்வு முறை, தொழில், பண்பாடு, திருமணம், உணவு முறை, பேச்சு மொழி போன்ற எல்லாத் தகவல்களையும் திரட்டி வழங்கியுள்ளார். அறிமுகம் துவங்கி, கள ஆய்வுக்கு உதவியவர்கள் வரை, 13 தலைப்புகளில் புகைப்படத்துடன் விளக்கியுள்ளார். தம் கள ஆய்வில் மலைவாழ் மக்களோடு நேரில் உரையாடி, அவர்களுடைய இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். மலைவாழ் மக்கள் இறைவனை வழிபட்டு, அங்கு கிடைக்கும் இயற்கைப் பொருட்களை வைத்தே பிரசாதம் தயார் செய்கின்றனர்.