மறக்கவே நினைக்கிறேன்
மாரி செல்வராஜ்
வம்சி பப்லிக்கேஷன்
மாரி தனது பால்யத்தை திரும்ப பார்க்கும் கட்டுரைகள் இவை. தனது எழுத்து தான் தனது படைப்புகள் என்று நிச்சயமாக தெரிகிறது.
நான் இப்புத்தகத்தை மூன்றாவது முறை வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனது பால்யத்தை, எனது வாழ்வின் முதல் பாகங்களை படம் பிடித்து காண்பிக்கப்படுகிறது.
ஸ்டீபன் சுந்தரம் வாத்தியார், பால்யத்தில் செய்த நிறைவேறாத சத்தியங்கள், கு.சின்னகுப்பன் என்ற பூசாரி, கட்��ியின் மீதோ அல்லது தனி மனிதன் மீது கொண்ட கண்மூடி தனமான அன்பால் தன்னை சுற்றியுள்ள உறவுகள் எப்படி மனஉளைச்சல் அடைகிறார்கள், திருவிழா, சிறு தெய்வங்கள், கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு அவரது காணிக்கையை திருடியது பிறகு பயந்து அதை எப்படியாவது திரும்ப கொடுக்க முயற்சி செய்வது, தான் ஏன் குடிப்பதில்லை, சொட்டு அக்காவின் கதை, தன் பயத்தால் குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வெளியே செல்லும் தந்தை, நண்பர்கள் காதலுக்கு கவிதை எழுதி தருவது அதுவும் ஆசிரியையாக இருந்தால் அடி பலம் தான், ஏன் மதிப்பெண்கள் ஒரு உயிர் பிரிய காரணமாக இருக்கிறது? தனக்கு பாடம் சொல்லித்தந்த நண்பன் ஏன் ஒரு மதிப்பெண் கிடைக்கவில்லை என்று தனது உயிரை மாய்த்துகெள்கிறான், ஏன் சமூகம் ஒரு சாரரை மட்டுமே தீவிர வாதிகள் ஆக, திருடர்களாக எண்ணுகிறது சினிமாக்களும் அதையே செய்கின்றன என்பது அவலம், எந்த ஒரு பேரிலும் அப்பாவி மக்கள் கொள்ளப்படுகிறார்கள், நமக்கு உதவி செய்ய இயற்கை ஏதோ ஒன்றை அல்லது மனிதர்களை தந்து கொண்டே தான் இருக்கும், காதல்கள் இல்லாத மனிதன் யார் தான், யாருமின்றி இறந்து போவது போன்ற கொடுமை என்ன இருக்க முடியும், கார்த்திகா (திருநங்கையின்) முத்தம் அன்பின் ஆதீ ஊற்று , கருணை கொளை என்ற ஒன்று இங்கு ஏன் இல்லை? அப்படி தன்னை சுற்றியுள்ள அந்த உயிர்களை வழியனுப்பும் மனிதன், தான் பிறந்த கதை தன் அம்மாவின் வாயிலாக கேட்பது எவ்வளவு இனிமையான அனுபவம்
ஒன்றை ஒன்று தொட்டு தான் இயற்கையும், அன்பும் அமைந்துள்ளது..
மாரி!!!!!
நன்றி for making me re-read the book and share the views.