Jump to ratings and reviews
Rate this book

எண்பதுகளின் தமிழ் சினிமா

Rate this book
எண்பதுகளின் தமிழ் சினிமா.

இது 1980 சினிமாக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் வாரியான வரலாற்று நூல் அல்ல. மாறாக 1980களின் சினிமாக்களினூடாக தமிழ்ச்சமூக அசைவியக்கத்தை புரிந்துகொள்ள முற்படும்நூல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது.

126 pages, Paperback

Published January 1, 2020

2 people are currently reading
33 people want to read

About the author

Stalin Rajangam

14 books8 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (7%)
4 stars
17 (65%)
3 stars
7 (26%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Amara Bharathy.
46 reviews6 followers
April 6, 2021
'திரைப்படங்களின் ஊடாகத் தமிழ்ச் சமூக வரலாறு' என்ற துணை தலைப்போடு வருகிறது ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் 'எண்பதுகளின் தமிழ் சினிமா'. வெறும் வரலாறாக இல்லாமல், அக்காலகட்டத்தின் தமிழ் சமூகமும், சினிமாவும் இணையும் இடங்களை கோடிட்டுக் காட்டும் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது.

சரியாக 1980இல் இருந்து 1989 வரையிலான படங்களாக இல்லாது, 80களின் குறிப்பிட்ட ஒரு போக்கை தாங்கி வந்திருக்கிற, 80களுக்கு முன்னும் பின்னும் வந்திருக்கும் படங்களையும் இவரது கட்டுரைகள் பேசுகின்றன. வழக்காறுகள், தெய்வ நம்பிக்கை, சாதியக் கட்டுமானம் என்று பல கோணங்களில் திரைப்படங்களை அணுகுகிறார் ஆசிரியர். ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளூர் வழக்காறுகள் திரைப்பிரதியாக மாறியதை முதல் கட்டுரை பேசுகிறது. அடுத்தடுத்து நீலாம்பரி என்னும் நீலியையும், பாட்ஷா என்னும் கண்ணகியையும் (மிகவும் சுவாரஸ்யமான கண்ணோட்டம்!!), பொதுமகள் x குலமகள் குறித்த சினிமா பார்வை ஆகியவற்றை நாம் பார்க்கிறோம்!

ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக பேசுவதை பட்லர் இங்கிலீஷ் என்று கூறுவோம் இல்லையா, அதிலுள்ள 'பட்லர்' என்னும் ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தரிப்பு சினிமாவில் எப்படி இருந்தது என்பது பற்றியது ஒரு கட்டுரை. நம் சினிமாக்களில் வெறும்
நகைச்சுவை பாத்திரங்களாக, ஒன்றும் அறியாத வெகுளிகளாகவே சித்தரிக்கப்பட்ட சமூகம் அது!

கடைசி மூன்று கட்டுரைகளை, மற்றவைகளை விடவும் மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன்:

- எண்பதுகளில் இடதுசாரி சிந்தனைகள் தாங்கிய படங்கள் வந்தாலும், பாரதிராஜாவின் தாக்கத்தால் கிராமியப் படங்களும் நிறையவே வந்தன; அவை தமிழ் பாரம்பரியம் அல்லது பண்பாடு என்று ஒரு சாதியின் பெருமையையும் கூடவே கூட்டி வந்தது. இது 90களில் சாதிப் பெயர் கொண்ட படங்கள் வரும்போக்கை துவக்கி வைத்தது என்றும் சொல்லலாம்.

- பாரதிராஜாவின் 'மண்வாசனை' பற்றிய கட்டுரை வாசிக்கும்போது, இப்போது toxic என்று சொல்கிறோமே, அதன் மொத்த உருவாக எவ்வாறு அந்தப் படம் இருந்தது என்று பார்க்கிறோம். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வந்த, அதை வகைமாதிரியாகக் கொண்ட படங்கள் தான் கிராமிய மணம் என்ற பேரில், தென் மாவட்டங்களின் தேவர் சாதிப் பெருமையும், மேற்கு மாவட்டங்களில் கவுண்டர் சாதிப் பெருமையும் 90களின் இறுதி வரைப் பேசியவை.

- இப்படங்களில் உள்ள பிரச்சினை சமூகத்தின் சாதி அடக்குமுறைகளை கேள்விக்கு உட்படுத்தாமல் நழுவியது தான். ஒரு சாதிக்குள் இருக்கும் வர்க்க முரண்கள் பற்றி மட்டுமே பேசுவது, சாதி கடந்த காதலில் நாயகன் அல்லது நாயகியை அனாதை என்று காட்டி சாதியை மறைத்து தப்பிப்பது என்று நிகழை விட்டு விலகி நின்ற பிரதிகளைத் தான் அங்கு நாம் பார்க்கிறோம்.

- தமிழ் சினிமாவின் முன்னோடி நடிகரான சிவாஜி கணேசனே, 74இல் இருந்து 95இல் பசும்பொன் வரை தேவர் சமூகப் பாத்திரங்களில், அச்சமூகப் பெருமை பொங்க நடித்தார் என்பது அவர் மீது எனக்கிருந்த பிம்பத்தை சுக்குநூறாக்கியது!!

- நவீனத்தையும் பண்பாட்டையும் எதிரெதிர் நிறுத்தி, சாதி மீறல் குரல்களை பண்பாட்டின் மீதான நவீனத்தின் தாக்குதலாக மாற்றியது பாரதிராஜாவின் படங்கள். மேலும் 'அவரது படங்களில் நிகழும் சாதிய உடைவு என்பது மேலே இருந்து மனம் நெகிழ்ந்து தரப்படும் சலுகை மட்டுமே; அது கீழே இருந்து எழும் உரிமைக்குரல் அல்ல' என்று முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, வேதம் புதிது போன்ற அவரது படங்களைக் கொண்டு நிறுவுகிறார் ஆசிரியர்.

- இறுதியாக நவீனம், பாரம்பரியத்திடம் பணிந்து போகும் பிரதியாக தேவர்மகனைக் காட்டுகிறார்.

சன் டிவியிலும், கே டிவியிலும் மதியம் வரும்/வந்த திரைப்படங்கள் தான் இவை என்பதால் வாசிப்பு பல இடங்களில் நாஸ்டிலஜிக்காக மாறுகிறது. நாம் ரசித்த சில படங்களை வேறு கோணத்தில் காணும் சாத்தியத்தை இந்நூல் நமக்கு வழங்குகிறது. '1980களின் தமிழ் சினிமா: கிராமம் என்கிற களம்' என்ற கட்டுரை கிராமத்தை புனித பிம்பமாக நினைக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாக நான் பார்க்கிறேன்.

நூல்: எண்பதுகளின் தமிழ் சினிமா
ஆசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம்
பக்கம்: 154
பதிப்பு: நீலம் பதிப்பகம்
Profile Image for Gowtham.
249 reviews50 followers
March 26, 2022
தமிழ்நாட்டில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் என்றைக்கும் ஒரு நெருக்கம் இருந்தே வந்துள்ளது. திரை அரங்குகள் இங்கு ஜனநாயக வெளிகளாகவே இருந்துள்ளன, அவரவர் செலவழிக்கும் சக்திக்கேற்ப இருக்கைகள் அமைக்கப்பட்டதே ஒழிய, சாதி அடிப்படையில் அவை அமையவில்லை. பெருந்திரளான மக்கள் சினிமாவை நுகர இத்தகைய மக்கள்மயமாக்கல் தான் தூண்டுகோலாக இருந்தது. அரசியலும் சினிமாவும் நெருக்கமானதற்கு காரணம் சினிமா மீதான இத்தகைய சமூக விழிப்பே.

“தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்” புத்தகம் சினிமாவில் மறைமுகமாகவும் நேரடியாகவும் தென்படும் சாதியத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளால் ஆனது. திராவிட இயக்க விமர்சனத்திற்கு பெயர்போனவர் தான் ஆய்வாளர் திரு . ஸ்டாலின் ராஜாங்கம். ஆழமான ஆய்வு நுணுக்கம் இவரின் எழுத்துக்களில் தென்படுகிறது. சில விமர்சன சொல்லாடல்கள் கூர்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் நுணுக்கமாக அணுகும் நூல் ஆசிரியர், ஏனோ திராவிட இயக்கம், பெரியார் என்று வரும்போது மேலோட்டமான பார்வையையே வெளிப்படுத்துகிறார். திராவிட இயக்க ஒவ்வாமையாக இருக்கலாம், இதை தவிர்த்துவிட்டு பார்த்தால் இவரின் ஆய்வும், வாதமும் நியாமான ஒன்றாகவே தென்படுகிறது.

தென் தமிழகத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வன்முறை, வெட்டு, குத்து, குல பெருமை, குருதி பெருமை என்ற அடிப்படையிலே எடுக்கப்படுகிறது. ஒரு காலத்தில் யதார்த்தம் என்ற பெயரில் இந்த கதைகள் நுகர்ப்பட்டாலும். சினிமா ஏற்படுத்திய தாக்கம் என்பது அந்த மக்களிடையே நிலவிய வன்முறை வெறியாட்ட மனநிலையை திடமாக்கியே உள்ளது.

80 களில் வெளியான இந்த "மண்வாசனை" சினிமாக்கள் அந்த மக்களின் வாழ்வியலை சொல்பவையாக இருந்தாலும், அது பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஆதிக்கத்தை தான் மேலும் மேலும் நிறுவ முயன்றது. இத்தகய மண்வாசனை சினிமாக்கள் அனைத்தும் நவீனத்திற்கும் நகர வாழ்க்கைக்கும் எதிரான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போக்கு இன்றைக்கு எடுக்கப்படும் சினிமாவிலும் தொடர்வதை நம்மால் பார்க்கமுடியும்.

தென் தமிழக பிற்படுத்தப்பட்ட மக்களின் திரை சினிமா வருகைக்கு காரணம் 1967க்கு பின் ஆட்சியில் அமர்ந்த திராவிட முன்னேற்ற கழகம் என்றே பதிவு செய்கிறார் நூல் ஆசிரியர் . தலித்துகளின் கதைகள் எல்லாம் ஆதிக்க சாதிகளின் பார்வையில் இருந்தே திரைப்படமாக்க பட்டது என்றும் குறிப்பிடுகிறார். இப்படி தென் தமிழக சினிமா பற்றிய கட்டுரைகள் இந்நூலில் அதிகம் இடம்பெற்றுள்ளது.

“இந்தி எதிர்ப்பில் இளையராஜா” என்ற கட்டுரை, இசை துறை சார்ந்து புதிய பார்வை ஒன்றை முன்னிறுத்துகிறது. இளையராஜாவின் வருகைக்கு பின் எப்படி மக்கள் முணுமுணுத்து கொண்டிருந்த இந்தி பாடல்கள் நீர்த்து போனது என்பதை ஒரு மெய்யான எடுத்துக்கா��்டின் மூலம் நிறுவுகிறார். மேலும் இந்த கட்டுரையில் தான் "1938 இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வரவேற்ற பெரியார் 1965இல் நடந்த போராட்டத்தை எதிர்த்தார்" என்கிறார், எந்த அடிப்படையில் இந்த அவதூறு பரப்பப்படுகிறது? அவர் அந்த போராட்டத்தை அணுகிய விதத்தை குறிப்பிடாமல் இப்படி ஒரு அவதூறை பரப்புவது ஆய்வாளருக்கு அழகல்ல. (பார்க்க: ப. திருமாவேலன் எழுதிய "திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்!" )

“மெட்ராஸ்” திரைப்படம் பற்றி ஒரு கட்டுரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அகம் புறம் என்ற இரண்டு அம்சங்களையும் சமமாக அணுகிய திரைப்படமாகவும், கல்வியின் முக்கியத்துவத்தை சரியான வகையில் பிரதிபலித்த சினிமாவாகவும், எளியமக்களின் வாழ்வியல் எதார்த்தங்களை நேர்மையாக காட்சிப்படுத்திய சினிமாகவும் மெட்ராஸ் திரைப்படத்தை குறிப்பிடுகிறார். திராவிட காட்சிகளை சாடும் சினிமாவாக இதை முன்னிறுத்துகிறார். (21 ஆம் நூற்றாண்டில் திராவிட காட்சிகளை சீண்டாத சினிமா தான் எது, அடிப்படை அறம் துளியும் இன்றி வைக்கப்படும் அவதூறுகள் தான் தமிழ் சினிமாவில் நிரம்பி வழிகிறது)

வடிவேலுவின் நகைச்சுவை பாத்திரங்கள் பற்றிய கட்டுரை அருமை. போலீஸ் கதாபாத்திரங்கள் பற்றிய மிகைப்புனைவின்(Hyper-fiction/ romanticization) மீது நூல் ஆசிரியர் வைக்கும் விமர்சனங்களின் காரணமாகவோ என்னவோ, ஜெய் பீம் , விசாரணை, ரைட்டர் போன்ற காவல்துறை வன்முறையின் எதார்த்தங்களை காட்சிப்படுத்தும் சினிமாக்கள் வர தொடங்கியுள்ளன.

இதை தவிர்த்து ஏழாம் அறிவு, ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் பற்றிய இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. தங்கர்பச்சன் போன்ற சாதியவாத சந்தர்ப்பவாதியின் முகத்திரையை கிழித்து எறிகிறது இந்த கட்டுரை.

திரு. ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் தமிழ் சினிமாவையும் அதன் இயங்கியலையும் அணுகும் விதம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று, ஆனால் இதனோடு மட்டும் ஒரு கலைப்படைப்பை சுருக்கியும் விட கூடாது. அந்த வகையில் இந்நூல் முக்கியமான ஒன்று. அடுத்த தொகுப்பாக இவரின் "80களில் தமிழசினிமா" வாசிப்பு பட்டியலில் இருக்கிறது, விரைவில் எழுதுகிறேன்.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் படிக்கவும். தமிழ் சினிமாவை இப்படியும் அணுகலாம் என்ற மாறுபட்ட(கண்டுகொள்ளப்படாத) பார்வையை இந்நூல் முன்வைக்கிறது.

#Do_read
12 reviews
September 14, 2021
எண்பதுகளின் தமிழ் சினிமா - ஸ்டாலின் ராஜாங்கம்.

As the caption under title suggests, the book didn't stop with just mere reviews on 80s tamil cinema. Instead, it happens to be a tool to learn the Indian society(or should I say tamil society) that's built with cultural practices(including caste related practices) through the films released during that period.

I usually believe that a society or it's history can be traced with their arts, be it in any form. This book with compilation of essays on 80s Tamil cinema looks to be one fine example of that. Though the title says "80s Tamil cinema", the book gives much more thoughts on evolution of cinema through 1970s to even now(but mostly within 80s to 90s). One such thing to note is how movies that were aligned with villages and system later gave way to the movies that spoke caste pride.

Had to give it to the insights of each movie discussed in this book. One such example is when author quoted Devar Magan's lead character's irony:

" அடுத்த தலைமுறையை நோக்கி படிக்க வேண்டும் என்று சொல்லி முடிக்கிறான். படித்த அவனை பாரம்பரியம் என்னவாக்கியது என்பதை அவன் ஏனோ அனுபவமாக்கிக் கொள்ளவில்லை "

Must Read!
Profile Image for Senthilkumar Gunasekaran.
35 reviews16 followers
January 29, 2020
One of the books published by Neelam (Pa.Ranjith) this year. Stalin Rajanagam is popular among Tamil Political and Cinema intellectual world. As usual , this book speaks same topics of what he spoke in different stages and A caste in Cinema documentary. These things are available in YouTube.

I always interested in knowing the Nattupura kaduvalgal ( Village gods) and their stories. This books have several texts about them and their reference in movies. Interesting and fascinating.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.