சாவியின் கேரக்டர்கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம்; இவர்களின் ஜம்பங்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. கேரக்டர், ஒரு அருமையான நகைச்சுவை விருந்து.
Sa. Viswanathan alias Saavi a famous Tamil author contributed important novels in Tamil history. Washingtonil Thirumanam was written by Saavi. A gentle story with a hilarious touch by Chavi would keep the readers (of course born with Tamil as mother tongue) laughing till the end.
கிட்டத்தட்ட 1950 களின் கடைசியில், பல வித்தியாசமான கதை மாந்தர்களை கொண்டு தனித்தனியே உருவாக்கி எழுதப்பட்டுள்ளது.
அதாவது கதைகளுக்குள் கதாபாத்திரங்களாக இல்லாது, கதாபாத்திரங்களுக்குள் கதையாக எழுதப்பட்டுள்ளது. அதன்படி 28 கேரக்டர்களை உருவாக்கி, அந்த கேரக்டர் பெயருக்கு ஏற்ப அதன் குணாதிசயங்களை வடிவமைத்து, நகைச்சுவை சம்பவங்களை உருவாக்கி, ஜனரஞ்சகமாக எழுதப்பட்டுள்ளது. இடையிடையே சிறு சிறு கதைகளாக அந்த கேரக்டர்களை கொண்டு நகைச்சுவை விருந்து படைத்துள்ளார் திரு சாவி அவர்கள். இதில் சில வரலாற்றுக் குறிப்புகளும், அந்த கால உலக அரசியல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. கேரக்டரின் பேச்சுவாக்கில், உதாரணமாக உலக அரசியல் ரஷ்ய அமைச்சர் குருசேவ் பற்றி "அரசியல் அண்ணாசாமி" என்ற கேரக்டர் புனைவில் கூறப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் பற்றிய அருமையான துணுக்கும் இடம்பெற்றுள்ளது.
இத்தனை காலத்திற்கு பிறகும் நம்மை ஒரே வீச்சில் வாசிக்க வைக்க கூடிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டிருப்பது, பிரமிப்பையே ஏற்படுத்திக்கிறது!!!
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'கேரக்டர்'களின் பெயர்களை பார்த்தாலே புரியும் இப்புத்தகத்தின் சுவையை: