"மீண்டும் ஜீனோ" - சுஜாதா
=============================
1987களில் ஆனந்த விகடனில் அறிவியல்-புனைவு தொடராக வெளிவந்த புதினம். அதற்கு முந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்ட "என் இனிய இயந்திரா" என்ற நாவலின் தொடர்ச்சியே இநநாவல்.
கிபி 2021ல் கதை நிகழ்வதாக முதல் பாக நாவல் பற்றிய முன்னுரையில் கூறப்படுகிறது.
உலகில் அனைத்தும் அறிவியல் மயமாய் காணப்பட்ட அப்போதைய(தற்காலம்!) காலகட்டத்தில், ஜீவா எனும் சர்வ வல்லமை பொருந்திய அரசனை புரட்சியால் இறக்கிவிட்டு, நிலா என்பவளை ராணியாக்குகின்றனர், ரவி மற்றும் மனோ! இந்த அரியணையேற்றம், இவ்விருவரின் கூட்டு சதி. முந்தைய பாகத்தில், 'ஜீனோ'(கிரேக்க சிந்தனையாளர் பெயராம்) எனும் அதிபுத்திசாலி ரோபோ நாயை அழித்து விடுகின்றனர் ரவியும் மனோவும். ஆனால், அது ராணி நிலவிடம் வந்து சேர்ந்து, அவளை எப்படி ரவி மற்றும் மனோவின் மாய வலைப்பின்னலில் இருந்து மீட்கிறது என்பதுதான் கதை.
மேலும் நிலாவின் கணவன் சிபி, டாக்டர் ரா, அவரின் உதவியாளர் 'உதவி', மற்றும் எண்ணற்ற ரோபோக்கள் கதைமாந்தர்களாக கொண்டிருக்கிறது இக்கதை.
நாம் இப்பொழுது பரவலாக பேசும் "Artificial Intelligence"ஐ, "The Handbook of Artifical Intelligence" என்ற புத்தகத்தை ஜீனோ படிப்பதாக மேற்கோள் காட்டியிருப்பது(1987லேயே), திரு சுஜாதா ஏதும் Time Travel செய்து 2021ற்கு வந்து சென்றாரா எனும் அளவிற்கு ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும் CCT camera, GPS, போன்ற தொழில்நுட்பங்கள் பின்னாட்களில் பரவலாகும் என கணித்து, அதனை பயன்படுத்தியிருக்கிறார். 18+ வகையான வர்ணனைகள் சொற்ப அளவில் தூவப்பட்டிருக்கிறது.
அது போக திரு சுஜாதா அவர்களின் trademark கதை சொல்லல், அடிபொலி ., அதாவது நீட்டி முழக்கி பேசும் வசனங்களை, அவரின் கதைமாந்தர்கள் பேசுவதில்லை.சுருங்க சொல்லி நிறைய விளக்கும் பாணி.
'எந்திரன்' படம் இந்த நாவலின் சம்பவங்களில் இருந்து உருவானதுதான் என்பதை, இதனை வாசிக்கையில் நன்கு உணரலாம்.
IT துறையில் உள்ளவர்களுக்கு, இந்த நாவலில் உள்ள அணைத்து தொழில்நுட்ப சொற்களும்(Terminology), விளங்கக்கூடியவை.. அதனால் அவர்கள், நாவலை நன்கு தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்..
ஆனால் பிறதுறையினர்க்கு சிறிது முயற்சி தேவை. அதுவும் அந்தகால வாசகர்கள் எப்படி இத்தனை தொழில்நுட்ப சொற்களை தொடர்பு படுத்தி கொண்டார்கள் என்பது நமக்கு இன்னும் விளங்கவில்லை.
அற்புதமானதொரு அறிவியல்-புனைவு புதினம் !
முடிந்தால் 'என் இனிய இயந்திரா'வை வாசித்த பின், இந்நாவலுக்கு வரலாம்!