தத்துவங்கள் அனுபவங்கள் மூலமாகப் பிறக்கின்றன. இப்புத்தகத்தில் உள்ள 50 தத்துவங்கள் நம் வாழ்க்கையை நாம் சரியான முறையில் வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கின்றன. இந்த தத்துவங்கள் நமது மனதில் உள்ள காயங்களுக்கு மருந்து போட்டு, நம் இதயத்தை மெல்லிய மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றன. இதனால் நம் உள்மனதில் உள்ள கோபம், எரிச்சல், எதிர் மறை எண்ணங்கள், பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஆகியவை நீங்கி விடுகின்றன. இங்குள்ள தத்துவங்களைப் படித்த பிறகு நம் மனம் காற்றில் பறப்பது போல லேசாகி விடுகிறது. வாருங்கள்... நம் மனதில் உள்ள களைகளை நீக்கி, நல்ல விதைகளைத் தூவும் பல தத்துவங்களைப் படிக்கலாம். மனதில் உள்ள சுமை நீங்கி, சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்கலாம்.