தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கபிலர், ஔவையார், கம்பர், அப்பர், ஆண்டாள், செயங்கொண்டார், திருமூலர், caldwell, வள்ளலார், உ.வே.சா., மறைமலையடிகள், பாரதியார், பெரியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், அண்ணா, மற்றும் கருணாநிதி என சங்ககாலம் முதற்தொட்டு இக்காலம் வரை தமிழுக்கு அருந்தொண்டு செய்த மகத்தான மனிதர்களைப் பற்றிய புத்தகம். பாரதியைப் பற்றி வைரமுத்து அவர்கள் தன் கம்பீரக்குரலில் புகழுரைத்து முடித்த பிறகு என் கண்கள் கலங்கியிருந்தன. பாவேந்தர் பாரதிதாசன், உ.வே.சா, புதுமைப்பித்தன் ஆகியோரின் அத்தியாயங்களும் மனதை உருக்கி விடுவதாகவே அமைந்திருக்கிறது.