ஒரு தமிழ் மன்னவனின் காதலும் வீரமும் கற்பனையாகச் சொல்லப்பட்டிருக்கும் கதை. மிகவும் ஆழ்ந்து, ரசித்து, ருசித்து அந்தந்த கதாபாத்திரங்களாகி இதை வடித்திருக்கிறேன். கேட்பவர்களும் அதே சுவையை உணரவும் திளைத்திடவும் முடியும் என்பதில் ஐயமில்லை. பரவலாகவே வாசிப்பு குறைந்துவிட்ட இந்த காலகட்டத்தில், நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒளி ஒலி ரூபத்தில் நம்மைச் சுற்றி பல குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவற்றில் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து உள்வாங்கிக்கொள்வது கடினமாகவே உள்ளது. இந்த நாவல் குப்பைகளுக்கு நடுவே கிடக்கும் ஒரு மாணிக்கம். இதைத் தேர்ந்தெடுத்து சிறந்தவற்றை மேம்படுத்துவது இனி உங்கள் கைகளில்! இந்த நாவலின் நாயகன் இளவரசன் ஆதித்யன், எதிரிகளு&#
Game of Thrones ஐ சரித்திர நாவல் என்பது எப்படி முட்டாள் தனமோ அதை விட முட்டாள் தனமானது இந்நாவலை சரித்திர நாவல் என்று சொல்வது. அட்டைப் படத்தில் சரித்திர நாவல் என்பதை பார்த்துத்தான் இந்நாவலை எடுத்தேன், ஆனால் முன்னறிவிப்பில் கடந்த கால சரித்திர நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்று சொல்வது என்னை போன்றவர்களை ஏமாற்றவா?
கம்பிகளில் வேலி, குளிர் பானங்கள்? என்ன காலக் கட்டத்தில் நடக்கும் கதை? கற்பனையான தமிழ் மன்னவனின் கதையிலும் பிராமணன் வந்து வேத மந்திரங்கள் ஓதி தான் திருமணம் நடக்குமா? இராமனைக் கண்ட இராவணனின் தங்கை சூர்ப்பனகை அவனை மயக்கச் செய்த கீழ்த்தரமான செயல் - நீங்கள் பார்த்திறீர்களா? பாகுபலி படமெல்லாம் வந்த பிறகு, ஆதித்யனின் கன்னிப் போரில் அவனில்லாமல் அவன் படை எண்ணிக்கையில் அதிகமான எதிரிப் படையை எந்த ஒரு போர் தந்திரமும் இல்லாமல் எளிதாக வெல்கிறது?
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில எழுத்துப் பிழைகளுடன் சலிப்படைய வைக்காமல் கதை நகருகிறது.