கோடிக்கோடியாய் கொடுத்தாலும் பெறமுடியாத அற்புத பொக்கிஷங்கள் இவை. இந்நூலில் இடம்பெற்றிருக்கும் அறிஞர்கள், மேதைகள், ஞானிகளின் பட்டியலைப் பார்த்தாலே இந்த நூலை வாங்காமலோ படிக்காமலோ உங்களால் இருக்க முடியாது. இந்த நூலினை நான் தொகுக்க ஆரம்பிக்கும்போது, மிகவும் சாதாரணமான ஒரு நூலாகவே தொடங்கினேன். ஆனால் முதல் வேலையாக இதில் யாருடைய கருத்துகள் எல்லாம் இடம்பெறலாம் என்று யோசிக்கத் தொடங்கியபோதே, இதன் பிரம்மாண்டம், இதன் செறிவு, கருத்துகளின் அடர்த்தி புலப்படத் தொடங்கிவிட்டது. இப்படி ஒரு மேதைகளின் வரிசை வேறு எதற்காகவாவது, வேறு எந்த நூலிலாவது இடம்பெற்றிருக்குமா என்பது சந்தேகமே!. இவ்வரிகள் கோடானுகோடி இளைஞர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்பவையாக இர&