மின்புத்தகம் போடுவதில் சில சடங்குகள் இருக்கிறது. அதில் ஒன்று “உன் புத்கத்தைப் பற்றி நீயே சொல்..” இதில் நான் என்ன சொல்லுவது? அசரவைக்கும் அதிரடிச் சிறுகதைகள்.. நெஞ்சத்தை உலுக்கும் உண்மைச் சம்பவங்கள்.. உட்கார்ந்திருப்போரை ஓட வைக்கும், ஓடுவோரை பறக்க வைக்கும். மருந்தில்லை.. பத்தியமில்லை. இதை மட்டும் படித்தால் போதும். ஆடியில் அடைமழை. கோடையில் குளுகுளு.... வாங்கிவிட்டீர்களா ஆ ஆ ஆ? இது என்ன கதையா, மந்திரக்கோலா? ஒரு சாதாரண கதை, வாழ்வைப் புரட்டிப் போடுமா? சிலருக்கு போடுகிறது. மனிதன், தோல்வியிலிருந்து சில படிப்பினைகள் கற்றபடி தொடர்ந்து பயணிக்கிறான். அடுத்த அடி, எச்சரிக்கையோடு எடுத்து வைக்கிறான். அசைபோடுவதும், சிந்திப்பதும், பழுதுபார்து எதிர்காலத்தை எதிர்கொள