அநேகாத்மன் (பல உயிர்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளவன், அனைத்து உயிர்களுக்கும் ஆத்மாவாக இருக்கக் கூடியவன், அனைத்து உயிருக்கும் ஒரு ஆத்மாவாக இருப்பவன் சிவபிரானின் பெயர்களில் ஒன்று) கோபம் 200% அகங்காரம் 200% பொஸசிவ் 200% பொறுமை மனஸ் 100% அன்பு 0.0% விட்டுக்கொடுத்தல் 0.0% சர்வமகி (சர்வமுமாய் இருப்பவள். பூமி முழுவதும் நிறைந்திருப்பவள். சக்தியின் மறு பெயர்) கோபம் மைனஸ் 10% அகங்காரம் மைனஸ் 10% பொஸசிவ் 00% பொறுமை 200% அன்பு 200% விட்டுக்கொடுத்தல் 100% நிலவே என்னிடம் நெருங்காதே இது இருவேறு துருவங்களுக்கு இடையில் நடக்கும் காதல் யாசகம். சூழ்நிலையால் நாயகனின் தந்தையைக் கொலை செய்த பழி நாயகியின் தந்தை மீது விழுகிறது. அதை நம்பி நாயகன் நாயகியை வெறுத்து ஒதுக்குகிறான்.