வேதங்களை குறைக்கூறுபவர்களில் பெரும்பாலோர் அதனை வாசித்து இருப்பார்களா என்பது கேள்விக்குறி. வேதம் சார்ந்த அறிவுத்தேடல் என்பது வெகு சில மனிதர்களுக்கே சாத்தியப்படுகிறது. அதில் ஒருவராக அரவிந்த நீலகண்டன் விளங்குகிறார்.
வேதம் குறித்த தேடல் என்பது மிக நீண்ட பயணமாகும். வேதங்களுக்கு பொதுவாக இரண்டு பார்வைகளை முன்வைக்கலாம். ஒன்று வரலாறு. இன்னொன்று ஆன்மீகம். இவ்விரண்டு தளங்களின் பார்வையோடு வேதங்களை ஆய்வு செய்யும் வழக்கம் என்பது மிக குறைவாகவே நிலவுகிறது. வேதம் தொடர்பான சிந்தனை என்பது ஒருவரது ஆழ்மனத்தேடலோடு தொடர்புடையது. அது என்னுள் இருக்கும் என்னை அறிமுகப்படுத்தும் ஒரு தொடர் பரிணாம வளர்ச்சியாகவும் காணலாம். இன்று பரவலாக அறியப்படும் வேதாந்தத்தின் உச்ச சாரத்தை பத்தாவது மண்டலத்தில் உள்ள ஹிரன்யகர்ப்பம் மற்றும் நசடீய சூத்திரங்களில் அறியலாம்.
வேதக்காலத்துக்கும் திரும்பச்செல்வது என்பது குகை வாழ்க்கையையோ, கையில் புலங்கும் தொழிற்நுடபத்தை வீசி எரிவதோ அல்ல. அது உண்மைக்கு திரும்புவது. அந்த உண்மை என்பதும் நாம் தான். நாம் நமது சுயத்துக்கு திரும்புவதாகும்.
இந்நூல் வேதங்களை அணுக வேண்டிய சில பார்வைகளை முன்வைக்கிறது. அப்பார்வைகளுக்கான புலன் உங்களுக்குள் மட்டுமே இருக்கிறது என்பதே சுயத்துக்கான முன்னுரையாகும்.