தமிழகம் எந்த காலத்திலும் தடம் மாறி விட கூடாது என்று நான் நினைக்கும் சில கொள்கைகளுள் இந்து கோயில்களை அறநிலையத்துறை கண்காணிப்பதும் ஒன்று.
ஒரு அறநிலையத்துறை அதிகாரியின் செயல்பாடுகள் விரிவாக பதிவு செய்ய பட்டுள்ளது. அதன் மூலம் அறநிலையதுறையின் அவசியம் நிறுவப்படுகிறது.
பிற மத நிறுவனங்கள் கண்காணிப்பதில் அரசின் பங்கு என்ன? பிள்ளையார்பட்டி போல் அரசு நிர்வாக அலுவலர் இல்லாத கோயில்கள் எவை? அங்கு நிர்வாகம் எப்படி உள்ளது? அறநிலையத்துறை ஒரு கோயிலை எப்படி சேர்த்து கொள்கிறது? கேட்பாடற்று கிடக்கும் கோயில்கள் அறநிலையத்துறையால் எப்படி பாதுகாக்க படுகின்றன? இன்னும் விரிவாக பதிவு செய்ய வேண்டும்