தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் தலைவரான அறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ்’ நாளிதழின் அங்கமான ‘தமிழ் - திசை பதிப்பகம்’ வெளியிடும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் அட்டை வெளியானது. தமிழ்நாட்டுக்கு ஜனநாயக அரசியலைக் கற்பித்த முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளையும், அவரது வரலாற்றையும் பேசும் இந்நூலை உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவான இந்தியத் தேர்தல் சமயத்தில் வெளிக்கொண்டுவருவது சாலப் பொருத்தமானது. ஏனென்றால், ஒரு சாமானியனாலும் அரசியல் கட்சி தொடங்க முடியும்; ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று முன்னுதாரணத்தைத் தமிழ்நாட்டின் வழி சுதந்திர இந்தியாவில் உருவாக்கியவர் அண்ணாதான்.
சமஸ் (பிறப்பு: டிசம்பர் 4, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், உரையாளர். ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘தி இந்து’ தமிழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ’அருஞ்சொல்’ இணைய இதழின் ஆசிரியர்.
ஒரு வழியாக இந்த இரண்டு மாத ஊரடங்கு நாட்களில் 'மாபெரும் தமிழ் கனவு' புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். 800 பக்கங்களா என்று சிறிது வியப்பு ஆரம்ப நாட்களில் இருந்தாலும், படிக்கப் படிக்க நாட்கள் சென்றதே தெரியவில்லை. என்னை இப்படி நீண்ட நாட்கள் கட்டிப்போட்டப் புத்தகம் ஒன்று என்றால் சிறிதும் யோசிக்காமல் நேரு அவர்கள் எழுதிய 'Glimpses of World History' என்றே கூறுவேன். நேரு உலக சரித்திரம் படித்தவர், வெளிநாட்டில் கல்வி கற்று அறிவியலில் ஆழ்ந்த பற்று கொண்டவர், உலக தலைவைர்கள் அனைவரையும் கவர்ந்த சிரியன சிந்தியாத ஒரு Statesman. ஆனால், அண்ணாவோ உலக சரித்திரம், அரசியல், சோசியலிசம் , பொருளாதாரம், நாடகம், சிறுகதை, மேடை பேச்சு என எல்லாவற்றிலும் தனக்கு என்று ஒரு இடத்தை அன்றே உருவாக்கி வைத்திருந்தார் என்பது இந்த புத்தகத்தை படித்த பின்புதான் தெரியவந்தது. Shashi Tharoor எழுதிய India Shashtra என்ற புத்தகத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு படித்தேன். அதில் The Life & Times Of C.N. Annadurai என்ற ஒரு கட்டுரை இருந்தது. காங்கிரஸ் அரசியல்வாதிக்கு அண்ணா மீது என்ன பற்று, அதுவும் தமிழர் அல்லாத காங்கிரஸ் காரருக்கு அண்ணாவை எப்படி தெரியும் என்று யோசித்தேன். அதில் அவர் கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்,
"Anna was a multi-faceted personality, modest, creative, compassionate and humane. He was unique in the annals of leadership in being an accomplished playwright, screenplay writer, and journalist as well as highly effective party leader, organizer and administrator. A mesmerizing orator in Tamil, Anna rivaled Pandit Nehru in his ability to draw crowds, and tickets were sold sometimes for his speeches. Yet, his humility, probity and discretion were unquestionable.
Leaders such as Anna are rare. He was a giant of our age who deserves to be far better known outside his native Tamil Nadu. The impact of Anna’s life and message still endures. Every thinking Indian should be aware of it. Sadly, most outside Tamil Nadu are not."
அண்ணாவின் நாடாளுமன்ற உரைகளை படிக்கையில் இன்று தென்னிந்திய அரசியல் தலைவர்கள் மெதுவாக பேச ஆரம்பிக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Representation), மாநில சுயாட்சி (State Autonomy), Democratic Socialism போன்ற பல விடயங்களை அன்றே ஒரு கை பார்த்து இருக்கிறார் அண்ணா. இந்த புத்தகத்தை படிக்கையில், எனக்கு அண்ணாவின் அரசியல் ஆளுமை , பொருளாதார அறிவு, தமிழ்ப்பற்று, எழுத்தாற்றல் அனைத்தையும் விட அவரது வாழ்வியல் தத்துவம் பிடித்தது. அதில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோட்பாடு என்னை மிகவும் ஈர்த்தது.
அண்ணா தன்னுடைய தம்பியர்க்கு எழுதிய கடிதங்களில் 'ஆரியம் இருக்கும் இடம்' மற்றும் 'கொட்டடி எண்: 9' ஆகிய இரண்டு கடிதங்களை கட்டாயம் இன்றைய தலைமுறை தமிழர்கள் அனைவரும் படிக்கவேண்டும். இந்த புத்தகத்தை பகுதிப்பகுதியாக தான் எடுத்து பேச முடியுமே தவிர, ஒரே கட்டுரையில் Review எழுத எனக்கு திறன் கிடையாது. எனவே, இந்த புத்தகத்தை அனைவரும் வாங்கி குறைந்த அளவு நாள் ஒன்றுக்கு ஐந்து பக்கங்களாது படிக்க வேண்டுமென விரும்புகிறேன்.
800 பக்கத்துக்கு எதுக்கு புக் போடணும்? ஷார்ட் அண்ட் க்ரிஸ்பாக சொல்லக்கூடாதா என்று தான் இந்த புத்தகத்தின் அறிவிப்பு வந்த போது என் எண்ணமாக இருந்தது. ஆனால் 800 பக்கங்கள் என்பதே ஒரு சிறு துளிதான் என்று இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது தோன்றியது.
திராவிட இயக்க எதிர்ப்பாளர்களுக்கு அண்ணா ஒரு பெரும் பிரச்சனை. அவரது சமூக நீதி கருத்துக்களால் அவரை செரிக்க இயலாது. ஊழல் குடும்ப அரசியல் என்று அவரை ஒதுக்கவும் முடியாது. அதனால் முடிந்த மட்டும் அவரை கடந்து செல்லும் வேலையை பார்த்து வந்தனர். ஆனால் தமிழ்நாடு என்று பெயர் வைத்தவரை அவ்வளவு எளிதில் இந்த சமூகம் மறந்து விடுமா என்ன?
அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள் என்று ஒரு தொகுப்பு. இன்றுமே கூட அந்த உரைகள் relevant ஆக இருக்கிறது. ஒவ்வொரு வாதத்தையும் விரிவாக அவர் எடுத்துரைப்பதே அழகு. ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பும் இன்றைய அரசியல் புலிகளுக்கும் தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்லும் அனைவருக்கும் compulsory course ஆகவே அதை வைக்கலாம். Kashmir, beautiful kashmir போன்ற embarassementகளை தவிர்க்க உதவும்
யாரையோ ஏமாற்றி வந்ததல்ல திராவிட இயக்கம். அது சாமானியர்களின் கனவு. அந்த கனவை மெய்ப்பிக்கும் செயல் திட்டம் அண்ணாவுக்கு இருந்தது. அதை செயல் படுத்த அவர் தம்பிகள் இருந்தனர்.
ஒரு இயக்க தலைவர் எவ்வளவு பொறுமையுடனும் ஜனநாயகதன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாவை தவிர்த்து வேறொரு உதாரணம் தேவையில்லை. எதிர் முகாமில் உள்ளவர்களுக்கு மரியாதை அளித்து யார் மீதும் எந்த சமூகம் மீதும் வன்மம் உருவாக்காமல் தான் சார்ந்த சமூகத்திற்கு அரசியல் கற்பித்து இன்றும் இந்துத்துவ எதிர்ப்பு இந்தி எதிர்ப்பு என்று மைய அரசின் நீரோட்டத்துக்கு எதிர் திசையில் தமிழகம் இருக்க அண்ணா ஒரு தொடக்கப்புள்ளி.
இந்த மண்ணின் மைந்தர்கள் தன் சமூகத்தின் தகத்தகாய தலைவனை பற்றி அறிந்து கொள்ள சாலச்சிறந்த புத்தகம்
சாமானியன் ஒருவன் தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய கதை.
பேரறிஞர் அண்ணாவின் தமிழ்நாட்டின் அரசியலை மாற்றிய வரலாறு,முக்கிய பேட்டிகள்,நாடாளுமன்ற சட்டமன்ற உரைகள்,கடிதங்கள்,சிறுகதைகள் என்று சிறப்பாக தொக்குக்கபட்டிருக்கும் புத்தகம் மாபெரும் தமிழ்க் கனவு.
நீண்ட நாட்களுக்கு பிறகு படித்த அருமையான புத்தகம் “மாபெரும் தமிழ்க் கனவு” , அண்ணாவின் பிறந்த நாளில் அந்த நூலைப்பற்றி சில வார்த்தைகள் எழுதுவதில் மகிழ்ச்சி... இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு பிராந்திய கட்சி ஆட்சி அமைத்தது என்றால் அது தி.மு.க. தான் என்ற குறிப்பை “India after Gandhi” என்ற நூலில் படித்ததிலிருந்து, திமுக வின் founder ஆன அண்ணாவின் அரசியல் வாழ்க்கையை அறிந்து கொள்ள ஒரு urge ஏற்பட்டது ஆனால் தலைவர்களை பற்றி தொண்டர்கள் எழுதும் வரலாற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை.. ஆனால் “மாபெரும் தமிழ்க் கனவு” அப்படியான ஒரு நூல் இல்லை , அதற்கான காரணம் இரண்டு ஒன்று நூலாசிரியரின் முந்தைய தொகுப்பான “தெற்கிலிருந்து ஒரு சூரியன்”. இரண்டாவது இந்த நூலின் அமைப்பு, அண்ணாவின் காலத்தில் அவர் உடனிருந்தவர்கள், எதிரில் இருந்தவர்கள், அவரைப்பற்றி பேசி விளம்பரம் தேடி தரக்கூடாது என எண்ணியவர்கள் ஆகியவர்களின் பேட்டிகள், அண்ணாவின் பேட்டி, சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் மக்கள் மன்ற உரைகள் போன்ற அனைத்தும் இடம்பெற்றது. இதில் அண்ணாவைப் பற்றி யாரிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள் என்பது முக்கியம். அண்ணாவின் காலத்தில் அவருக்கு எதிரணியில் இருந்தவர்கள். மாற்று அணியினர் அனைவரிடத்திலும் அண்ணாவைப் பற்றி சொல்வதற்கு நிறைய இருந்திருக்கிறது. ஒரு மாபெரும் தலைவரின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டிய தேவை, அவரின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளின் Relevance of today தான். மாநில சுயாட்சி, இருமொழி கொள்கை போன்றவற்றின் முக்கியத்துவம் இன்று அதிகம். நாடு முழுவதும் ஒரே மொழி என்பது நாட்டின் அடையாளம் என்று கருதும் நேரத்தில் அண்ணாவைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது. சுமார் 800 பக்கங்கள் கொண்ட இந்த நூலைப்பற்றி எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. 90s கிட்ஸ் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
அண்ணாவின் Punches ல் சூப்பரானது,
அண்ணாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவரது மனைவி ஆசைப்படுகிறார், அண்ணா அதை மறுத்துவிடுகிறார். அதேபோல் தலைமை செயலக நிர்வாகிகளை ஆட்சிக்கு வந்தவுடன் பழி வாங்க வேண்டும் என்று கட்சி உடன்பிறப்புகள் ஆசைப்படும் போது அதையும் மறுத்துவிடுகிறார். இந்த இரண்டு மறுப்புக்கும் காரணமாக அவர் சொன்னது தான் ஹைலைட் “கட்சிக்கும் குடும்பத்துக்கும் ஒரு இடைவெளி வேண்டும், அதேபோல் ஆட்சிக்கும் கட்சிக்கும் ஒரு இடைவெளி வேண்டும் என்பதை அவருக்கே உரிய தொணியில் சொல்கிறார்” Happy birthday Anna.
ஓவ்வொரு தமிழனும் , தன்னை தன்மானம் உள்ளவனாய் , திராவிடனாய் , சுயமரியாதைக்காரனாய் , கருதும் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புத்தகம் இது . இன்று தலை நிமிர்ந்து நிற்கும் தமிழகத்தின் தலைமகனாய் வாழ்ந்த அறிஞர் அண்ணாவின் புகழ் அறியாமல் , சத்ரபதி சிவாஜியின் புகழையும் , அசோகரின் புகழையும் தமிழன் படிப்பது வீணே . வீரம் , பேச்சு திறன் , வெறுப்பு விதைப்பு போன்ற விஷயங்கள் கொண்டு மக்களிடைய வரவேற்பை பெறும் தலைவர்களிடையே ஜனநாயகம் , உழைப்பு , எல்லாரையும் மதித்தல் என்ற பண்புகளுடன் தலைவரான அண்ணாதுரையை தமிழக மக்கள் கொண்டாட தவற விட்டனர் என்றே கூற வேண்டும்.
800 பக்கங்கள் , திராவிட அரசியில் தெரிய அல்லது அண்ணாவை தெரிஞ்சிக்க கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் ... குறிப்பாக அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள் - Mind blowing.
A Book on Aringar Anna about his various facets. Truly a visionary leader and this book touches upon his life, ideologies, functioning as a parliamentarian, Chief minister, contribution to writing, cinema etc. In short a gateway to the world of Anna
800 pages of learning Anna❤️🖤 Never felt this good finishing a book. A true people's leader whose legacy needs to be taken forward to generations to come.
திராவிடர்களுக்காக கனவு கண்ட அதிலும் தமிழர்களுக்காக மாபெரும் கனவு கண்ட பேரறிஞரின் சட்டமன்ற, பாராளுமன்ற உரைகள்,கட்டுரைகள் இன்னும் பல அடங்கிய தொகுப்பு இது. சுதந்திர இந்தியாவில் வெளியுறவு கொள்கைகள், பொருளாதாரம்,இறையாண்மை, அரசியல் சாசன சட்ட திருத்தம் அனைத்திலும் தன்னுடைய ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தன்னுடைய நாற்பதாவது வயதில் திமுக இன்னும் இயக்கத்தை ஆரம்பித்து அதை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளார். அரசியல் அதிகாரத்தில் செல்வந்தர்கள் மட்டுமே கோலோச்சிய காலத்தில் சாமானிய மக்களையும் அரசியல் படுத்தி அவர்களையும் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற வைத்துள்ளார். இன்று தமிழர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகெங்கும் கோலோச்சுவதற்கு அவர் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து வகுத்த இரு மொழிக் கொள்கையை காரணம்.அண்ணாவின் வரலாற்றையும் திராவிட கட்சிகளின் வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
சமஸ்ஸின் தலைப்புக் கட்டுரை அண்ணாவின் பன்முகத்தன்மையை நன்கு விரிவாக விளக்கியது. அண்ணாவின் பொருளாதார பார்வை பற்றி இந்த புத்தகத்தின் மூலம் தான் அதிகம் அறிகிறேன். சிறப்புக் கட்டுரைகளில் ஆழி செந்தில்நாதன், ஜார்ஜ், நாராயணன் அவர்களின் பார்வைகள் சிறப்பு. சட்டர்ஜீயின் கட்டுரை அண்ணாவை தமிழ் அல்லாத மொழி உணர்வாளர்களின் பார்வையாக நன்கு விரிகிறது. குறிப்பாக: 1. சரியான சூழலில் மொழி ஒருங்கிணைக்கும் சக்தி என்பதற்கு இந்தோனேசியா நல்ல உதாரணம் என்று ஜார்ஜ் கூறுகிறார் (ப 52). இதை பற்றி இன்னும் தெரிந்துகொள்ள ஆர்வம். 2. அண்ணாவின் 'திராவிட நாடு' முழக்கம் மற்ற தென் மாநிலங்களில் வரவேற்பு பெறாததர்க்கின் காரணங்களை கொடிக்கால் ஷேக் அப்துல்லாவின் நேர்காணல் பக்கங்கள் விவரிக்கின்றன (ப 84-85) 3. அரசு இயந்திரத்தின் கட்டுமானத்தை மாற்றி வடிவமைத்து தேவைகளும் கோரிக்கைகளும் 'கீழிலிருந்து மேல்' லாக செல்லும்பாடு ஏற்பட்ட வளர்ச்சிகளை (குறிப்பாகா மாவட்ட செயலர்களின் பங்களிப்பு) எஸ். நாராயணின் கட்டுரை விவரிக்கிறது. 4. காமராஜருக்கு அண்ணாவின் மேலிருந்த மதிப்பு, குறிப்பாக தி.மு.க. வை காட்டி தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி திட்டங்களை காமராஜர் கொண்டுவந்தது பற்றி விவரிக்கும் நாகநாதனின் நேர்காணல் சிறப்பு.
நேரம் கருதி முழு நூலை படிக்க இயலாதவர்கள் இந்த சிறப்பு கட்டுரைகள் மூலம் அண்ணாவின் வாழ்க்கை மற்றும் கருத்துகளை சுருக்கமாக புரிந்துகொள்ள முடியும்.
பிரிவினைவாத தடுப்பு மசோதாவை எதிர்த்து அண்ணாவின் உரை அபாரம். அவையில் அனைவரும் அவரை மடக்க முயல தன் சாதுர்யமான பேச்சால் தர்க்கபூர்வமாக எதிர்கொண்டு (தன் கருத்து சிறுபான்மையில் உள்ளதை உணர்ந்தும் ) எதிர்க்கருத்துடையவரை தன் வயப்படுத்த பயன்படுத்தும் உத்திகள் சிறப்பு. it was a real சிங்கம் singleஆ தான் வரும் moment!
அண்ணாவின் நாடாளுமன்ற உரைகளில் சுய நிர்ணய உரைகளை காட்டிலும் இந்தி ஆதிக்க எதிர்ப்பு உரைகளில் தீவிரம் அதிகமாக இருந்ததாக தோன்றியது. சீனப் போர், பிரிவினைவாத சட்டம் மற்றும் அக்கால அரசியல��� நிலைமையில் பொருத்திப்பார்க்கும்போது அவரின் கவனமான நிலைப்பாடு புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும், தமிழ் நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் திராவிட உணர்வை ஊட்டமுடியாமல் போனது வருத்தமே. இதற்கு பிற தென்னக மாநிலத்தார்க்கு தமிழ் மீதும் தமிழக தலைவர்கள் மீதும் இருந்த வெறுப்பு காரணமாக இருக்கலாம்.
தனி ஒருவராய் அவரின் வீரமிக்க உரைகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. அவருக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தும் அவரை தொடர்ந்து பேச மற்ற உறுப்பினர்கள் சொல்வது மாற்றானையும் மயக்கும் அவர் பேச்சுத்திறனுக்கு மேலும் ஒரு எடுத்துக்க��ட்டு.
சட்டமன்ற உரைகளில் தமிழ் நாடு பெயர் மாற்றம் தீர்மான உரை உணர்ச்சிபூர்வமாக உணர்ந்தேன்.
வடக்கில் திமுக பற்றிய பார்வை எதிர்மறையாக இருந்ததை (இன்றும் அப்படியே) அவர் உரைகள் மூலமும் பேட்டிகள் மூலமும் மாற்ற முயன்று ஓரளவு வென்றிருக்கிறார்.
அண்ணா நடத்திய பத்திரிகைகள் ஏன் வாரப் பத்திரிகைகளாகவும் மாலைப் பத்திரிகைகளாகவும் வந்தன என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். அண்ணா இருந்த போதே அவரின் 'நம் நாடு' பத்திரிகையை காட்டிலும் 'முரசொலி' சக்கை போடு போட்டுள்ளது வியப்பான தகவல்!!
தனிநாடு கோரிக்கையை இந்திய இறையாண்மைக்குள் சுயாட்சி என்று காலத்திற்கேற்ப மாற்றி பொருத்தியது, தேசிய கவியை மக்கள் கவியாக புதிய பார்வையில் மடை மாற்றியது, பெரியாரின் தீவிர திராவிட கருத்துகளை populist வழிநடைகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்து, தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் இன்றைய சூழலுக்கு ஏற்றாற்போல் customize செய்தது - என்று இவர் ஏன் பேரறிஞர் என்று அழைக்கப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள இந்த புத்தகம் ஒரு தரமான கருவியாக பயன்படுகிறது.
அவரின் மாபெரும் தமிழ்க் கனவு தமிழனுக்கு மட்டுமானது அல்ல; இந்தியாவின் அனைத்து இனங்களுக்குமானது. இதை தமிழன் உணர்ந்தது போல் பிற மாநிலத்தாரும் உணரும்போது கனவு நினைவாகும்.
அண்ணா !! கனிவான தமிழன் ! துணிவான வீரன் ! தெளிவான தலைவன் !
ஒரு வழியாக இந்த இரண்டு மாத ஊரடங்கு நாட்களில் 'மாபெரும் தமிழ் கனவு' புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். 800பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் சிறிது வியப்பு ஆரம்பத்தில் இருந்தாலும், படிக்கப் படிக்க நேரங்கள் சென்றதே அறியவில்லை. பொன்னின் செல்வன் அடுத்தபடியாக என்னை நீண்ட நாட்கள் கட்டிப்போட்டப் புத்தகம் ஒன்று.இந்த புத்தகத்தில் அரசியல், சிறுகதை,மாநில
One of the best books I have read in recent times. He is one of the best thinker/doer political leader India has produced. Plan to take notes on key areas when I read again. Key areas he impresses are his negotiation skills, Gentlemanly way of going about a difficult life, clarity of ideas on difficult topics, compassion, boldness and decisiveness
ஒரு வழியாக இந்த இரண்டு மாத ஊரடங்கு நாட்களில் 'மாபெரும் தமிழ் கனவு' புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். 800பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் சிறிது வியப்பு ஆரம்பத்தில் இருந்தாலும், படிக்கப் படிக்க நேரங்கள் சென்றதே அறியவில்லை. பொன்னின் செல்வன் அடுத்தபடியாக என்னை நீண்ட நாட்கள் கட்டிப்போட்டப் புத்தகம் ஒன்று.இந்த புத்தகத்தில் அரசியல், சிறுகதை,மாநில சுயாட்சி ,விகிதாச்சார பிரதிநிதித்துவம் , போன்ற பல விஷயங்களை அப்போதே ஒரு கை பார்த்து இருக்கிறார் அண்ணா.
ஆனால் இப்போது உள்ள DMK தம்பிமார்கள் அதை கடைபிடிக்கிறார்கள் என்று பார்த்தால் ஒரு துளி அளவுக்கூட இல்லை இப்போதும் அண்ணாவின் கனவு கனவாகவே தான் இருக்கிறது
பேரறிஞர் அண்ணா — அவர் ஒரு அரசியல்வாதி என்பதைத் தவிர அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாது எனக்கு. என்னைப் போன்ற பலருக்கும் இதே நிலை தான் இருக்கக்கூடும். அந்த நிலையை மாற்ற இந்நூல் ஒரு மிகப்பெரிய வரம் ஆகும்.
“பேரறிஞர்” என்றப் பட்டத்தின் காரணத்தை இந்த நூலின் மூலம் புரிந்து கொண்டேன். தான் வாழ்ந்த சமூகத்தைப் பற்றிய அறிவு மட்டும் அல்லாமல் பிற நாடுகளின் கலை, அறிவியல், அரசியல், பண்பாட்டு தளங்களைப் பற்றிய அவரின் ஆழ்ந்த அறிவு என்னை மிகவே வியக்க வைத்தது. அதுவும் இணையம் இல்லாத அந்தக் காலத்தில் இத்தகைய அறிவைப் பெற அவரால் எப்படி முடிந்து?!?!
அரசியலை விடுத்து அண்ணாவை இனி வரும் காலத்தவருக்கு கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை. அதற்கு இந்நூல் ஒரு மிகப்பெரிய கருவியாக அமையும் என்பதில் ஐயமில்லை. கண்டிப்பாக தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
மிகவும் அருமையான புத்தகம்.இது அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை பதிவு மட்டுமல்ல..அண்ணாவை .. அவர் எண்ணம், இலக்கு, சொலாற்றால்,மனித நேயம் உள்ளிட்ட அனைத்து விழுமியங்களின் நேர்த்தியான பதிவு. அவசியம் படிக்கவும்.800 பக்கங்கள் கொண்டது தான் ஆனால் என்னால் 2 வாரங்களில் 300 பக்கங்கள் படிக்க முடிந்தது.நன்கு ஆய்வு செய்த கருத்து பதிவுகள்.. அரிய தகவல்கள் , அண்ணாவின் உரைகள், அரிய புகைப்படங்கள்.படித்து விட்டு தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
"மாபெரும் தமிழ் கனவு"- * பாதுகாக்க வேண்டிய அண்ணாவை பற்றிய ஆவணம் * மாபெரும் தமிழ் தலைவனின் எளிமை மற்றும் உறுதியான அரசியல் நடவடிக்கை பற்றிய புத்தகம் * இன்றைய அரசியல் நிலைமைகளில் அண்ணாவின் அரசியல் கொள்கைகளையும் சமூக பார்வையையும் தமிழகம் உயர்த்தி பிடிக்க வேண்டியுள்ளது...
இந்த புத்தகத்தை படித்து முடிக்கையில் தமிழ் சமூகத்தின் பேரிழப்பையும் வலியையும் உணரமுடிகிறது.
Interesting read. It provides insight into the DREAMs of ANNA and how he worked towards it and what are the obstacles he faced on his journery. Must read and lot of takeaway for us (the youngsters) from our grandpa. It also provides insight into the untimely need of DMK party and its founding principles.