அனைத்து உலகங்களையும் கோடி கோடி கோடானுகோடியோ கோடி உயிர்களையும் படைத்தவர் கடவுள் என்கிறார்கள். எனவே, ஆறறிவு ஜீவன்களாகிய நம்மைப் படைத்தவரும் அவரே. நாம் வேண்டிக்கொண்டதால் கடவுள் நம்மைத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, நம் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான் சொன்னால் அதை மறுத்துரைப்பது எளிதல்ல. அவர் படைத்துவிட்டார். வேறு வழியின்றி நாம் வாழ்கிறோம்[அடிமனதில் அழுத்தமாய்ப் பதிவு செய்யுங்கள்]. வயது முதிர்ந்த நிலையிலோ அதற்கு முன்னதாகவோ நாம் செத்தொழிவது 100% உறுதி. மகான்கள், ஞானிகள், அவதாரங்கள் என்று இதற்கு விதிவிலக்கானவர் எவருமில்லை. சாவு நம்மைத் தேடி வரும்வரை காத்திருக்கிறோம்.