This epic novel is all about the never sung warrior in the Indian freedom history, indomitable valour of the Tamil Queen, Velu Nachiyar. She was a ruler of Sivaganga Estate in Tamil Nadu. She and her women warriors sacrificed their lives in the war against the British. She is regarded as the first queen who fought against the British colonial power in India and triumphed to reclaim her dynasty. Also Kuyil who was the captain of her women's army was regarded as the first suicide attacker in the world history. Captain Kuyili turned herself as a human bomb in the war against British which was happened in 1780.
புத்தகம் : வேலு நாச்சியார் பெண்மையின் பேராண்மை எழுத்தாளர் : சேயோன் பதிப்பகம் : Notion Press பக்கங்கள் : 503 நூலங்காடி : Notion Press
இந்தப் புத்தகம் , எனது படவரி பக்கத்தில் நான் பரிந்துரைக்கும் 100வது புத்தகம் . மிக்க மகிழ்ச்சி.
ஆங்கிலேயரை எதிர்த்து போர் செய்த முதல் அரசி வேலு நாச்சியார் , குறித்து ஏற்கனவே பல தகவல்கள் தெரிந்திருந்தாலும் , தெரியாத சில தகவல்களை இந்த நூலின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது .
வேலு நாச்சியாருக்கு பெரிதும் உதவியாக இருந்த மருதிருவரையும், இந்தியாவின் முதல் தற்கொலை படை போராளியான குயிலியும் சிவகங்கையை மீட்க உதவி புரிந்ததை அறிவேன் . அவர்களின் குடும்பத்தார் பற்றியும் வேலு நாச்சியாருடன் எந்த சூழ்நிலையில் இணைந்தார்கள் என்பதை குறித்து , அறிந்து கொள்ள முடிந்தது .
எந்தவொரு கதையிலும் நாயகர் / நாயகியை உயர்த்திக் காண்பிப்பதற்காக , அவரது ஆட்சியில் நடந்த தவறுகள் / பிழைகள் மறைக்கப்படுவது வழக்கம் . ஆனால் அப்படியில்லாமல் அந்த ஆட்சிக் காலத்தில் நடந்த சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கூறியிருப்பது சிறப்பு .
நான் கல்லூரி படிக்கும் போது நடந்த ஒரு கருத்தரங்கில் , வாழ்க்கையில் முன்னேற இரு புத்தகங்களை படிக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டது . அவை - திருக்குறள் மற்றும் மகாத்மா காந்தியின் சத்திய சோதனை . அதற்கு ஏற்றார் போல - கதையில் பெருவாரியான இடங்களில் திருக்குறளை உவமை காட்டியிருப்பது சிறப்பு .
இறுதியாக , போர் களத்தில் வெள்ளையர்கள் பீரங்கிகளை தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள் . அதை வெல்லக் கூடிய ஆயுதமாம், வளரியை கொண்டு அவர்களை வெல்வார்கள் நம் நாயகர்கள். சரியாக எதிரியை பதம் பார்த்துவிட்டு , எரிந்தவரின் கைகளுக்கே திரும்பிவிடும் வளரி .
அதைப்போல , நீ எதை தருகிறாயோ , அதுவே உனக்கு திரும்ப கிடைக்கும்.
நீ செய்த தானமும், துரோகமும் , ஒரு நாள் உன்னைத் தேடி வந்து சிறப்பாக செய்துவிட்டு போகும் (எங்கோ படித்தது ).
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
வேலு நாச்சியார்: பெண்மையின் பேராண்மை ❤️ • தமிழர்தம் விடுதலைப் போராட்ட வரலாறுகள் எத்தனையோ இருப்பினும் அடிமை விலங்கை ஒழிக்கப் பாய்ந்த இந்தப் பெண் புலி வேலு நாச்சியாரின் வரலாறு தனிச்சிறப்பு வாய்ந்ததே. இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் சற்றும் தளராது விடுதலை வேட்கை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நல்லாட்சி அது தமிழாட்சி ஒன்றேயென்று அதற்காக இறுதிவரை போராடியவளின் தியாகங்களும் வீரங்களும் நிறைந்த உன்னத வாழ்க்கையை கதையாக்கியிருக்கிறார் சேயோன். • வெறுமனே இன அடிமைத்தனத்தை மட்டும் பேசாமல், சமூக ரீதியிலான சாதிய வேற்றுமைகள், மற்றும் கல்வி அடங்கலான உரிமை வேற்றுமைகளைப் பற்றியும் உரையாடியிருப்பது தனிச்சிறப்பு. கூடவே திருக்குறள்கள், சங்க இலக்கியங்களின் மேற்கோள்கள் என பொருத்தச்சேர்க்கைகளும் அழகு. இடையிடையே சில எழுத்துப் பிழைகள் இருப்பினும் கதை சலிப்பில்லாமல் சுவாரஸ்யமாகவே நகர்கிறது. ஆங்காங்கே சிலிர்ப்பும், கண்ணீரும் இயல்பாகவே எட்டிப்பார்க்கிறது. • சக காலத்திலேயே ஒரு விடுதலைப் போராட்டத்தை நடாத்திய நிலத்தின் வாசகர்களுக்கு இக்கதை இன்னும் தொடர்புபடுத்தக்கூடியதாக இருக்கும். பெண் போராளிகள்.. தியாக தீபங்கள்.. விடுதலை வேட்கை.. புத்தகத்தின் உப தலைப்பு: “தமிழரின் தாகம் தமிழ்த் தாயகம்!”
அருமையான படைப்பு... சிறு சிறு எழுத்துப்பிழைகள் இருப்பினும் இந்த முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்..... வேலு நாச்சியார் சுற்றியே கதைக்களம் இருப்பதால் மற்ற கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் குறைந்து காணப்பட்டது... பெண் விடுதலை போராளிகள் குயிலி, உடையாள், வெள்ளச்சி ஆகியோரின் பகுதிகள் சிலிர்ப்பையும் கண்ணீரையும் வரவழைக்கும்.... வரலாற்றில் மறைக்க பட்ட (மறந்த) பக்கங்கள்... எல்லா கதாபாத்திரங்களின் அறிமுகம் அற்புதப்புள்ளரிப்பு... அனைவரும் அறிய வேண்டிய தமிழச்சி மற்றும் தமிழரின் வரலாறு...
சிவகங்கை இராணி வேலு நாச்சியாரின் வீரத்தையும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தையும் விவரிக்கிறது. படிக்கும் போதே வீரம், கோபம், நம்பிக்கை உண்டுபண்ணும்.
மறைக்கப்பட்ட ஒரு விடுதலைப் போராட்ட வீராங்கனையின் கதை தான் இந்நூல்.
வேலு நாச்சியார்! நம் தமிழ்ப் பாட்டி செய்த சாகசங்கள் தான் எத்தனை! கணவனை இழந்து தன்மீது அன்பு கொண்டவர்களை ஒவ்வொன்றாக இழந்து துயரத்தின் எல்லைக்கே சென்றிருந்தாலும் தமிழரின் தாகம் தமிழ்த் தாயகம் என விடுதலைக்காகப் போராடிய வேலு நாச்சியார் கதை புல்லரிக்க வைக்கும்.
தமிழ்நாட்டின் அன்றைய மாவீரர்களையும் அறிமுகப்படுத்துகிறது இந்நூல். மருது சகோதரர்கள், மாவீரன் பூலித்தேவன், அமைச்சர் தாண்டவராயன் போன்றோரையும் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு தோள் கொடுத்த ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றோரையும் சிறப்பாக விவரித்துள்ளார் ஆசிரியர்.
அதுவும் வேலு நாச்சியார் மாறுவேடத்தில் சென்று ஹைதர் அலியை சந்திக்கும் காட்சி அபாரம். 'வெட்டு' உடையாளின் கதை புல்லரிக்க வைக்கும். குயிலியின் தியாகமும் வீரமும் மெய் சிலிர்க்க வைக்கும். எப்படிப்பட்ட தமிழச்சிகள் நம் பாட்டிகள்! நம் இனமடா என மார்தட்ட வைக்கும் வரலாறுகள் அவை.
நம் தமிழ்ப் பாட்டியின் வரலாற்றை சிறப்பாகக் கூறியுள்ளார் ஆசிரியர் சேயோன். ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரசியமாக கதையை தொய்வில்லாமல் நகர்த்துகிறார் எழுத்தாளர்.
இவர் ஒரு தமிழ்த் தேசியவாதி மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர் என்பது நன்றாக தெரிகிறது. ஆங்காங்கே புறநானூறு, அவ்வையார் பாட்டு, திருக்குறள், பெருஞ்சித்திரனார் என பல தமிழ் குறிப்புக்களைக் கொண்டு கதையை வடிவமைத்துள்ளார். அதே போல தமிழ்த் தேசிய வேட்கையை எழுத்தில் வீரியமாக எழுதி நெஞ்சை நிமிர்த்த வைக்கிறார். அந்நிய இனங்களால் ஊடுருவப்பட்டு தமிழரின் ஒடுக்கப்பட்ட நிலையை எடுத்துக்காட்டி நம்மை உண்மை புரியவைக்கிறார். நம் வீரப் பாட்டியின் முன்னுதாரணத்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.
இது ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய நூல். ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் படிக்க வேண்டிய நூல். பாரதி கண்ட புதுமைப் பெண்ணை விட மேலும் சிறப்பாக நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து காட்டிய பெண்ணின் கதை இது!
வீரமங்கை வேலு நாச்சியாரை நம் மனதில் வைத்திருப்போம். அப் பெண் தெய்வத்தை ஒவ்வொரு நாளும் போற்றி வணங்குவோம்!
A book which every Thamizh people must read. The forgotten woman warrior of Tamilnadu, who has now come into limelight through Seyon... Though there may be books on VeluNachiyar, this book seems to be the perfect one. The passion for thamizh language is seen through out the book. The references from purananuru, Avvaiyar poems, Thirukural, Bharatiyar poems, Bharathidasan poems and quotes from perunchitharanar, theveneya paavanar clearly depicts the knowledge of author on Thamizh language. This book encompasses the zeal towards our mother tongue, thamizh and portrays women empowerment, bravery, betrayal, disloyalty, gallantry, love, compassion, wisdom, far farsightedness, and thirst for free province of our great warrior Velu Nachiyar. It also depicts the sacrifices of other women warriors, vellachi, udaiyal, kuyili - the first suicide attacker and the braveness of Maruthu brothers. No doubt, that our ancestors are the epitome of values and mere Congratulations and appreciations are not enough for the author. a perfect example for Feminism. May Goddess thamizh, be with him in all his future endeavours.