இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை.
நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம். அவன் வாழ்க்கை பிரபஞ்ச விதி எதற்குள்ளும் பொருந்தாமல் புடைத்து நிற்கிறது. அதனாலேயே அது வண்ணங்களோ வாசனையோ இல்லாத ஒன்றாகிறது. காலத்தை வெல்வதற்கு அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் புவி நின்று சுழல்கிறது.
அவன் நம்பும் கலையும் அவன் வாழும் உலகும் தயங்காமல் அவனைக் கைவிடும் போதும், அவன் தான் வாழும் உலகுக்குத் தன் இசையையும், தான் நம்பும் இசைக்குத் தன்னையும் ஆகுதியாக்கி அர்ப்பணிக்கிறான்.
Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.
Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.
Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.
What a book! Pa.Raghavan's Iravaan is surely worth translating since it seamlessly blends an Indian prodigy's story with a question of identity.
In what is a loose translation "Being a genius trying to fit in among normal people is like a dad pretending to be an elephant for his kid. The dad can stop pretending, but the genius is stuck for life". The book is simply brilliant like that.
Edwin a muscial prodigy from Mumbai feels he is a gifted Jew named Abraham who is bound for greatness. Early on he performs multiple miracles like writing in Hebrew and decides his path will lead him to Jerusalem. Much to the bewilderment of his parents, he finds his way to a Synagogue and then learns to play multiple instruments. On his path he hears a girl offer him bun at a tea shop and destines her for ever lasting greatness.
The parallel track is of how his friends perceive his miracles and eccentricities. He forms a band called Devil which plays original music composed by him. He has a casual relationship with his drummer, a girl who loves him for his genius without expecting anything from him.
The audiobook experience was greatly enhanced by the narration of two narrators - Deepika Arun and Veera. The author brilliantly writes the blurring between reality and prophecy. I loved a few phrases so much that I reread it.
"Sometimes, you do not want the clarity of understanding. You are comfortable to stay in the muddle of possibilities"
பிரமாதமான வாசிப்பனுபவத்தை கொடுத்தது இந்த நாவல். பா.ரா. அவர்களின் அபுனைவு எழுத்திற்கு பெரும் ரசிகன் நான். இன்னும் சொல்ல போனால் அபுனைவு புத்தகங்களை இன்று நான் வாசிப்பதற்கு தொடக்கமே பா.ரா. அவர்கள் தான். எட்வின் ஜோசப் (அ) ஆபிரஹாம் ஹராரி என்ற இசைக்கலைஞனின் பயணம் தான் இந்த நாவல். மாய யதார்த்த எழுத்து. பல இடங்களில் இதனை எப்படி புரிந்து கொள்வது என்ற குழப்பம் எனக்கு எழுந்தபடியே இருந்தது. ஆனால் பா.ரா.அவர்களின் அட்டகாசமான எழுத்துநடை நாவலை விரைந்து வாசிக்க வைத்தது. பல இடங்களில் மெய் சிலிர்க்க வைத்தது. வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். நிச்சயம் ஒரு புதுவிதமான வாசிப்பனுபவத்தை அளிக்கும்.
புத்தகம் : இறவான் ஆசிரியர் : பா. ராகவன் பக்கங்கள் : 288 பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
ஒரு இசைக் கலைஞனுடைய வாழ்வைப் பற்றிப் பேசுகிறது இப்புத்தகம். எட்வின் என்ற அக்கதாபாத்திரம் தனது வாழ்வில் சந்திக்கும் புற, அகச் சிக்கல்களை இப்புத்தகத்தை வாசிப்பவர்களாலும் (குறிப்பாக கலைஞர்கள்) பொருத்திப் பார்க்க முடியும்.
தனிமையின் அவசியம், மற்றவர்களின் எள்ளலான சிரிப்பு, ஒரு படைப்பை உருவாக்க முடியாமல் போகும்போது இருக்கும் மனநிலை, படைப்பைக் குறித்த பெருமிதம், மதிப்புரைகளுக்குக் காத்திருக்கும் தருணம், நிராகரிப்பின் வலி, அங்கீகாரம் கிடைக்கும் தருணம், படைப்பைத் தவிர்த்து மற்றவற்றை அவ்வளவாய்ப் பொருட்படுத்த முடியாமல் போகும்போது இருக்கும் மனநிலை, ஆதரவான வாழ்க்கைத் துணையின் அவசியம், கைம்மாறாக மற்றவர்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போகும் நிலை என இவை அனைத்தையும் பொருத்திப் பார்க்க முடியும்.
ஆனால் என்னால் உடன்பட முடியாத சில பகுதிகளும் இப்புத்தகத்தில் இருந்தன.
1) கலைஞர்கள் என்றால் வினோதமாகத்தான் நடந்து கொள்வார்கள் - சற்று முன்னப் பின்ன தான் இருப்பார்கள் என்பது போன்ற வசனங்கள் புத்தகத்தில் இருந்தன. ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட குணநலன்களைக் கொண்டிருப்பார்கள் எனப் பொதுமைப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது ஆளுமையை இன்னும் முழுமையாக வளர்த்துக் கொள்ளாத இளம் வயதில் இருப்பவர்கள் சிலருக்கு இம்மாதிரியான பொதுமைப்படுத்தல்கள் தேவையில்லாத மனச்சிக்கல்களை உருவாக்கும்.
2) புற/அகச் சிக்கல்கள் இப்புத்தகத்தில் காட்டப்பட்டிருக்கும். இருப்பினும் அந்த அகச் சிக்கல்கள் என்பது கலை சார்ந்ததாக இருக்காது. ஒரு படைப்பை உருவாக்குவதில் உள்ள திறன் சார்ந்த பிரச்சினைகள் இப்புத்தகத்தில் பெருமளவில் காட்டப்பட்டு இருக்காது.
3) இப்புத்தகத்தில் எட்வின் குழந்தையிலிருந்து மேதையாக காட்டப்படுவான். எந்த ஒரு இசைக் கருவியையும் பயிற்சி செய்யாமலேயே வாசித்து விடுவான் என்றெல்லாம் காட்சிகள் இருக்கும். பிறக்கும் போதே திறமையோடு பிறக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான் என்பது மாதிரியான எதிர்மறையான கருத்தை இப்புத்தகம் காட்டுவதாக உள்ளது. நிஜ உலகில் சிறு வயதிலேயே அதிக திறன் பெற்று இருக்கும் குழந்தைகள் (Prodigy) இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்தத் திறன் அவர்களது பயிற்சியின் மூலமே மேம்படுகிறது. பயிற்சி எடுத்துக் கொள்ள முடியாத குழந்தைகளது திறமை காலப்போக்கில் அப்படியே காணாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. இப்புத்தகம் தொடர் பயிற்சியை முன்னிலைப்படுத்தவில்லை.
4) நான் பிழையாக ஒரு விஷயத்தை உருவாக்க மாட்டேன் - எனது படைப்பு திரும்ப திருத்துவதற்கான இடமே இல்லாமல் சரியாக இருக்கிறது - நான் மேதை - மற்றவர்கள் எல்லாம் சராசரி என்பது போன்ற அகங்காரமான வார்த்தைகளை பக்கத்திற்கு பக்கம் படிக்க முடியவில்லை. இப்படி பேசுபவர்களை நிஜ உலகில் எப்படி சகித்துக் கொள்ள முடியாதோ அதேபோல புனைவுலகிலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.
5) பிழையான ஒரு படைப்பை என்னால் உருவாக்க முடியாது என்று சொல்வதும் - அந்தப் படைப்பு நிராகரிக்கப்பட்ட பின்பு ஆங்காங்கே பிசுறுகள் இருக்கத்தான் செய்யும் என்று சொல்வதும், அங்கீகாரத்திற்காக எதையும் படைக்கவில்லை என்று சொல்வதும் - இச்சமூகம் எனது இசைக்கான மதிப்பை கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்வதும் ஒரு பக்குவமற்ற மனநிலையையே காட்டுகிறது. 20களில் உள்ளவர்கள் இப்படிச் சொல்லலாம்/யோசிக்கலாம். ஆனால் 35 வயதான எட்வினும் அப்படிச் சொல்வது முரண்பாடுகளோடு போராடுகிற ஒரு மனிதனின் சுபாவத்தைக் காட்டுவது போல உள்ளது.
6) அட்டைப் படத்தில் இருந்த வாசகம்: "ஒரு கலைஞனை நினைவில் நிறுத்த அவனது ஒரு படைப்பு போதும். இன்னொன்று தேவை என்று உனக்குத் தோன்றினால் முதலாவது சரியில்லை என்று பொருள். இன்னொன்று தேவை என்று அவனுக்கே தோன்றினால் அவன் கலைஞனே இல்லை என்று பொருள்" Highly disagree on this one.
7) கதையின் முடிவு இரண்டு இடங்களில் இருந்தது போலத் தோன்றியது. கடைசி அத்தியாயத்தில் அவன் அவனது வாழ்வை முடித்துக் கொள்வது போல இருக்கும். தற்கொலையைப் பற்றிப் பேசும் புத்தகங்களுக்கு அதிக பொறுப்புணர்வு தேவை. ஆனால் இப்புத்தகத்தில் "கடவுள்களின் அவதாரங்கள் அதன் நோக்கம் முடிந்தவுடன் நிறைவடைந்து விடுகின்றன. அதுபோல நானும் எனது இசையை அரங்கேற்றி விட்டு புறப்பட்டு விடுவேன் என்பது போல ஒரு வசனம் இருக்கும். இதனைப் படிக்கையில் இக்கதையில் நிகழ்ந்த தற்கொலையை நியாயப்படுத்துவது போல, சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஊக்கப்படுத்துவது போல அந்த வசனம் இருந்தது. இம்மாதிரியான கருத்துக்களை நான் வரவேற்பதில்லை.
8) கதையின் முடிவு இன்னொரு இடத்தில் அதாவது ஏழாம் அத்தியாயத்தில், அவனது இசையான 'கருவின் சுவாசம்' (எவ்வளவு அழகான வார்த்தை) பெரிய அரங்கத்தில் இசைக்கப்படுவது போல முடிவடைந்திருக்கும். சிவப்புக் கம்பள வரவேற்பு இருக்கும். அவனுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இந்த அத்தியாயத்தைப் படிக்கையில் எட்வினுக்காக நான் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த முடிவையே புத்தகத்தின் இறுதியாக எடுத்துக் கொண்டேன்.
இதை எங்கே தொடங்குவது என்றே தெரியவில்லை. ஒரு அபாரமான படைப்பை வாசித்துமுடித்தபிறகு உடனே வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு அந்தகாரத்தனிமைதான் இந்த நள்ளிரவில் என்னைச்சூழ்ந்திருக்கிறது.
ஆசிரியர் திரு. பா.ராகவனின் இறவான் நாவல் ஒரு காவியம். அதற்கு மேல் ஏதேனும் சிறந்த வார்த்தை இருந்தாலும் போட்டுக்கொள்ளுங்கள். நான் உணர்ச்சிவசப்படவில்லை, முகஸ்துதி செய்யவில்லை, இதன் உள்ளடக்கம் சொல்லும் சப்டெக்ஸ்ட் சாதாரணமானதல்ல. அதனைப்படித்துத்தெளியும்போது உள்மனதில் உருவாகும் ஒளி சொல்லும், இது ஒரு காவியமேயென.
இறவான் எனும் இந்த கிளாசிக் யாரைப்பற்றியது? ஒரு இசை மேதை, ஒரு யூதன், ஆப்ரஹாம் ஹராரி, எட்வின் ஜோசஃப், சந்தானப்ப்ரியன் என மூன்று பெயர்களைக்கொண்ட பெரும் மேதையின் கதை என்று ஒற்றை வரியில் கடந்துவிடக்கூடியதல்ல. நாயகபாவம் மட்டுமே கொண்ட வாழ்க்கை வரலாறோ, வந்தான், வென்றான் வகையறா வெற்றிக்கொடி கட்டு கதையுமல்ல. இது அதற்கும் மேலே, எல்லாவற்றிற்கும் மேலே, சொல்லப்போனால் இதை கதை என்ற வகைமைக்குள் அடக்குவதையே ஆப்ரஹாம் ஹராரி விரும்பமாட்டான்.
ஒரு மேதையின் மனம் எவ்விதம் இயங்குகிறது என்பது மானுடம் சந்தித்திக்கொண்டிருக்கும் சவாலான கேள்விகளுள் ஒன்று. அங்ஙனம் அதன் இலக்கணத்தை மீறாமல் வாழ்ந்த ஒரு இசை மேதையை மேதையின் மனத்தை தொடரும் கதை.
"இசை உனக்குத்தெரியுமா" என்ற கேள்விக்கு அவன் அளிக்கும் விடை, "அது எனக்கு வரும் என்பது". ஆம், அப்படித்தான் அவனுக்குள் இறை இசையை வர வைத்திருக்கிறது. "நான் மேதைக்கு சற்று மேலே, இறைவனுக்கு அருகே" என்று தன்னைத்தானே கற்பிதம் செய்துகொள்கிறான்.
தொட்ட வாத்தியத்தையெல்லாம் பத்து நிமிடங்களுக்குள் இசைக்கவைக்கும் கெட்டிக்காரனாய் சிறுவயதிலிருந்து வளர்கிறான். அவனுக்குள் பாசம் இருக்கிறது, காதல் இருக்கிறது, காமம் கரைபுரண்டோடுகிறது. தன் ஆதியைத்தெரிந்து கொண்ட அவன், ஏதோ ஒரு புதிய அந்தத்தைத்தேடுகிறான். அவனின் தேடல்களின் நியாயம் அவனுக்கு மட்டுமே புரிந்திருக்கிறது.
இஸ்ரேலுக்குப்போவது, சிறுவயதில் தான் சந்தித்த அல்லது சந்திததுபோல் உணர்ந்த ஆஹீர் பைரவி பாடிய நீள்விழிகள் கொண்ட பெண்ணைத்தேடுவது, பின்பு சிம்பொனி எழுதி பெர்லினுக்குப்போவது என அவனுக்கு இலக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆனால் தன் ஆன்மிக பலத்தால் அதை சிருஷ்டித்துக்கொள்கிற கதாபாத்திரம் அவன். ”வாழ்வுக்கு ஒரு தாளகதி உண்டு, அதில்தான் அனைத்தும் இயங்கியாக வேண்டும்” என்று இறை அவனுக்குக்கு அளிக்கும் அசரீரியை மேற்கொண்டு, அதன்படியே தன் தேடல்களை தகவமைத்துக்கொள்கிறான். இவற்றை அவன் மேதமை கொண்ட மனத்தோடு எங்ஙனம் கடந்துசெல்கிறான் என்பது நாவலின் மையம்.
இந்த நாவல் யாரைப்பற்றியது என்று விசாரணை செய்துகொண்டேதான் படிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் என் அற்ப மனம் அத்தகையது. எதையேனும் எவற்றின் மீலாவது ஏற்றியபடியே பயணித்தால், பயணம் லகுவாகுமே என்று. எனக்குத்தெரிந்த எல்லா இசை மேதைகளையின் பெயர்களையும் ஆப்ரஹாம் ஹராரியின் மேல் ஒத்திசைத்துப்பார்த்திருதேன். ஆனால் அவர்களிள் பெரும்பாலோனோரை பா.ராகவனே நாவலுக்குள் இழுத்து, “இவன் அவனில்லைடா மவனே” என்று நம்மை பாதை மாற்றுகிறார்.
இளையராஜா, ரஃபி, சுதா ரகு நாதன், பப்பி லஹரி, ஃபெலிக்ஸ் மெண்டல்ஷான், மாதுரி தீட்சித் ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களாக அவரவர் பெயரிலேயே வந்து செல்கிறார்கள். ஓ வசந்த ராஜா, கஸ்தூரி திலகம், ஆஹீர் பைரவி, நந்த நந்தன மீரா பஜன், ஃபெலிக்ஸ் மெண்டல்ஷனின் சாங்க்ஸ் வித்தவுட் வோர்ட்ஸ், சுதா ரகுநாதனின் நடபைரவி என விதவிதமான இசையும் நாவல் முழுக்க தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ஜானவி என்றொரு பெண்பாத்திரம் இருக்கிறது. ஆப்ரஹாம் ஹராரி என்கிற எட்வின் ஜோசஃபின் தோழி. அவன் மேதமையைப்புரிந்து கொண்டு அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அவனோடு இருந்து, என்றேனும் ஒரு நாள் அவனை இந்த உலகம் கொண்டாடும் என்று காத்திருப்பவள். ”ஏழெட்டு கணவன்களை எதிரே வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கும் சுகத்தை உனக்கு புரியவைக்கமுடியாது” என்று தன் தாளக்கருவிகளைச்சொல்லும் அற்புத பாத்திரம் அது. உலகம் ஒவ்வாவிடினும், ஒவ்வொரு மேதைக்கும் இப்படி ஒரு ஜானவி வாய்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்த நாவலின் நடை பா.ராவிற்கே புதியது என்று எனக்குத்தோன்றியது . அவரின் வழக்கமான தொட்டால் வழுக்கிக்கொண்டு சொல்லும் நடையை சற்றே நிறுத்தி, இன்னொரு புதிய மொழியை, புதிய நடையை அவனுக்காக கைக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தையும் சற்றே நிதானத்துடன், பின்னணியில் ஆங்காங்கே அவர் சொல்லியிருக்கும் இசையுடனேயே கடந்து வந்தேன் எத்தனை அற்புத அனுபவம் அது.
இந்த நாவலில் வரும் இசையை மட்டுமே ஒரு ப்ளேலிஸ்ட்டாக்கி வைத்திருக்கிறேன் . அதில் குழைத்திருக்கும் கலவை போன்றதுதான் நாம் கேட்டுக்கொண்டிருக்கும் இசை. ஆனால் ஆப்ரஹாம் ஹராரி என்கிற எட்வின் ஜோசஃபிற்கு அது அதற்கெல்லாம் பல கோடி மைல்களுக்கு மேலே இறைவனுக்கு சற்றே அருகில் இருக்கிற இன்னொரு இறைமை. அதைத்தேடி அவன் மேற்கொள்ளும் பயணத்தை வாசித்து அனுபவியுங்கள். தவறவிடக்கூடாத நாவல் இது.
The life story of a musical genius who imagines himself to be a Jew called 'Abraham Harari' made for interesting reading, as he goes through the internal and external struggles of composing a symphony. The non-linear narration sometimes threw me off, but the skillful writing always pulled me back in. I particularly enjoyed the portions describing his friendship and experiences with his fellow band members, especially Jahnavi, as well as his experiences with the film industry. The philosophical exploration of music and its relationship with the human condition, shown through various characters was insightful.
பல சமூக ஊடக நண்பர்களின் பேசு பொருளாக இருந்த இறவான் புத்தகத்தை ஒரு பயண துணையாக எடுத்தேன் . இறவானின் நூலாசிரியர் பா.ராகவன் என் வரலாற்று பசிக்கு தமிழில் தீனிபோட்ட ஒரு திமிங்கலமாய் அறிமுகமாகியிருந்தார் . கணிதமும் , வரலாறும் சுவரசியமில்லா பாடம் என்று சொல்பவர்களை கட்டி போட்டு ஆசிரியர் ராகவன் கையில் சவுக்கை கொடுத்து வெளுக்க வைக்க வேண்டுமென்ற திட்டம் கூட என்னிடம் இருந்தது . இறவான்க்கு முன் அவருடைய இன்னொரு புத்தகமான யதி தான் என் கண்ணில் முதலில்ப்பட்டது . அதன் பக்கங்களின் எண்ணிக்கை நான் பார்த்த சமயத்தில் என்னை யோசிக்க வைத்தது . வாசகர்களின் வாய்மொழியால் என் கவனத்திற்கு வந்த இறவான் , என் தலையணை போல் இல்லாமல் ஒரே நாளில் என் தலைக்குள் ஏறும் எண்ணிக்கை கொண்ட புத்தகமாக இருந்ததால் , யோசிக்கும் முன் கையிலெடுத்தேன் . பேருந்தின் ஜன்னல் ஒரே சீட்டில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்த கதை , இரவில் பேருந்தில் ஒளிர்ந்த ஒற்றை ஒளியுடன் முடிவடைந்தது . ஒரு இசை மேதையின் கதை இந்த இறவான் . ஏகப்பட்ட cliche . மேதை என்றால் போதைக்காரன் , யாரிடமும் ஒட்டாதவன் , தனிமையை விரும்புபவன் , காசுக்கு ஆசைப்படாதவன் , கால் போகும் போக்கில் பயணிப்பவன் என்று நாம் எதிர்பார்க்கும் அத்தனை clicheவுக்கும் நடுவில் இருப்பவன் தான் இந்த இறவான் . அத்தனை cliche இருந்தும் ஒரு பக்கம் கூட சுவாரஸ்யமில்லாமல் இல்லை . மற்ற எழுத்தாளர்கள் பேனா கொண்டு கதை எழுதினால் பா.ராகவன் மட்டும் கத்தி கொண்டு தன் கதைகளை உருவேற்றுகி��ார் . அதனாலோ என்னவோ நம் உணர்வுகளுடன் ஓட்ட இறவான் தவறிவிடுகிறான் . உணர்ச்சிகளை கொட்டும் எட்வினை நம்மால் தூரத்தில் நின்று தான் பார்க்க முடிகிறதே தவிர அவனுடைய இடத்தில வைத்து பார்க்க முடியவில்லை . 300+ பக்க நாவலின் தோல்வி அதுவென்றே நான் சொல்லுவேன் . தமிழில் மேதைகள்/கிறுக்கர்களை பற்றிய ஒரு நல்ல முயற்சி இதுவென்பதால் தான் நான் வழங்கும் 4 நட்சத்திர மதிப்பெண் ( எனக்கு அதற்கு கீழ் வழங்க தெரியாது , வழங்கவும் வராது ) . யதியை எளிதாக படித்து விடலாம் என்கிற நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது என்பதையும் , அதன் மேல் இருந்த எதிர்பார்ப்பு சற்று குறைந்திருக்கிறது என்பதையும் பதிவு செய்வதோடு என் பதிவை நான் முடித்து கொள்கிறேன் .
I am ambivalent about this book, but the more I think about it, the more I seem to appreciate the craft that has gone into it. I have so many thoughts to jot down, and I'm not entirely sure if this "review" will ever be coherent. I understand that this book is in the genre of magical/hallucinatory realism, which I have read a fair few of before.
First of all, I'm not sure if Raghavan intended him to be, but the protagonist is unreliable. If it had not been for the other characters' POVs that he is actually talented, I would have assumed that he was simply a madman who imagines himself as a prodigy. He is selfish, indifferent to others' emotions and is just unlikable in general. I don't even know what's real and what's not. In my opinion, I don't think he is actually Jewish; he cannot write or speak Hebrew or Yiddish, and he does not have the memories from past lives; he's just baked out of his mind from all that weed he smokes all the time.
Is this, perhaps, just a manifesto of a failed prodigy who believes he is superior to everyone else, only to eventually realise he isn't? If so, isn’t that the real tragedy? Also, I wouldn't call Janhavi his "ultimate supporter"; to me, she is merely a victim of his narcissism. The tragedy here just isn't that a "God" was sacrificed; the tragedy is the waste of a human life, one that was so consumed by the idea of being a genius that it forgot how to be a person.
But hey, you don't have to like the protagonist to appreciate the writing, 4.00/5.
ஒரு இசை மேதையின் வாழ்க்கை சராசரி மக்களுடன் எந்த அளவு முரண்படுமென்று அருமையாக புனையப்பட்ட புதினம். நான் நினைத்த பல யூகங்களை உடைத்தெறிந்த எட்வின் பண்புகள் சில இடங்களில் மயிர் கூச்சரியச் செய்தன. சில இடங்களில் தொய்வுகள் இருப்பினும் தத்துவார்த்த கருத்துகள் மரு தராசில் அவைகளை சமன்படுத்துகின்றன.
இளையராஜா மேலயே கை வச்சுடீங்களே பாரா! இருந்தாலும் வாழ்த்துக்கள் :)
பிடித்த பகுதி: இக்கதை யாரையும் குறிப்பிடுவதில்லை. - பாரா எதையும் யாரையும் குறிப்பிடாமல் எவன் வாழ்வும் இல்லை. -ஆபிரகாம் ஹராரி