அவளது உலகம் சிறியது.. அந்தப் பிரம்மாண்ட அரண்மனைக்கும், பரந்த தோட்டத்திற்கும் அவளுக்கும் தூரத்து உறவினர் என்பதைத் தவிர யாதொரு சம்பந்தமுமில்லை.. தோட்டத்தின் மத்தியிலிருக்கும் வீடு கூட கருணையின் அடிப்படையில் குடியிருக்கத் தரப்பட்டது.. அவளுக்குச் சொந்தமானதல்ல..