பெரும்பாலும் வாசகர்கள் கேள்வி கேட்டு அதற்குப் பதில் அளிக்கும் முறையே வழக்கத்தில் உள்ளது. ஆனால் இதற்கு மாறாக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ.இறையன்பு, கேள்விகளை தானே உருவாக்கி அதற்குத் தக்க பதில்களை அளித்து, "நமக்குள் சில கேள்விகள்" என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுத்துள்ளார். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், வாழ்வியல் சிந்தனைகள், நேர மேலாண்மை, மருத்துவம், ஆன்மிகம், வரலாறு, அறிவியல் என பல்வேறு துறைகள் சார்ந்த கேள்விகளுக்கு சிந்தனையைத் தூண்டும் வகையில் பதில் அளித்துள்ளார். அறிவுத் தாகத்தைத் தணிக்கும் கருத்துகள் கொண்டது இந்நூல்.
V. Irai Anbu (Tamil: வெ. இறையன்பு) is an IAS Officer, writer, educator, social activist and motivational speaker. He is the current Chief Secretary of Tamil Nadu Government .
Irai Anbu has been a motivational speaker and hosted a show named Kalloori Kaalangal ( Tamil: கல்லூரி காலங்கள் ) in DD Pothigai in which he shared his experiences about his college life. He has written more than 150 books.