Jump to ratings and reviews
Rate this book

பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1)

Rate this book
பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று - எழுத்தாளர் ஜெயமோகன்

117 pages, Kindle Edition

Published February 24, 2020

26 people are currently reading
89 people want to read

About the author

Selventhiran

8 books56 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
56 (33%)
4 stars
62 (37%)
3 stars
40 (23%)
2 stars
7 (4%)
1 star
2 (1%)
Displaying 1 - 21 of 21 reviews
Profile Image for Vivek KuRa.
279 reviews51 followers
January 13, 2021
A very brief nice Tamil travelogue with a lot of nice trivia. It made me look up interesting places in Rajasthan/Gujarat and add them to my google maps bucket list.A must read.
Profile Image for Thangavel Paramasivan.
47 reviews9 followers
December 18, 2020
நான் வாசிக்கும் செல்வேந்திரனின் நாலாவது புத்தகம் இது. முதல் பயண நூல் என்றே நினைக்கிறேன்.

1. வாசிப்பது எப்படி
2. நகுமோ லே பயலே
2. உறைப்புளி

4. பாலை நிலப்பயணம்


ஜெயமோகன் தளத்தின் மூலம் செல்வேந்திரன் அறிமுகம்.
ஆசிரியர் அவரது நண்பர்களுடன் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் பயணம் செய்த அனுபவ கட்டுரைகள் அடங்கிய நூல் இது.

மென்சிரிப்புடன் கடந்து விடலாம் என்று தொடர்ந்து வாசித்தாலும் அடுத்த வரியிலேயே வெடிச்சிரிப்பு வரவைக்கும் சொற்களை பயன்படுத்துவதில் கில்லாடியாக தெரிகிறார். பயண அனுபவங்களை வாசகர்களுக்கு நன்றாக கடத்தியிருக்கிறார், அவற்றின் மூலம் அங்கங்கு கவித்துவத்தையும் , தத்துவ வடிவங்களையும், மனதை கவரும் உவமைகளையும் தூவி விட்டிருக்கிறார்.
பயணங்களின் ஊடே அவ்விடங்களின் வரலாறு, இசை, ஓவியம், உயிரியல், மானுடவியல், புவியியல் தகவல்கள் மூலம் வாசிப்பனுபவத்தை மேலும் செறிவூட்டியிருக்கிறார். சில இடங்கள் அடுக்கை விட்டு மீறியவையாக இருந்தாலும் பெரிய குறையாக படவில்லை.
மற்ற படைப்பாளிகள் , நூல்கள், கவிதைகள் என அறிமுகம் செய்திருப்பதும், அது ஒரு பயணநூலுக்கு பொருந்தியிருப்பதும் சிறப்பு.

நிச்சயம் வாசிக்க சலிப்பூட்டாத நூல்.

செல்வேந்திரனின் நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, நெருக்கமானதாவும் உணருகிறேன். அவரது அடுத்த படைப்பை வாசிக்க ஆர்வமுடன் காத்திருப்பேன்.
Profile Image for Harikrishnan.
74 reviews8 followers
May 26, 2021
பயணம் செல்லமுடியாத இத்தருணத்தில் இந்த பயணநூல் வாசிப்பனுபவம், பயணம் சென்ற மகிழ்ச்சியை தந்தது.
பிரமிள் கவிதைகள் பற்றி குறிப்பிட்டது கொஞ்சம் புரியவில்லை..
பாலைநிலத்தில் பார்க்கவேண்டிய இடங்களும் சாப்பாட்டுக்கடை பற்றியும் சொன்னது பயனுள்ளதாக இருந்தது.
This entire review has been hidden because of spoilers.
6 reviews1 follower
September 22, 2021
Interesting book. My imagination was ignited as if I was traveling to those places. It's a good imaginative journey due to the author's excellent descriptive words about the places. Without traveling I learned a lot of tips and information about certain places.
Profile Image for Jagan K.
50 reviews15 followers
August 13, 2020
The dream

Like the author says every travel, and in turn the travelogue, are like dreams and the end of which thrusts you into reality. This was like walking through Rajasthan and Gujarat with friends. Selventhiran gives equal importance all essential parts of a travelogue: the history and geography, the wildlife, Art etc. But my favorite portions are the ones where he takes a pause soaks in a moment and just ruminates. Overall a very unpretentious lovely and memorable book
Profile Image for Renya Ragavi.
37 reviews4 followers
July 15, 2023
பாலை நிலப் பயணம் - செல்வேந்திரன்

நூலாசிரியரான செல்வேந்திரன் , எழுத்தாளர் ஜெயமோகன் போன்ற மற்ற பல எழுத்தாளர் நண்பர்களோடு ஜெய்ப்பூரில் தொடங்கி அகமதாபாத் வரை தாங்கள் சென்ற ஒரு பயண அனுபவத்தை ஒரு புத்தகமாக தொகுத்து வழங்கியுள்ளார்.

எல்லோருக்கும் வாழ்வில் மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் அது பயணம் தான். சாதாரணமாக ஒரு இடத்திற்கு போவது வேறு பல புத்தகங்களையும் பல விஷயங்களையும் அறிந்து கொண்டு அதே இடத்திற்கு செல்லும் போது அந்த அனுபவம் வேறு.

அப்படித்தான் புத்தகம் முழுக்கவும் இவர்கள் சென்ற இடங்களில் இருக்கும் சிறப்பம்சங்கள் , அந்த இடத்தின் வரலாறு , மக்களின் வாழ்வியில் , பழக்கவழக்கங்கள் , உணவு முறை என எல்லாவற்றையும் பற்றி ஒரு கதை போல வாசகர்களுக்கு எடுத்துரைக்கிறார்.

பயணத்தில் ஒப்பிடுவது என்பது மிகப்பெரிய குற்றம் . ஒவ்வொரு இடத்திற்க்கும் ஒரு தனிச்சிறப்பு தனித்துவம் உள்ளது . அதை அப்படியேதான் இரசிக்கவேண்டுமேயொழிய அதனை மற்ற இடங்களுடன் ஒப்பிடுவது தவறு.

ஓசியான், ஜெய் சல்மார், சாம் மணர் குன்றுகள், தேசிய பாலைவனப் பூங்கா, பார்மர், பூஜ் நகரம் , ஜோகமாதா ஆலயம் , ரான் ஆப் கட்ச் , பன்னி புல்வெளி , ராணி கி வாவ் , மொதேரா சூரிய கோவில் , அட்லெஜ் படிக்கிணறு , சபர்மதி என பல இடங்களுக்கு பயணித்து அந்த இடங்களை பற்றியும் அவற்றின் அமைப்பைப் பற்றியும் மிக அழகாக எழுதியிருப்பார்.

சாதாரணமாக பயணிப்பது வேறு நண்பர்களுடன் பயணிப்பது வேறு . இவர் தனது நண்பர்களுடன் பயணித்ததால் அங்கு நிகழ்ந்த கேலியான சிரிப்பூட்டும் பல நிகழ்வுகளையும் பதிவு செய்திருப்பார்.

வரலாற்று சிறப்பு மிக்க இடம்மட்டுமல்லாமல் அந்த நிலப்பரப்பு அங்கு வாழும் ஜிவராசிகளின்‌ விவரங்களைப் பற்றியும் பல தகவல்களை எழுதியுள்ளார்.
குறிப்பாக நீல்கே மான்கள் , மங்கோலிய நாரைகள் , சிங்காரா மான்கள் , Great Indian Bustard , Indian spiny Tailed Lizard , Flemingo போன்றவற்றைப் பற்றி விவரிக்கும் போது நாமும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என தூண்டவைக்கும்.

என் போன்ற பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள்களுக்கு இதுபோன்ற நூல்களே பேராருதல். படிக்க படிக்க எப்படியாவது இந்த ஊர்களுக்கேல்லாம் சென்றுவிட வேண்டு என்ற ஒரு ஆதங்கம்.

இந்த புத்தகத்தை படித்த இந்த ஒரு‌வாரம் என் கனவு முழுவதும் பாலை நிலமும் , அவ்வூர் மக்களின் ஆடை , அவர்கள் அடுக்கடுக்காய் பானையை சுமந்து செல்லும் காட்சி , அவ்வூர் கட்டடக்கலை , ஓவியங்கள் , இசை , சப்பாத்தி என ஒவ்வொன்றும் நினைவிலும் கனவிலும் வந்து வந்து போய்க்கொண்டே இருக்கிறது.

இதேபோல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் இலக்கற்ற பயணி என்னும் ஒரு பயண நூலை எழுதியிருப்பார்‌. தான் கண்ட இடங்களை தனது எழுத்தின் மூலம் படிப்பவர்களை அந்த இடத்திற்க்கே கொண்டு செல்வார். அவர் நயாகராவை பற்றி எழுதும்போது எனது காதில் அந்த நீர்வீழ்ச்சியின் சத்தமும் முகத்தில் சாரல் அடித்துபோன்ற ஓர் உணர்வு . அந்த புத்தகம் ஓர் மறக்கமுடியாத அனுபவம்.

இந்த இரண்டு புத்தகங்களையும் வாய்ப்பு கிட்டும்போது வாசித்து மகிழுங்கள்‌.
1 review
Read
March 4, 2020
Short and sweet travel tale

பயணம் பற்றிய புத்தகங்கள் அருகி வரும் சூழலில் இது ஒரு பாலைவனச் சோலை. எளிய நடையும், துல்லிய விவரிப்பும் பயணத்தில் நம்மையும் பங்குதாரர் ஆக்குகிறது. ஆவலுடன் அடுத்த பயணத்துக்கு காத்திருக்கிறோம்.
Profile Image for Anitha Ponraj.
276 reviews42 followers
January 5, 2023
பாலை நிலப் பயண‌ம்
செல்வேந்திரன் ✨

பயண புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வரம் என்றே சொல்லலாம்.

ஜெய்ப்பூரில் இருந்து அகமதாபாத் வரை நண்பர்களுடன் மேற்கண்ட ஆசிரியரின் பயண அனுபவம் தான் இந்த அருமைய���ன புத்தகம்.அதில் நாமும் பயணிக்கிறோம் ஆசிரியரின் வார்த்தைகளில்.

அழகு தமிழில் எழுதப்பட்ட விதம், கண்முன் காட்சிகளை விரியச்செய்யும் வர்ணனைகள், சங்க இலக்கய மேற்கோள்கள், அந்த அந்த இடத்தை பற்றிய முன்னறிவு, பயண நேரங்களில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை, நண்பர்களுடனான கேலிப்பேச்சுகள்,கவிதைகள், நினைவுகளில் நிஜங்கள், சமூக அக்கறை கொண்ட உரையாடல்கள், பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என அத்தனையையும் 91 பக்கங்களுக்குள் அடக்கிவிட்ட ஆசிரியரின் மீது கண்டிப்பாக கோபம் வரும். இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாமே என்று.

ஆனால் பொன்னிற கற்களை உடைத்த மைசூர்பாகு போல இருக்கு, ஃபௌமிங்கோ மண்ணில் நடனமாடும் ஃபலூடாக்கள் என்று ஒப்புமை காட்டி நம் கோபத்தை திசை திருப்பிவிடும் ஆசிரியரின் ராஜதந்திரம் கண்டனத்துக்குரியது.

பொதுவாக புத்தகம் வாசிக்கும் போது நான் ரசித்தவை,மேற்கோள்கள், இடங்களின் குறிப்பு என குறித்து வைத்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. இந்த புத்தகம் முக்கால்வாசி குறித்து வைத்துள்ளேன். அவ்வளவு நான் ரசித்த புத்தகம்.

தமிழ் ஆர்வலர்கள், புத்தகப் பிரியர்கள், பயணப் விரும்பிகள் ,உணவு வெறியர்கள் என அனைத்து தரப்பினரும் நிச்சயம் விரும்பும் ஒரு நினைவு பெட்டகமாக அமைந்துள்ளது இந்த பாலை நிலப் பயண‌ம் ✨
Profile Image for Olivadivu Pazhanirajan.
61 reviews4 followers
April 16, 2020
This book is a joyful read mixed with humor and travel info. This is the traveling experience of a group of friends including author to the Indian deserts starting from Rajasthan to Gujarat. The writing style of the author made me hard to put down the book until I finish. I always prefer to travel stories than travel guides about the place whenever I travel somewhere. I enjoyed it a lot
36 reviews2 followers
April 17, 2020
Nice experience

Felt as if I was traveling with the author and the gang. The diversions to related topics are also enjoyable.
4 reviews
March 10, 2020
Very good! Recommended!

Such a light-hearted travelogue with sudden deep observations! We get the feeling of travelling with the group of friends ourselves.Thats the success of the book.Well written. recommended.
Profile Image for Balaji Srinivasan.
147 reviews10 followers
November 29, 2020
பயண சம்மந்தப்பட்ட புத்தகங்கள் என்றால் ஒரு தனி பிரியம் உண்டு. ராஜஸ்தான், குஜராத் போன்ற பாலைவன மாநிலங்களில் ஒரு எழுத்தாளர் குழு மேற்கொண்ட பயணத்தின் சிற்சில நிகழ்வுகள்.

குஜராத்தின் அடிக்கிணறுகள், ராணி கி வாவ் ஆகியவை மனதில் பதிகின்றன.
Profile Image for Subhasree Sundaram.
2 reviews1 follower
June 26, 2020
Interesting narrative

Selvendrans interesting narrative style along with the rich details makes this travelogue one of the best reads in this genre.
Profile Image for Zajith.
5 reviews1 follower
July 20, 2020
நம்மையும் பயணத்தில் இணைத்துக்கொண்டார்.. சிறு பயணம் சென்ற உணர்வு.
33 reviews1 follower
September 30, 2020
Good

Got to know many things n Rajasthan and gujarat.... Liked the way Selvanthiran written the book... I wish Selva to write about south india as well...
20 reviews2 followers
March 5, 2021
குஜராத்திலும், ராஜஸ்தானிலும் பயணப் படுவது போலான உணர்வு..எளிமையாக வரலாற்று பின்புலத்துடன் புனைந்த விதம் நன்று!!
53 reviews1 follower
January 2, 2023
பாலை நில பயணம் நிச்சயமாக பயணம் செய்ய நினைப்பவர்களை இந்த புத்தகம் சிறப்பாக வழிநடத்தும். ஆசிரியர்கள் ஒன்றாக பயணித்து அதை புத்தகமாக மாற்றிய ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்...
20 reviews
January 29, 2025
The best and shortest travelogue book to read, his writing style is excellent!!
1 review
November 27, 2025
Good book... Book is all about travelling inside Rajasthan and Gujarat...
Word Rajasthan comes 2 times and word Modi comes 20 times in the book...Nice one...
Profile Image for Udhaya Raj.
100 reviews2 followers
August 26, 2023
It was great that by reading this book I was able to observe a journey at its best up close.
Displaying 1 - 21 of 21 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.