Jump to ratings and reviews
Rate this book

எண்ணித் துணிக கருமம்: அண்ணாவின் கையெழுத்து கருவூலம்

Rate this book
இனி தி.மு.க.வை ஒழித்துக் கட்டாமல் விடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடமும் – தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் கூடிப் பேசி; கொண்டு வந்தனர் ஒரு சட்டத்தை!

அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால்; தி. மு. கழகம் பிரிவினைக் கொள்கையைப் பேச முடியாது – பேசினால் கழகமே இருக்க முடியாது – இப்படி ஒரு சூழ்நிலையில், “சுவரா? சித்திரமா?” என்ற கேள்விக்கு விடை காண ஆழ்ந்த சிந்தனையில் கழகத்தினர் இருந்தபோது; அதுபற்றிய விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துக் கொண்டிருந்தபோது – தி.மு. கழகத்தின் பொதுக்குழு 1963ம் ஆண்டு சூன் திங்கள் 8,9,10 நாட்களில் கூட்டப் பெற்றது.

அந்தப் பொதுக்குழுவில் இந்தச் சிக்கலான பிரச்னைக்குத் தீர்வு காண ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண

94 pages, Kindle Edition

Published September 18, 2019

9 people are currently reading
85 people want to read

About the author

C.N. Annadurai

84 books77 followers
Conjeevaram Natarajan Annadurai, (C. N. அண்ணாதுரை) affectionately known as Anna ("Elder brother") or Arignyar Anna (அறிஞர் அண்ணா - "Anna, the scholar"), was an Indian politician who served as 1st Chief Minister of Tamil Nadu for 20 days in 1969 and fifth and last Chief Minister of Madras State from 1967 until 1969 when the name of the state of Madras was changed to Tamil Nadu. He was the first member of a Dravidian party to hold either post.

He was well known for his oratorical skills and was an acclaimed writer in the Tamil language. He scripted and acted in several plays. Some of his plays were later made into movies. He was the first politician from the Dravidian parties to use Tamil cinema extensively for political propaganda. Born in a middle-class family, he first worked as a school teacher, then moved into the political scene of the Madras Presidency as a journalist. He edited several political journals and enrolled as a member of the Dravidar Kazhagam. As an ardent follower of Periyar E. V. Ramasamy, he rose in stature as a prominent member of the party.

Annadurai was known as one of the best Tamil orators during his time. He developed a style in Tamil public speaking using metaphors and pleasing alliterations, both in spoken and written language. Anna was also best known for his extempore speaking ability being very well affluent on rhetoric skills.

After his electoral success with his DMK in 1967, the Congress has not yet returned to power in Tamil Nadu. His government was the first in the country to be from a non-Congress party with full majority.

Annadurai travelled to New York for medical treatment and he was operated for Cancer in the gullet at the Memorial Sloan Kettering Cancer Center. After he returned, he continued to address several official functions against medical advice. His health deteriorated further and he soon passed away. His funeral had the highest number of attendees until then, as registered with The Guinness Book of Records. An estimated 15 million people attended it. His remains were buried in the northern end of Marina Beach, which is now called Anna Memorial.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
37 (90%)
4 stars
2 (4%)
3 stars
2 (4%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Gowtham.
249 reviews50 followers
June 14, 2020
பிரிவினை தடை சட்டம் கொண்டுவந்த நேரத்தில் திமுக வின் அடிப்படை கொள்கையான “திராவிட நாடு” கோரிக்கை ஏன் கைவிடப்பட்டது என்பதற்கான காரணங்களை "எண்ணித் துணிக கருமம்" என்ற தலைப்பில் அண்ணா தயார் செய்த குறிப்பு, பின்னாளில் கலைஞர் கருணாநிதி அவர்களால் வெளியிடப்பட்டது தான் இந்த நூல்.

அண்ணாவின் அரசியல் அறிவும், தொலைநோக்கு பார்வையும், கொள்கை மற்றும் கட்சியின் மீதான புரிதலும் இந்த நூலின் மூலம் மீண்டும் நிரூபணமாகிறது அப்போது அவர் யோசிக்காமல் இப்போதிருக்கும் அரசியல்வாதிகள் போல் ஒரு முடிவு எடுத்திருப்பாரேயானால் இன்று திராவிட இயக்கம் செயலற்று போயிருக்கும்.

இப்போதிருக்கும் அரசியல் சூழலில் எனக்கே பல முறை ஏன் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார் என்று அவர் மீது ஒரு விமர்சனமும் ஆதங்கமும் இருந்து வந்திருக்கிறது, ஆதற்கான அதனை காரணங்களையும் கடைமட்ட தொண்டனுக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் விளக்கியுள்ளார்.

மக்களுக்காக சிந்திக்கும் ஒரு பெருந்தலைவனால் மட்டும் தான் இப்படி சிந்தித்து முடிவெடுக்க முடியும்.”பாசறை இருந்தால் மற்றும் தான் போர்ப்படை இருக்கமுடியும்” என்று சொல்லும் இடம் மயிர்சிலிர்க்கும்.

அண்ணாவையும் திராவிட சிந்தாந்தத்தையும் இப்போதிருக்கும் நம் போன்ற இளைய தலைமுறையினர் ஆழ்ந்து படித்து மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

அண்ணா ஒரு தீர்க்கதரிசி! கொள்கை முடிவெடுப்பதில் பேரறிஞர்! திராவிடத்தின் சொத்து!

நூல் : எண்ணித் துணிக கருமம்

ஆசிரியர் : அறிஞர் அண்ணா

வாசிப்போம் திராவிடம்!
Profile Image for Ravishankar Ayyakkannu.
Author 3 books91 followers
October 21, 2019
A political science masterpiece

Must read to understand the genius Anna and the vision/care he had. Should be placed in Top 10 Anna books.
Profile Image for Dinesh.
29 reviews
Read
April 1, 2024
நான் அண்ணாவை பற்றி பெரிதும் அறியாதவன், அவரின் அரசியல் அறிவையும் பற்றி படித்ததில்லை. ஆனாலும் அவரின் சில செயல்கள் இக்காலத்திலும் மிகவும் பேசப்படுகிறது, முக்கியமாக அவரின் எதிர்ப்பு அரசியல், ஹிந்தி திணிப்பு மீதும், இருந்தது குறிப்பானவையாகும். இது போக இப்போது இருக்கும் முக்கிய கட்சியாக விளங்கும் தி மு க வை உருவாக்கியவர் என்றும் , மு க விற்கு முன்னோடியானவர் என்றும் அறிவேன். இவை போக அவரை பற்றிய ஆழமான அறிவைபற்றியும் செயலைப்பற்றியும் அறியாதிருந்தேன்.
நான் பெரியாரின் வாழ்க்கை சரித்திரத்தை வாசித்த போது, தி க விலிருந்து விலகி தி மு கழகத்தை நிறுவியவர் என்றறிந்தேன். அதன் மூலம் அவரைப் பற்றி சிந்திக்க முயலும், மற்றும் திராவிடம் பற்றி அறியும் பொழுதும், அதில் உள்ள முற்போக்குத்தன்மை என்னை மிகவும் ஈர்க்கும் விதத்தில் உள்ளதாக உணர்கிறேன், ஆனாலும் தற்காலத்தில் அந்த திராவிடத்தின் பெயரால் இயங்கும் கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் இதை அறிந்தவர்களா என்பது கேள்விக்குறியே.!?
இவ்வாறு அவரைப்பற்றி அறியாதவரையாயினும் இந்த முதல் நூல், அவர் என்றோ தன் கட்சி தொண்டர்களுக்காக எழுதியதை வாசிக்க முடிந்தது. இந்த நூல் அவரைப்பற்றி அறிய மிகவும் ஏதுவானதாக அமைகிறது.
அவரின் ஆழமான சிந்தனைத் திறனைப்பற்றி அறிய முடிகிறது.
பிரிவினை சட்டத்த்தை நிறைவேற்றுவதை மையமான கொள்கையை கொண்டு உருவான இந்த இயக்கம் அரசின் எதிர்ப்பினால் மற்றும் அதை முற்றிலும் அழிக்க அரசு மேற்கொள்ள விருக்கும் சட்டத்தை முன்னிட்டு கொள்கைக்கும் கட்சிக்கும் களங்கம் விளைவிக்க முடியாத வகையிலும் இந்த பிரிவினை சட்டத்தை எதிர்த்து இனிமேல் எந்த எதிர்ப்பும் தொடரமுடியாத நிலையினை உறுதி செய்கையில், மீறி செய்கையால் ஏற்படும் நன்மை தீமை அணைத்து கோணங்களிலும் யோசித்து, அனைவரின் கருத்துக்களையும் ஆராய்ந்து,அவரால் உறுதி செய்யப்பட்ட முடிவை பற்றின விரிவான உரையாலாகும்.
இந்த உரையாடல்கள் அவரின் உள்ளே ஏகோபித்த கருத்துக்களையும் மிகவும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.
இக்காலத்திலும் இது மிகவும் வியப்பாக தான் இருக்கிறது.
இக்காலத்திலும் இவ்வளுவு நேர்மையான மற்றும் ஆழமான சிந்தனைவாதியான ஒரு கூட்டத்திற்கு ஒருவர் தலைமை பொறுப்பில் இருந்திருக்கிறார் என்பதை அறியும்போது வியக்கிறது. மேலும் நம்மை உத்தியேகப்படுத்துகிறது .
இதை படித்ததின் விளைவு என்னுள்ளே மிகுந்த ஒரு விதமான உத்தயேகத்தை தந்ததாக உணர்கிறேன், ஒரு திருக்குறளையும் கற்க முடிந்துள்ளது.
இந்த நூலை பொது வெளியில் வெளியிட்டமைக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
அதிசயமாக நான் வேலூர் மார்க்கெட் வழியாக செல்லும் போது தென்பட்டு அதை வாங்கினேன்,
இறுதியாக நான் கற்று கொண்டது,
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"
10 reviews
January 4, 2023
அரசியல் ஆர்வமற்றவர்களாயினும், தி.மு.க. வை விரும்பாதவராயினும், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு இயக்கத்தைக் காக்க ஒரு தலைவர் எப்படி முடிவெடுக்க வேண்டும், என்னென்ன முறைகளில் சிந்திக்க வேண்டும் என்பதை அண்ணா அவர்களின் அறிவாற்றலும் அழகுதமிழும் சொல்லித்தருவதைப் புறக்கணிக்க முடியாது. அறிவு நேர்மை, கொள்கைப்பற்று, பிறர் கருத்துக்கு மதிப்பளித்தல், அரசியல் தெளிவு, போர்க்குணம், தொலைநோக்குப் பார்வை, தலைமைப்பண்பு என்று பல நல்லியல்புகளும் ஒருசேர அமையப்பெற்ற பெருந்தலைவர் பேரறிஞர் அண்ணாவை எண்ணி எண்ணி வியக்கிறேன்.
5 reviews
August 27, 2020
Exhibits decision making skills of Anna

Beyond politics, this book should be read by all. A guidance on decision making. The depth that Anna has gone into take the decision is something extraordinary.
Profile Image for Manivannan Rajan.
13 reviews4 followers
December 1, 2019
அரசியலில் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தலைவனின் உரை..... Glimpse of his intellect... Awesome 👌
Profile Image for Sivasankar S.
18 reviews
January 6, 2020
Wonderful read on how the DMK treaded a key ideological issue. Wonder the political parties do such kind of discussions affecting them or the country these days!!
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.