What do you think?


Vikatan 1000 / விகடன் 1000
‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்னும் தாயுமானவரின் வரிகளையே தனது கொள்கை முழக்கமாகக் கொண்டு, அரசாங்கம், அதிகார அமைப்புகள், ஆன்மிகம், இலக்கியம், ஓவியம், இசை, நடனம், திரைப்படம், சின்னத்திரை என சமூகத்தின் அத்தனை அம்சங்களிலும் அந்தந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 92 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்கூறு நல்லுலகுக்குச் சுவையான தகவல் விருந்து அளித்துவருகிறான் விகடன். 2000-வது ஆண்டு வரை ஆனந்த விகடன் அளித்திருந்த அந்த மெகா விருந்திலிருந்து ‘ஒரு சோறு பதமாக’ சில முக்கியமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘பொக்கிஷம்’ என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டிருந்தோம். அது வாசகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று, பல பதிப்புகள் கண்டது. இதோ, கண் மூடிக் கண் திறப்பதற்குள் மேலும் 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. தாய்ப் பத்திரிகையான ஆனந்த விகடன் தவிர, ஜூனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், சுட்டி விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன், டாக்டர் விகடன், விகடன் தடம் என, பல்வேறு ரசனைகள் கொண்ட வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பிரத்யேக பத்திரிகைகளை வெளியிட்டுவருகிறது விகடன் குழுமம். ஆனந்த விகடன் உள்ளிட்ட விகடன் குழுமப் பத்திரிகைகள் அனைத்திலிருந்தும் அற்புதமான கட்டுரைகளைத் தொகுத்து வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததில், ஆயிரம் பக்கங்கள் கொண்ட மெகா புத்தகமாக கன கம்பீரமாக மலர்ந்துவிட்டது.
Hardcover
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

