இந்த நூலில் அறிமுகமாகும் ராசி- விஷ்ணு தம்பதி என் கற்பனைக் கதாபாத்திரங்கள். அதில் ராசி செய்யும் அட்டகாசங்களுக்கு, ஈடு கொடுக்கும் விஷ்ணுவைப் பரிதாபத்துக்குரியவராய் சித்தரித்திருக்கிறேன். நீங்கள் ,உங்களயே கூட அந்தத் தம்பதிகளின் இடத்தில் சில சமயங்களில் பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.ஆணாதிக்கம், பெண்ணியம் என்கிற எந்த சிந்தனைக்குள்ளும் இவர்கள் இருவரையும் நான் சிறைப்படுத்தவில்லை. ஜாலியாக உலவ விட்டிருக்கிறேன். படிப்பவர்களுக்கு விஷ்ணு அப்பாவியாகத் தோன்றலாம். அவ்வளவே.,ராசி விஷ்ணுவை எவ்வளவு சங்கடப்படுத்தினாலும் ராசி அவரின் காதல் மனைவி.இவர்கள் இருவரின் லூட்டியும் இந்த நூலுடன் முடிந்து விடவில்லை.