இது வெறும் கதையாக மட்டும் கருதப்படாமல், இதில் எங்கேனும் ஒரு இடத்தில் தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய், படிப்பவர் நெஞ்சை ஒரு தருணமேனும் இது மீட்டிவிட்டால், என் ஆசை வீண் போகாது.
நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையை சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர் விட்டு, விஷயம் மெருகேறி, பிறகு, நம் ரத்தத்தில் தோய்ந்து நம் மனதையும் மாண்பையம் ஊட்டி வளர்க்கும் காவியமாகி விடுகிறது.
நிகழ்ச்சியின் கிளர்ச்சி அடங்கி ஓய்ந்த பிறகு, பின்னோக்கிலேனும் வாழ்க்கையைக் காவியமாகப் பார்க்க நமக்கு வக்கு இல்லாமற் போனால், நாம் வாழவே தகுதியற்றவர்கள்; மன்னிப்பவனே மன்னிக்கப்படுவான்.
இதைத்தான் இந்நாவலில் நான் சொல்ல முற்பட்டிருக்கிறேன்.
Lalgudi Saptarishi Ramamrutham was a veteran Tamil novelist, having authored 300 short stories, 6 novels and 10 collections of essays.
Born in 1916, he was a native of Lalgudi and one of the writers of the Manikodi era. He started writing when he was 20 originally in English and then changed over to Tamil. He worked in Punjab National Bank for 30 years and settled down in Chennai after his retirement. La.Sa.Ra. worked for three years as a typist in Vauhini Pictures, which then produced a series of landmark Telugu films like "Vande Mataram", "Sumangali", and "Devata". It was then K. Ramnoth, another South Indian movie director, told La.Sa.Ra. not to waste his gift indicating that his hoping for a career in films would not be salutary. He ultimately became a banker but he continued with his writing.
He won the Sahitya Akademi Award in 1989 for Chintha nathi, a collection of autobiographical essays.
Hard hitting book that reverberates with the sounds of the words. This is no normal read.
La.Sa.Ra uses his storytelling prowess to disorient the reader before settling into the story. Starts with an unidentified narrator describing a mother cursing her son with a burning pyre near her. The narrator takes multiple forms, jumps time to present the life of one woman.
We visit this woman's life at multiple stages - as a daughter, a wife, a daughter-in-law, mother, mother-in-law. We also see the bonds, the thoughts and the relationship with other people in her life.
Like watching a 4D movie, the sound adds to the effect and emotions being played out - which is tough to describe in words. Reading the book is an experience and I had the added advantage of Deepika Arun's voice reading it out along with the book.
இந்நாவல்,. "ஜகதா" எனும் பிராமணப் பெண்மணி மாமியாராக, தாயாக, மருமகளாக, மனைவியாக, மகளாக தன் குடும்பத்துள் எப்படி வளைய வருகிறார் என்பதை மூன்றாம் நபரின் பார்வையிலிருந்து, கிட்டத்தட்ட அவருடைய பிறப்பு முதல் இறப்பு வரை, முன்னும் பின்னுமாய்(NonLinear) எழுதப்பட்டிருக்கிறது. எழுதப்பட்ட காலம் ஏறத்தாழ 52ஆண்டுகட்கு முன்பு என்பதால் அக்காலத்து பேச்சு, கலாச்சார வழக்கை ஒட்டி அமைந்திருக்கிறது.
இந்நாவலை படித்தோம் என்பதை விட உணர்வுரீதியாக ஒரு குடும்பத்தின் சுக துக்கங்களை நேரிலேயே பார்த்து சென்றோம் என்றே சொல்லவேண்டும். நடைமுறை வாழ்வியலை வெகு எளிதாயும், அதே நேரத்தில் தத்துவார்த்தமாய் அநாயசமாக சொல்லிச் செல்கிறது, இந்நாவல்.
இதுவரை நாம் படித்து வந்த எழுத்து நடைகளை விட சற்றே வித்தியாசாமானதாக இருக்கிறது, லா.ச.ரா'வினுடையது.
பக்கங்கள் குறைவு என்றாலும், (மனதில்)பாதிப்பின் அழுத்தம் அதிகம்!
தமிழ் இலக்கிய உலகம் என்பது உலக இலக்கியத்திற்கு தன் பங்கினை பெரிதாக ஆற்றவில்லை என்னும் ஒரு எண்ணம் சில வருடங்களுக்கு முன் என்னுள் இருந்துகொண்டிருந்தது . வாசிப்பு என்பதை ஆங்கில புத்தகங்களிலிருந்து ஆரம்பித்த என் போன்ற ஆட்களுக்கு ஜனரஞ்சக நாவல்களை படித்து முடித்துவிட்டு ஆங்கில இலக்கியத்திற்குள் நுழைந்து அதில் ஒரு சுற்று முடித்தபின் தமிழ் நாவல் உலகத்திற்கு வந்தவுடன் முதலில் அறிமுகமாகும் எழுத்தாளர்கள் கல்கியும் , சுஜாதாவும் தான் . அவர்கள் எழுத்தில் குறையொன்றும் இல்லாதபோதும் ஜனரஞ்சக எழுத்துக்களில் ஆங்கில எழுத்தாளர்களுக்கு ஈடாக அவர்கள் இருந்ததில்லை என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும் . அதே எண்ணத்துடன் தமிழின் இலக்கிய உலகத்திற்கு காலடி எடுத்து வைக்கும் போதும் நம்மை வரவேற்கும் ஜெயகாந்தன் , ராமகிருஷ்ணன் , சாண்டில்யன் போன்றோரின் ஜனரஞ்சக இலக்கியம் (நான் புரிந்து கொண்டவகையில் வாசகர்களுக்கு வாசிப்பின் போது பெரிதாக கஷ்டம் கொடுக்காமல் வாசிப்பு வழியே சமூகத்தின் வாழ்க்கையை வலியை கடத்துதல் ) ஆங்கிலம் இலக்கியம் படித்துவிட்டு வரும் வாசகரை பெரிதாய் விழ்த்தாது . அப்போது ஒரு எண்ணம் , கேப்ரியல் கார்சியா போன்ற முராகாமி போன்ற பாமுக் போன்ற எழுத்தாளர்கள் தமிழில் இல்லையென்று தோன்றும் (நான் மேல் சொன்ன எழுத்தாளர்களே ஆங்கில இலக்கிய எழுத்தாளர்கள் இல்லை என்று நீங்கள் சாடுவது எனக்கு கேட்கிறது ). இது போன்ற எண்ணம் தோன்ற காரணம் புத்ர போன்ற நாவல்கள் பெரிதாக வெளியே தெரியாமல் இருக்கும் காரணத்தால் தான் . தனித்தமிழுடன் , தனிநடையுடன் ஒரு குடும்பத்திற்கு விடுக்கப்பட்ட சாபத்தை பற்றி விவரிக்கும் இந்த நாவல் ஒரு இலக்கியம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டுமென்று இல்லாமல் இருந்து இலக்கணத்தை படிப்பவருக்கு உணர்த்துகிறது . ஒரே படைப்பில் மனதின் எண்ண ஓட்டங்கள் , விவரிப்புகள் , தத்துவ உரையாடல்கள் , வார்த்தை விளையாட்டுகள் , கொஞ்சமும் இடம் தவறாமல் இருக்கும் அதே சமயம் எளிய புரிதலுடன் இருக்கும் பாடல்கள் என 200 பக்கத்திற்கும் குறைவான ஒரு படைப்பில் ஒரு படைப்பாளியால் என்னென்ன தரமுடியுமா அத்தனையும் தந்திருக்கிறார் . கதாபாத்திர வடிவமைப்பு , கதை சொல்லப்பட்ட விதம் , திடிரென்று புகும் magical realism என்று ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சரியதை தந்து கொண்டேயிருக்கும் அற்புத நாவலிது . லா.ச.ரா வின் அற்புத படைப்பு அபிதா என்று சக எழுத்தாளர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் . இந்த நாவலே இப்படியிருக்கும் போது அந்த நாவலின் எதிர்பார்ப்பு என்னுள் இன்னும் அதிகரிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . கண்டிப்பாக அபிதாவுடம் , அபிதாவின் விரிவான விமர்சனத்துடன் மீண்டும் வருகிறேன் .
ஆண் குழந்தை பிறக்காது போகட்டும் என நூறு ஆண்டுகளாக தொடரும் சாபம்தான் கதையின் மையம்.
1965ல் வெளிவந்த நாவல். உரைநடையில் கவிதை போலொரு மொழி நடை. மிகையில்லாத வர்ணனைகள், வெவ்வேறு கோணங்களில் கதை சொல்கிறார். 'ஒரு நாள், கொல்லையில் கிணற்றடியில் ஒரு பூ கிடக்கக் கண்டாள். ஒரு சிறிய சொம்பளவுக்குக் கண்ணைப் பறிக்கும் சிவப்பான இதழ்கள் தென்றலில் நலுங்கி, பூ அவளை வா வா என்றழைத்தது. அதை வியந்து கையிலெடுத்ததும், திடீரென்று உடல் பரபரத்தது. சொல்லொண்ணாப் பீதியும் பழக்கமில்லா வெட்கமும் கண்டது" - ஒரு பெண் பூப்பெய்தும் நிகழ்வை இப்படி எழதியிருக்கிறார். கதை நெடுக இதுபோன்ற கோணங்கள்.
The edition I read (thanks to the Tamil Sangam library in Sion, Mumbai) was published by "BOOK VENTURE" in 1965. BOOK VENTURE was the publishing wing of the "Vasagar Vattam"(வாசகர் வட்டம்), this book is such a lovely harbound production which has abstract drawings by the author.
ஆசிரியர் - லா .ச . ரா நாவல் 144 பக்கங்கள் டிஸ்கவரி வெளியீடு
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்று தமிழில் ஒரு வாக்கியம் உண்டு. அது வெறும் வாய் வாக்கியம் கிடையாது . அது ஒரு வலியின் ஓங்காரம் , உணர்ச்சி பெருக்கின் உச்சம் , உள்ளக்குமுறலின் வெடிப்பு . தவறான தீர்ப்பால் தன் தலைவனை இழந்து தவித்த கண்ணகியின் ஒரு சொல் ஒரு நகரையே எரித்து சாம்பலாக்கியது. அந்த நகரில் அப்பாவிகளும் , பல நல்லவர்களும் இருக்கத்தான் செய்தனர் , ஆனால் அந்த நொடி , அந்த கோபம் , அந்த கண்கள�� , அந்த உணர்ச்சி , அந்த சொல் - இவையனைத்திற்கும் எந்த பாகுபாடும் தெரியாது . இப்படி நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் பல்வேறு சூழ்நிலைகளில் நம்மிடம் இருந்தும் சில சொற்கள் விழுந்திருக்கும் , விழுந்த இடமும் , காலமும் ஆறாத வடுவாக இன்னும் அவ்வப்போ��ு நினைவுகளில் ஒரு நெருடலை கொடுத்துக்கொண்டே இருக்கும் . மனிதனின் ஒவ்வொரு சொல்லும் மூலையில் இருந்துதான் உருவாகும் என்றால் , இந்த சொற்கள் எங்கிருந்து வந்தன ? மனம் என்ற ஒன்று நம் உடலில் எங்கிருக்கிறது என்று இதுவரை நாம் அறியவில்லை என்றாலும் அவ்வப்போது தன் இருப்பை இவ்வாறு நம்மை உணரச்செய்கிறது .
" அடே ! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது " இப்படி ஒரு தாய் தான் பெற்ற வயிறு பற்றி எரிந்து தன் மகனுக்கு எதிரே புத்ர சாபம் விடுவதோடு கதை தொடங்குகிறது . கிழவி தன் ஊருக்கு திரும்பி படுக்கையாக இருக்கும் தன் கணவனிடம் நடந்ததை கூறவும் , அன்று பொழுது விடிய விடிய அவள் கணவனின் உயிரும் அவளை தூற்றிவிட்டு தன்னந்தனியே விட்டு விலகுகிறது.தன் தந்தையின் உடலை காண மூன்று நாள் கழித்து வந்த மகனிடம் மீண்டும் கோபம் . ஆனால் இம்முறை அவனுக்கு கரணம் இருக்கிறது , கருவுற்றிருந்த அவள் மனைவியின் கரு கலைந்துவிட்டது ,கலைந்த கரு ஒரு ஆண் .சாபம் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிவிட்டது . அத்துடன் கதை இரண்டாக பிளவுறுகிறது . ஒரு பக்கம் தன் மனைவி மக்கள் வேலை என்று சராசரி வாழ்க்கையில் மகன் . மற்றொரு பக்கம் வாழ்வின் அணைத்து ஒளிகளும் மங்கிய வீட்டில் ஒற்றை தீபத்தின் ஒளியில் தள்ளாத வயதில் தன் வாழ்க்கையை தனியே நடத்தும் கிழவி . சாபம் ? சாபம் என்றும் சாவதில்லை . மகனின் கடைக்குட்டி ராஜு ,தன் தந்தை ஆசையாய் கொடுத்த பெப்பெர்மிண்டை விழுங்க சாபம் அவனை விழுங்கிவிட மீண்டும் இறப்பு , மீண்டும் ஆண் .இம்முறை அந்த இறப்புடன் கிழவியின் இறப்பும் சேர்ந்துகொள்ள , கதை முடிந்துவிட்டதோ ? இல்லை கிழவியின் நினைவு பறவை போல பறந்து தான் ஐந்து வயதில் இந்த வீட்டிற்கு வந்த இடத்தில இருந்து கதை மீண்டும் தொடங்குகிறது . அந்த கதை தான் இதுவரை நாம் படித்த கதைக்குள் இருக்கும் தர்க்கங்களை நமக்கு புரியவைக்கும் . சாபம் என்ன ஆனது ? சாபம் , அதை தொடுத்தவரையே ஒரு கட்டத்தில் சர்ப்பம் போல விழுங்கிவிடுகிறது . இதற்கு பிறகாவது மகனுக்கு ஒரு மகன் கிடைப்பானா ?
லா ச ரா தமிழ் இலக்கிய உலகில் தனித்து நடைபோட்டவர் . தனக்கென ஒரு மொழி , ஒரு நடை , ஒரு களம் என ஒப்பீடுகளுக்கு அப்பார்பட்டவர் . அவரை விமர்சிக்க இன்னும் ஒருவர் பிறக்கவில்லை , பிறக்கப்போவதும் இல்லை . கவிநடையில் உரைநடை , அதற்கும் மேலே இசை வடிவில் உரைநடை , உணர்வுகளே உயிர்பெற்று கதைக்குள் நுழைவது , காலத்திற்கு கைகால்கள் முளைத்து நம்முடன் பயணிப்பது , ஒரு கதைக்கு ஒரு வண்ணம் பூசுவது இப்படி இவரின் தனித்துவம் ஏராளம் . அதுசரி புரிந்தால்தானே படிப்பதில் ஒரு அர்த்தம் ? என்று ஒரு வகுப்பு கேட்கலாம் . மண்ணை முட்டாமல் விதை முளைப்பதா ? விண்ணை கீறாமல் ஒளி படருவதா ? வலி தாங்காமல் வாரிசு கிடைக்குமா ? அப்படித்தான் இலக்கியமும் . ஒளித்துவைத்து பொருள் தேடுவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது .அது வினை பொருளாக இருந்தாலும் சரி , அகப்பொருளாக இருந்தாலும் சரி .
இந்த கதைக்கு ஒரு வண்ணம் இருக்கிறதென்றால் அது நீலம் . நீலம் மெல்ல மெல்ல கதை நெடுக பரவி பரவி காகிதத்தை கூட நீலம் ஆக்கிவிடும் . இந்த கதைக்கென ஒரு காலம் உள்ளது அது இருளும் வெளிச்சமும் தங்களுக்குள் ஒளிந்து விளையாடும் புலரும் வேளை . அந்த வேளை ஒரு உயிரோட்டம் அதனை ஒரு படமாகவோ , ஓவியமாகவோ பிடித்து வைப்பது அரிது , அந்த அரிதான ஒன்றை தன் இலக்கியம் வழி இவர் பிடிக்க முயன்றுள்ளார் .இந்த கதையில் பிரதானமாக வரும் மூன்று பெண் பாத்திரங்கள் . சமகால பெண்கள் இவர்களை வாசிக்க வேண்டும் . இவர்கள் இன்றும் பல வீடுகளில் மாட்டுப்பெண்களாக வாழ்ந்துகொண்டுதான் வருகின்றனர் . அவர்கள் அந்த வாழ்வை அப்படி ஏற்றுக்கொண்டதற்கும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது . ஆம் , தன்னை ஒரு நாள் இருளாக்கும் என்று தெரிந்தேதான் இரவு அந்த நிலவை சுமந்து செல்கிறது .
இந்நாவல் படிக்க தொடங்கிய முதல் புரியவே இல்லை, இந்த நாவலின் நடை ஒரு கவித்துவமாகவே இருந்தது ஒரு முறைக்கு இருமுறை படித்தால்தான் ஏதோ புரிய ஆரம்பிக்கும் ஆனால் போகப் போகத்தான் புரிந்தது. இந்த கவித்துவம் எல்லாம் நம்முள் இருக்கின்றாய் என்ன ஓட்டங்கள் எவை எல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தையையும் லா.ச.ரா எழுதி இருந்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் மேலும் படிக்க தூண்டுகிறது. கதை பொருத்த வரை, பெற்ற தாயே தன் மகனை சபிக்கிறாள் உனக்கு ஆண் குழந்தையே பிறக்காது அப்படி பிறந்தாலும் நிலைக்காது. ஏன் அப்படி கூறினாள் என்று கதை நகர்கிறது அத்தாயின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும். லா. ச. ரா அவர்கள் இன்னாவலை முழுமையாக முடிக்கவில்லை. வரும் காலங்களில் முடிவு வரும் என்றாரே ஒழிய அதைப் பற்றி எழுதவே இல்லை.
குறிப்பாக பெண்களைப் பற்றி இந் நாவல் கூறும் விதம் அவளின் உணர்வுகளை வேதனையை பிள்ளை பெறும் நேரத்தை காமத்தை குழந்தை தனத்தை அவளின் பிள்ளைகளின் இறப்பை மாமியார் வீட்டு வருகையை அவள் வாழ்வில் படும் எல்லா கஷ்ட நஷ்டங்களையும் மிகவும் பிரம்மிக்கிற வைகையில் கவித்துவமாக எழுதியிருக்கிறார் ஆக சிறந்த படைப்பு என்றே கூறுவேன்.
Listened to this story in storytel. Kudos to the Narrator (Deepika Arun) who brought the story to life in front of my eyes. Finished listening to the story in a single day.
The perspective of story teller shifts gradually throughout the story and this is the first time I am seeing/enjoying this style of narration from an author.
இதுதான் நான் கேட்கும்/படிக்கும் La Sa Ra வின் முதல் புதினம். இவரின் தமிழ் கையாடல் புதியதாக இருந்தது. இவர் கதை சொல்வதற்காக பயன்படுத்தும் உருவகங்களும் உவமைகளும் ஆச்சிரியம் !!