மற்றவர்களிடம் அன்பைக் காட்டுபவர்கள் வாழ்வில் தோற்றுப்போவதேயில்லை. எதிர்கொள்ளும் இடர்களின் காலமும் குறுகியதே.
முதல் திருமணம் ஒருவகை தோல்வியென்றாலும் அரவிந்தன் மனைவியை எவரிடத்திலும் விட்டுக்கொடுப்பதில்லை.
திருமணம் வாழ்வைப் பற்றி யோசிக்காமல் இதுவரை இருந்த திலோத்தமாவிற்கு அரவிந்தனைப் பார்த்த பிறகு அதில் பிடிப்பு ஏற்பட புது உறவுக்குள் நுழைபவள் சில சங்கடங்களை எதிர் கொண்டாலும் அது தங்களைப் பாதிக்காதபடி சீர்படுத்திக் கொண்டு அரவிிந்தன் மகள் பாவனாவை தன் வாரிசாகவே வளர்த்து ஆளாக்கிவிடுகிறாள்.
உறவுகளைப் பொறுமையாகக் கையாளத் தெரிந்தவனுக்கு மனநிம்மதி அருகிலே இருக்கும் என்பது கதையின் மையமாகிறது.